'ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்'..சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்ளும் கனிமொழி!2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில், மெழுகுவர்த்தி தயாரிப்புப் பணி நடைபெறுகிறது.கைதிகள் உபயோகமாக நேரத்தை செலவிடும் வகையில் இந்த தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் சிறையிலுள்ள விற்பனை மையத்தின் மூலமாகவே பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன.இந்த மையத்தில்தான் சக கைதிகளிடம் மெழுகுவர்த்தி செய்ய கனிமொழி கற்று வருகிறார்.அதே நேரத்தில் தனது பெரும்பாலான நேரத்தை புத்தகங்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் செலவிட்டு வருகிறார்.