மஞ்சள் துண்டு மகேசன் கலைஞரின் அருமை புதல்வி கனிமொழியை காப்பாற்ற ஆரிய வக்கீல் ராம் ஜெத்மாலனி வாதாட பழியை “தகத்தகாய கதிரவனான” தலித் போர்வாள் ராஜா பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் .
ஏழை மக்களுக்கு மலிவு விலையில் செல் போன் விற்ற அமைச்சர் ராஜா இன்று கலைஞர் குடும்பத்துக்காக திகார் ஜெயில் கம்பிகளை நிரந்தரமாக எண்ண தயாராகிறார். “ராசா தலித் என்பதாலேயே அவரைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள்” என்று ராசாவின் கைதுக்கு முன்பாக துடித்தெழுந்தார் மஞ்சள் துண்டு. இன்று அவரால் நியமிக்கப்பட்ட “ஆரிய” வக்கீல் ராம் ஜெத்மாலனி இதற்கெல்லாம் முழு காரணம் ராஜா மட்டுமே கனிமொழி இதில் நிரபராதி என வாதாடியுள்ளார்.
ராம் ஜெத்மாலனி பற்றி கொஞ்சம் பார்ப்போம். இது வரை இந்த மனிதர் ஒரு நல்ல கேசில் ஆஜராகி நல்லவர்களுக்காக வாதாடியதில்லை. இவர் ஆஜரான கேஸ் சில சாம்பிள்.
1. ஹர்சத் மேத்தா என்பவன் செய்த பங்குசந்தை மோசடிக்கு ஆதரவாக
2. கேதான் ப்ரேக் என்பவன் செய்த பங்குசந்தை மோசடிக்கு ஆதரவாக
3.நம் பாராளுமன்றத்தை தாக்கிய அப்சல் குரு என்பவனுக்கு ஆதரவாக
4. இந்தியாவையே உலுக்கிய ஜெசிக்கா என்ற பெண்ணை கொலை செய்த மனுஷர்மா என்பவனுக்கு ஆதரவாக
5. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல இந்திரா காந்தியை கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக

ஆகா ராம் ஜெத்மாலனி கனிமொழிக்காக வாதாட போகிறார் என்றவுடன் புரிந்துகொள்ளலாம் குற்றவாளி யார் என்பதை.
இதில் கொடுமை என்னன்னா பாவம் மஞ்சள் துண்டு குடும்பத்துக்காக ஆண்டிமுத்து ராஜாவும், கலைஞர் டிவி இயக்குனர் சரத் ரெட்டியும் பலிகடா ஆக்கபட்டதுதான் . இதை எல்லாம் பார்க்கும்போது வடிவேல் காமெடிதான் ஞாபகம் வருது “சபாஷ் புலிகேசி ராஜா தந்திரங்களை கரைத்து குடித்து இருகிறாயடா”
என்ன கொடுமை சார்…