ராணா படத்துக்காக ரஜினிகாந்த்துக்கு ரூ. 24 கோடி சம்பளம் தரபப்ட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பளத்தை ஒரே செக்காக ரஜினிக்கு ஏற்கனவே தந்து விட்டார்களாம்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் ரஜினிகாந்த். இதற்கு முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பும் கூட அவருக்கு உடல் நலப் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் அப்போது இருந்ததை விட இப்போது ரஜினியின் ரசிகர்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கிட்டத்தட்ட உலக நாடுகள் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலும் கூட அத்தனை மாநிலங்களிலும் ஆங்காங்கு ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனைகள், வழிபாடுகள் என மும்முரமாக உள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது ரஜினிதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் சூப்பர் ஸ்டார். அவர் தற்போது நடிக்க ஒப்புக் கொண்டுள்ள ராணா படத்திற்காக அவருக்கு ரூ. 24 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். வழக்கமாக படத்தை முடித்து விட்டு சம்பளம் வாங்கும் ரஜினி இந்த முறை முதலிலேயே அந்த சம்பளத்தை வாங்கி விட்டாராம்.
இப்படத்தின் தயாரி்ப்பாளர்களில் ரஜினியின் மகள் செளந்தர்யாவும் ஒருவர் என்பதால் அந்த வகையிலும் ரஜினிக்கு ஒரு பங்கு வரும் என்கிறார்கள்.
எனவே இந்தியாவிலேயே அதிக அளவில் சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்பதை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார் என்கிறார்கள் திரையுலகில்.
ரஜினி விரைவில் குணமடைந்து வந்த பின்னர் ராணா படப்பிடிப்பு முழு வீச்சில் தொடரும் என்ற நம்பிக்கையில் ராணா படக் குழுவினரும், திரையுலகினரும், ரஜினி ரசிகர்களும் உள்ளனர்