வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Sunday, June 5, 2011

பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,!



திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறிவிட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போல இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஜால்ரா பலிக்காததால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் திரையுலக முக்கியஸ்தர்கள். கடந்த ஐந்தாண்டு ஆட்சிகாலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி ஏராளமான சினிமா விழாக்களில் பங்கேற்று, பாராட்டு மழையில் நனைவார். இதுதவிர முதல்வரை பாராட்டுவதற்காகவே பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா, தமிழ் மகனுக்கு பாராட்டு விழா என எக்கச்சக்க பாராட்டு விழாக்களையும் திரையுலகம் சார்பில் நடத்தி கருணாநிதியை குஷிபடுத்தியே காலத்தை ஓட்டி வந்தனர்.
இப்போது ஆட்சி மாறி விட்டது. காட்சிகளும் மாறத் தொடங்கி விட்டன. முதல்வர் பொறுப்பை கவனிக்காமல் எந்நேரமும் சினிமா விழாக்களில் நேரத்தை கழித்துக் கொண்டிருக்கிறார் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியை காட்டமாக விமர்சித்து வந்த ஜெயலலிதா, முதல்வரானதும் என்ன செய்யப் போகிறார் என்று பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏனென்றால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே தாயே… தமிழே என்று புகழ்பாட ஆரம்பித்து விட்டது திரையுலக ஜால்ரா கூட்டம்.
திமுக ஆட்சியின்போது செல்வாக்குமிக்க ஆளும்கட்சியினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பழிவாங்கப்பட்ட நடிகர் விஜய், தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கினார். தனது ரசிகர்களை அதிமுகவுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் நினைத்தது போலவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. இதனால் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதே‌போல பெப்ஸி அமைப்பினர் புதிய முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்றும் விரும்பி, முதல்வரிடம் தேதி கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில், திரையுலக ஜாலல்ராக்களின் அழைப்பை புறந்தள்ளிய ஜெ., எனக்கு நிறைய மக்கள் பணிகள் இருக்கிறது. சினிமா விழாக்கள் எதுக்கும் வர்ற ஐடியா இல்லை என்று கூறிவிட்டாராம் கறாராக! முதல்வரின் இந்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உரைந்து போயிருக்கிறது திரையுலகம்.


0 comments:

Post a Comment