Tuesday, June 28, 2011


யாராவது தன்னை எதிர்த்தால் அவர்களை மன்னித்து தனது ஆட்டு மந்தையில் இன்னொரு ஆடாக சேர்த்துக் கொள்வது ரஜினிகாந்தின் ஏசு ராஜா ஃபார்முலா.
முன்பு மனோரமா ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று ரஜினியை மேடைகளில் தாறுமாறாக விமர்சித்தார். வடிவேலு விஜயகாந்தை விமர்சித்ததைவிட மோசம். தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. மனோரமாவை யாரும் படங்களில் ஒப்பந்தம் செய்யவில்லை. ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த மனோரமா நடித்த விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. ஒரே இரவில் யாருடைய நிர்ப்பந்தமும் இன்றி திரையுலக ஆனாதையாக்கப்பட்டார் மனோரமா.
பிறகு ரஜினி தானாக முன் வந்து மனோரமாவுக்கு தனது படத்தில் வாய்ப்பு கொடுத்தார். ரஜினியின் புகழ் வானை முட்டியது.

இதேபோல் மன்சூரலிகான் அவரை விமர்சித்த போது படையப்பாவில் வாய்ப்பு என்ற பெயரில் ஒரு காட்சியில் நடிக்க அனுமதிக்கப்பட்டார். படையப்பா பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்கும் கேரக்டர்.
இந்த மன்னிப்பு ட்ரிட்மெண்டில் சமீபத்தில் அடிபடும் பெயர் வடிவேலு. ராணாவில் வடிவேலுதான் காமெடி என்று தீர்மானமான பிறகு வடிவேலுவின் ஓவர் பேச்சால் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இது பற்றி நிருபர்கள் கேட்டபோது ராணாவாவது கானாவாவது என தெனாவட்டாக பதிலளித்தார் வடிவேலு.
அன்று மனோரமாவுக்கு ஏற்பட்ட கதிதான் இன்று வடிவேலுக்கு. சீண்டுவார் யாருமில்லை. வழக்கம் போல தனது மன்னிப்பு ஃபார்முலாப்படி ராணாவில் மீண்டும் வடிவேலுவை சேர்த்துக் கொள்ளப் போகிறாராம் ரஜினி. அய்யா தெரியாம பண்ணிட்டேன்.. உங்க முன்னாடி எல்லாம் நிற்க முடியுமா என்று வடிவேலு கதறும் காட்சி ராணாவில் இடம் பிடித்தால் ஆச்சரியப்படாதீர்கள்.

Posted on 6:18 PM by சட்னி

No comments


ர‌‌ஜினி, கமலுக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு இருந்தது. ஆமாம், இருந்தது. இப்போது அந்த இடத்தில் சூர்யா.


விஜ‌ய்யின் ஆறு படங்கள் அடுத்தடுத்து சுமார் மதிப்பெண் வாங்கியதும், சூர்யாவின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதும்தான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


வேலாயுதம் படத்துக்கு விஜய் 13 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. மாற்றான் படத்துக்கு சூர்யாவுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் பதினைந்து கோடிகளாம். படம் அறுபது கோடிக்கு மேல் விலை போகும் என்று இப்போதே கணித்திருக்கிறார்கள்.
விஜய்யின் வேலாயுதமும், நண்பனும் வெற்றி பெற்றால் சூர்யாவை விஜய் எளிதாக முந்திவிடுவார் என்பதும் முக்கியமானது.

Posted on 6:14 PM by சட்னி

1 comment

Sunday, June 26, 2011


இதோ அதோ என ஒராண்டுக்குமேல் ஆகிவிட்டது, விஜய்யை சீமான் இயக்கப் போகிறார் என அறிவித்து.

      காவலன் முடித்த பிறகு..., வேலாயுதம் முடிந்த பிறகு...., ஷங்கர் படம் முடிந்த பிறகு... என இழுத்துக் கொண்டே போன விஜய், இப்போதுதான் சீமானிடம் கதையை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.
       இப்போது மீண்டும் அவருக்கு குழப்பம். இந்த குழப்பத்துக்கு விதைபோட்டவர் ஏ ஆர் முருகதாஸ்.இவர் ஒரு கதையைச் சொல்லியுள்ளார் விஜய்க்கு. அந்தக் கதையைவிட, அதைப் படமாக்க அவர் போட்ட ரூ 65 கோடி பட்ஜெட்டும், அதையும் தர தயாராக வந்த பாலிவுட் தயாரிப்பாளரும்தான் விஜய் மனசைக் கெடுத்துவிட்டார்களாம்.முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு சீமான் புராஜக்டை ஆரம்பிக்க முடியுமா என யோசிக்கிறார் விஜய் என்கிறார்கள்.ஆனால் முருகதாஸ் கதையைவிட, மிக உணர்ச்சிப்பூர்வமான, விறுவிறு அதிரடி ஆக்ஷன் கதை சீமானுடையது. விஜய்யின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கைக்கே புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறுகிறார்கள்.
     பெரிய பட்ஜெட்டை நம்பி அகலக் கால் வைப்பதைவிட இப்போது சீமான் படத்தை முடியுங்கள், அதுதான் சரியாக இருக்கும் என்று நலம் விரும்பிகள் ஒருபக்கம் விஜய்க்கு கூறி வருகிறார்களாம்.அதனால்தான் சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய், அடுத்த படம் சீமானுக்கா முருகதாசுக்கா என்று கேட்ட போது, "பார்க்கலாம்" என்று மையமாக சொல்லி வைத்தார்!


