நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் மோதுகின்றன
விஜய் மற்றும் அஜீத்தின் படங்கள். 
எம் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் வேலாயுதம்.
இந்தப் படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.
ரிலீஸுக்குத் தயாராக இருந்தாலும், நல்ல விளம்பரம், மார்க்கெட் உத்திகளைச் செய்த பிறகு வெளியிடத் திட்டம். எனவே ஆகஸ்ட் மாதம் வெளியிடுகிறார்களாம்.இன்னொரு பக்கம் அஜீத்தின் மங்காத்தாவும் ரெடியாகிவிட்டது. இந்தப் படமும் ஆகஸ்ட் ரிலீஸ்தான். தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் தயாரிப்பான இந்தப் படத்தில் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமி ராய் என பெரிய நட்சத்திரப்பட்டாளமே உள்ளது.
ஆனால் இரண்டு படங்களையும் ஒரே நாளில் வெளியிடாமல் இரண்டு வார இடைவெளி கொடுத்து வெளியிடப்போகிறாக்கள்.
ரசிகர்கள் அனாவசியமாக மோதிக் கொள்வதைத் தவிர்க்கவும், நல்ல ஓபனிங்கை ஏற்படுத்தவுமே இந்த ஏற்பாடாம்.