நடிகைகள் சம்பள பட்டியல்:

 அசின், அனுஷ்கா, ஜெனிலியாவுக்கு ரூ.1 கோடி;

 தமன்னா ரூ.80 லட்சம், 

ஹன்சிகா ரூ.30 லட்சம்நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. 
தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒரே விதமாக சம்பளத்தை நிர்ணயித்துள்ளனர்.
அதிக சம்பளம் வாங்குவதில் இலியானா முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ரூ.1 1/2 கோடி வாங்குகிறாராம். இலியானா தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு இணையாக சம்பளம் பெறுவோர் தமிழ், தெலுங்கு திரையுலகில் இல்லை என்கின்றனர்.

அனுஷ்கா ரூ.1 கோடி வாங்குகிறார். இவர் அருந்ததி படம் மூலம் தமிழுக்கு வந்தவர் வேட்டைக்காரன், சிங்கம், வானம் படங்களில் நடித்துள்ளார். தற்போது மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.அசின் ரூ.1 கோடி வாங்குகிறார். 
இதுபோல் ஜெனிலியாவும் ரூ.1 கோடி பெறுகிறார். அசின் கடைசியாக காவலன் தமிழ் படத்தில் நடித்தார். தற்போது ஹவுஸ்புல்-2 மற்றும் 2 ஸ்டேட்ஸ் ஆகிய இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

ஜெனிலியா வேலாயுதம் தமிழ் படத்தில் நடிக்கிறார். தமன்னா ரூ.80 லட்சம் வாங்குகிறார். இவர் தமிழில் கடைசியாக நடித்த வேங்கை படம் ரிலீசுக்கு தயாராகிறது.மேலும் மூன்று தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளன.

ஹன்சிகா மோட்வானி மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இரண்டாவதாக எங்கேயும் காதல் படம் தற்போது ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் ஜோடியாக வேலாயுதம் படத்தில் தற்போது நடிக்கிறார். இவரது சம்பளம் ரூ.30 லட்சத்தை தாண்டி உள்ளதாம். டாப்சியும் இவருக்கு இணையாக சம்பளம் வாங்குகிறாராம். காஜல் அகர்வால் தெலுங்கில் மகதீரா படம் ஹிட்டானதும் சம்பளத்தை உயர்த்தி விட்டார்.