Posted on 8:42 AM by சட்னி

No comments

2010ம் ஆண்டில் இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்து 1.53 லட்சமாக உயர்ந்துள்ளது.


 இதன்மூலம் உலகளவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பில், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 9 சதவீதம் வளர்ச்சியடைந்தது. பங்குகளின் சந்தை மதிப்பு 24 சதவீதம் அதிகரித்து 1,63,180 கோடி டாலராக உயர்ந்தது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாகும்.

 இதனால் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் 21 சதவீதம் அதிகரித்து, 1,53,000 ஆக உயர்ந்தது. இவர்களது மொத்த சொத்து மதிப்பு ரூ.6.89 லட்சம் கோடியாகும். இதன்மூலம் அதிக கோடீஸ்வரர்களை கொண்டுள்ள நாடுகளில் இந்தியா 12வது இடத்தை பிடித்துள்ளது.
 31 லட்சம் கோடீஸ்வரர்களைக் கொண்டு அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.  அமெரிக்காவில் 2010ம் ஆண்டில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 8.3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. 17 லட்சம் கோடீஸ்வரர்களைக் கொண்டு ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. 5.35 லட்சம் கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ள சீனா நான்காவது இடத்தில் உள்ளது.

Posted on 8:38 AM by சட்னி

No comments

Saturday, June 25, 2011

திருமணத்துக்கு முன் எப்படியோ? திருமணத்துக்குப் பின்?? நயன்தாரா
 பிரபுதேவாவுடனான தனது திருமண வாழ்வை தொடர்வதற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் நயன்தாரா.
சட்ட முறைப்படி பிரபுதேவாவுக்கு விவாகரத்து கிடைப்பதற்காகதான் இந்த காத்திருப்பு.
திருமணத்துக்கு முன் எப்படியோ? திருமணத்துக்குப் பின் முழுமையான குடும்பத் தலைவியாக இருக்க வேண்டும் என நினைக்கிறாராம் நயன்தாரா.
முதல் வேலையாக நடிப்புக்கு முழுக்குப் போடப் போகிறார் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.
தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த நயன்தாரா புதிய வாய்ப்புகள் எதையும் ஒத்துக் கொள்வதில்லை.
தமிழில் இவருக்கு படங்களில்லை. தெலுங்கில் ஒரேயொரு படம், ஸ்ரீராம ஜெயம். இதில் சீதாவாக நடிக்கிறார்.
தனது இத்தனை நாள் திறமையையும் இந்தப் படத்தில் காட்டியிருக்கிறாராம்.
இந்தப் படத்துடன் தனது நடிப்பு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறாராம் நயன்தாரா.

Posted on 8:50 AM by சட்னி

No comments


திமுகவின் எதி‌ி என்ற கிளீன் இமே‌ஜ் இருந்தாலும் உடன்பிறப்புகளின் ஆதரவு அரசியலில் இறங்கும் போது இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது விஜய். பிறகென்ன.. வரவிருக்கிற வேலாயுதத்தில் உடன்பிறப்பையும் ஒருவ‌ரிசேர்த்திருக்கிறார்.

காவலன் படத்தில் எப்படி அரசியல் துளிகூட இல்லையோ அதற்கு அப்படியே உல்டாவாக வேலாயுதத்தில் அரசியல் நெடியும், வெடியும் அதிகம். அதிலும் சொன்னால் பு‌ரியாது சொல்லுக்குள் அடங்காது பாடல் வ‌ரிகளில் அரசியல் களைகட்டுகிறது.

விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் இந்தப் பாடலில் ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன்பிறப்பே என்று அதிமுக, திமுக என இரண்டு தொண்டர்களுக்குமே தூண்டில் போடுகிறார் விஜய். திமுக தொண்டனை பகைத்து கலெக்சனில் கல் எறிவானேன் என்றும் விஜய் நினைத்திருக்கலாம். வேலாயுதம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி என்றே சொல்லலாம்.

