பில்லா - 2 படத்தில் நடிக்கவிருக்கும் அஜித் அதில் 20 வயது இளைஞனாக வருகிறார். அதற்காக எடையைக் குறைக்கும் வேலையில் இறங்கியுள்ளார் அஜீத்.


அஜித் குமாரின் 50வது படமான மங்கத்தா வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்திற்காக அஜித் கடுமையாக உழைத்துள்ளார். அடுத்த படமான பில்லா 2 படப்பிடிப்பை மங்காத்தா வெளியீட்டிற்கு முன்பே துவங்குமாறு இயக்குநர் சக்ரியை அஜித் கேட்டுக் கொண்டுள்ளாராம். மங்காத்தாவில் வெள்ளி நரையுடன் வரும் அஜித் பில்லா 2-ல் 20 வயது இளைஞனாக வருகிறாராம். அதற்காக உடல் எடையைக் குறைக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார். முகச்சுருக்கங்களை நீக்க பிரத்யேக பயிற்சி மேற்கொண்டுள்ளார். அஜித்தை இளைஞனாக சிக்கென்று காட்ட ஹாலிவுட்டில் இருந்து மேக்கப்மேன் வரவிருக்கிறார். அவர் அஜித்துடன் சென்னையில் தங்கி தேவையான டிப்ஸ்கள் கொடுப்பார். பில்லா 2 படத்தின் முதல் போட்டோ ஷூட் கடந்த வாரம் முடிந்துள்ளது. பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட்ராம் தான் போட்டோ ஷூட் நடத்தியவர்.