தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விஜய், நடிகை கவுதமி உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் சந்தித்தனர்.
    
இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதாவை, முன்னணி திரைப்பட நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி, மகள்கள் அக்ஷரா ஹாசன், சுப்புலட்சுமி, நடிகர் பிரபு மற்றும் அவரது மனைவி, பிரபுவின் சித்தப்பா மகன் கிரி சண்முகம் மற்றும் அவரது மனைவி, பிரபுவின் சம்பந்தி மதிவாணன் மற்றும் அவரது மனைவி, ராம்குமாரின் மகன் துஷ்யந்த், நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், பழம்பெரும் நடிகைகள் சி.சுகுமாரி, குமாரி சச்சு என்கிற பி.எஸ்.சரஸ்வதி, எஸ்.என்.லட்சுமி, ராஜஸ்ரீ, காஞ்சனா, பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, திரைப்பட தயாரிப்பாளர் ஜெயந்தி ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், ஒளிப்பதிவாளர் பாபு ஆகியோர் சந்தித்து, நல்ல பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதற்கு தங்களின் மகிழ்ச்சி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
அவர்களின் வாழ்த்துக்களை இன்முகத்தோடு பெற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, திரைப்படத் துறையினர் தன்னை நேரில் வந்து சந்தித்து பாராட்டியமைக்கு தனது நன்றியை மகிழ்ச்சிப் பொங்க தெரிவித்துக் கொண்டார், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.