உதடு வரை வந்த அஜீத் முத்தமிடாமல் விலகிச் சென்றதால் பெரும் ஏமாற்றமடைந்தாராம் திரிஷா.


இது நிஜத்தில் அல்ல, சினிமாவுக்கா. அஜீத்தும், திரிஷாவும் இணைந்து நடிக்கும் படம் மங்காத்தா. இது திரிஷாவுக்கு 40வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ஒரே ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களை துள்ள வைத்து வருகிறது. அதேசமயம், படத்தில் இடம் பெறும் ஒரு ரொமான்ஸ் காட்சியும் ரசிகர்களை துடிக்க வைக்குமாம்.
காட்சிப்படி ஒரு சீனில் அஜீத்தும், திரிஷாவும் சற்றே நெருக்கமான முறையில் நடித்துள்ளனர். இதில் அஜீத், திரிஷாவுக்கு உதட்டில் பச்சக்கென ஒரு இச் தருவதாக முதலில் திட்டமிட்டிருந்தனர். இந்தக் காட்சிக்கு திரிஷாவும் ஓ.கே சொல்லியிருந்தார். அஜீத்தும் தயக்கத்திற்குப் பின்னர் சரி என்று கூறியிருந்தார்.
இதையடுத்து காட்சிக்குப் போனார்கள். அஜீத்தும் திட்டமிட்டபடி திரிஷாவின் உதடு வரை வந்தாராம். வந்தவர் உதட்டை டச் பண்ணாமல் அப்படி ஒரு யூ டர்ன் போட்டு விட்டு வந்த வழியே திரும்ப போய் விட்டாராம்.
இதை இயக்குநர், திரிஷா உள்பட யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்தக் காட்சிக்குத் தேவையான எபக்ட் கிடைத்து விட்டதாம். லிப் டூ லிப் கொடுப்பதில் அஜீத்துக்கு நிறைய தயக்கம் இருந்ததால்தான் இந்த அளவோடு நிறுத்திக் கொண்டு விட்டாராம் தல.
உதடு கிடைத்தால் குண்டக்க மண்டக்க விளையாட எத்தனையோ ஹீரோக்கள் காத்திருக்கும் நிலையில் படு டீசன்ட்டாக நடந்து கொண்ட அஜீத்தை பாராட்டலாம்தானே.
ஆனால் திரிஷாவுக்குத்தான் நிறைய ஏமாற்றமாம். அடடா, தலைக்கு வந்தது இப்படி தலைப்பாகையோடு போய் விட்டதே என்று லைட்டாக அப்செட் ஆகி விட்டாராம்.
விண்ணைத் தாண்டி வருவாயாவில் சிம்புவின் உதடுடன் முத்த மோதல் பூண்ட திரிஷாவுக்கு ஏமாற்றம் இருக்கத்தான் செய்யும்!