அவன் இவன் படத்தில் இடம்பெறும் நிர்வாண காட்சியொன்று ரசிகர்களை மிரட்டும் வகையி்ல் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 
மகான்களுக்கு மட்டுமே வருகிற மஹச நிர்வாண ஆசை இப்போது தமிழ் சினிமா நட்சத்திரங்களை தொற்றிக் கொண்டிருக்கிறது.  
நிர்வாணத்தை ரசிக்கும் ரசிகர் கூட்டம் இருப்பதாலோ என்னவோ… அவ்வப்போது வெளியாகும் படங்களில் அட்லீஸ்ட்ஸ் அரை நிர்வாண காட்சியையாவது வலுக்கட்டாயமாக திணித்து விடுகிறார்கள் இயக்குனர்கள். அவன் இவன் படத்திலும் ஒரு நிர்வாண காட்சி இருக்கிறதாம்.
அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் அவன் இவன் படத்தில் பிரபல டைரக்டர் ஜி.எம்.குமார் ஒரு காட்சியில் முழு நிர்வாணமாக நடித்திருக்கிறாராம்.

சுமார் மூன்று நாட்கள் இந்த காட்சியை படமாக்கியிருக்கிறார் பாலா.
அத்தனை நாட்களும் நிர்வாணமாகவே திரிந்தாராம் மனுஷன். 
இந்த படத்தில் யாருக்கு விருது கிடைக்குதோ, இல்லையோ. 
குமாருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று 
கிசுகிசுக்கிறது அவன் இவன் யூனிட்.
அது இந்த மஹா நிர்வாணத்திற்காக என்பதுதான் ஹைலைட்.
படத்தின் டைரக்டர், பாலா என்பதால் அந்த நிர்வாண காட்சியை வலுக்கட்டாயமாக திணித்திருக்க மாட்டார் என நம்புவோம்.