இதோ அதோ என ஒராண்டுக்குமேல் ஆகிவிட்டது, விஜய்யை சீமான் இயக்கப் போகிறார் என அறிவித்து.

      காவலன் முடித்த பிறகு..., வேலாயுதம் முடிந்த பிறகு...., ஷங்கர் படம் முடிந்த பிறகு... என இழுத்துக் கொண்டே போன விஜய், இப்போதுதான் சீமானிடம் கதையை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.
       இப்போது மீண்டும் அவருக்கு குழப்பம். இந்த குழப்பத்துக்கு விதைபோட்டவர் ஏ ஆர் முருகதாஸ்.இவர் ஒரு கதையைச் சொல்லியுள்ளார் விஜய்க்கு. அந்தக் கதையைவிட, அதைப் படமாக்க அவர் போட்ட ரூ 65 கோடி பட்ஜெட்டும், அதையும் தர தயாராக வந்த பாலிவுட் தயாரிப்பாளரும்தான் விஜய் மனசைக் கெடுத்துவிட்டார்களாம்.முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு சீமான் புராஜக்டை ஆரம்பிக்க முடியுமா என யோசிக்கிறார் விஜய் என்கிறார்கள்.ஆனால் முருகதாஸ் கதையைவிட, மிக உணர்ச்சிப்பூர்வமான, விறுவிறு அதிரடி ஆக்ஷன் கதை சீமானுடையது. விஜய்யின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கைக்கே புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறுகிறார்கள்.
     பெரிய பட்ஜெட்டை நம்பி அகலக் கால் வைப்பதைவிட இப்போது சீமான் படத்தை முடியுங்கள், அதுதான் சரியாக இருக்கும் என்று நலம் விரும்பிகள் ஒருபக்கம் விஜய்க்கு கூறி வருகிறார்களாம்.அதனால்தான் சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய், அடுத்த படம் சீமானுக்கா முருகதாசுக்கா என்று கேட்ட போது, "பார்க்கலாம்" என்று மையமாக சொல்லி வைத்தார்!