Posted on 7:54 AM by சட்னி

No comments

Friday, June 24, 2011


பின்லேடனின் உதவியாளர்களிடம் இருந்து அமெரிக்க படையினர் மீட்டு சென்ற செல்போன்கள் மூலம் அமெரிக்க அதிகாரிகளுக்கு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. 


அல்கய்தா அமைப்பின் தலைவர் பின்லேடன், அவரது உதவியாளர்கள் இருவர் கடந்த மே மாதம் 2ம் தேதி அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்லேடனின் உதவியாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களை அமெரிக்க அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். பாகிஸ்தானில் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ) உதவியுடன் செயல்பட்டு வந்த ஹர்கத்அல்முஜாகிதீன் என்ற அமைப்பினருடன் பின்லேடன் உதவியாளர்கள் தொடர்பில் இருந்துள்ளனர். 
பின்லேடன் பாகிஸ்தானில் இருந்து செயல்பட இந்த அமைப்பினர்
உதவியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். இது குறித்த தீவிர விசாரணையில் அமெரிக்க அதிகாரிகள் இறங்கியுள்ளனர்

Posted on 6:57 PM by சட்னி

No comments

செலவு இம்புட்டு தான்'.. ஜெ ரூ.9 லட்சம், கருணாநிதி ரூ.4.5!!!தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

                    சட்டசபைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.16 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா, ரூ.9.5லட்சமும்,

திமுக தலைவர் கருணாநிதி ரூ.4.47 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கணக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கணக்கு சமர்பித்துள்ளார்.

ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள கணக்கு விவரம்:
பொதுக் கூட்டங்களுக்காக-ரூ.20,650
துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள், பிரச்சார வீடியோ-ஆடியோ செலவு-ரூ.14,170டிவி,
 ரேடியோ, பத்திரிக்கை விளம்பரம்-ரூ.58,300
வாகன செலவு-ரூ.65,700
அலங்காரங்கள் மற்றும் பேனர்கள்-ரூ.32,300

முன்னாள் முதல்வர் கருணாநிதி தேர்தலுக்காக ரூ.4,47,615 மட்டுமே செலவு செய்துள்ளதாகவும், இதில் வாகனங்களுக்கு மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் வெறும் ரூ 3.32 லட்சம் மட்டுமே தேர்தலுக்காக செலவிட்டதாகவும், இதில் பொதுக் கூட்டங்களுக்காக ரூ.66,700ம் கட்அவுட்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகளுக்காக வெறும் ரூ.980ம் செலவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலுக்காக ரூ.7.97 லட்சம் செலவு செய்துள்ளதாகவும், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ரூ.4.04 லட்சமும் செலவு செய்துள்ளதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தனக்கு தேர்தல் செலவுக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைமை ரூ.10 லட்சமும், அடையாறைச் சேர்ந்த ஒரு தனியார் கிரானைட் நிறுவனம் ரூ.5 லட்சமும் தந்ததாகவும் தங்கபாலு கூறியுள்ளார்.

விஜய்காந்த் தனது மொத்த செலவில் பாதியை 'இதர செலவுகள்' என்ற வகையில் கணக்குக் காட்டியுள்ளார்.

Posted on 4:26 PM by சட்னி

No commentsபில்லா - 2 படத்தில் நடிக்கவிருக்கும் அஜித் அதில் 20 வயது இளைஞனாக வருகிறார். அதற்காக எடையைக் குறைக்கும் வேலையில் இறங்கியுள்ளார் அஜீத்.


அஜித் குமாரின் 50வது படமான மங்கத்தா வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்திற்காக அஜித் கடுமையாக உழைத்துள்ளார். அடுத்த படமான பில்லா 2 படப்பிடிப்பை மங்காத்தா வெளியீட்டிற்கு முன்பே துவங்குமாறு இயக்குநர் சக்ரியை அஜித் கேட்டுக் கொண்டுள்ளாராம். மங்காத்தாவில் வெள்ளி நரையுடன் வரும் அஜித் பில்லா 2-ல் 20 வயது இளைஞனாக வருகிறாராம். அதற்காக உடல் எடையைக் குறைக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார். முகச்சுருக்கங்களை நீக்க பிரத்யேக பயிற்சி மேற்கொண்டுள்ளார். அஜித்தை இளைஞனாக சிக்கென்று காட்ட ஹாலிவுட்டில் இருந்து மேக்கப்மேன் வரவிருக்கிறார். அவர் அஜித்துடன் சென்னையில் தங்கி தேவையான டிப்ஸ்கள் கொடுப்பார். பில்லா 2 படத்தின் முதல் போட்டோ ஷூட் கடந்த வாரம் முடிந்துள்ளது. பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட்ராம் தான் போட்டோ ஷூட் நடத்தியவர்.

Posted on 8:54 AM by சட்னி

No comments


'ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்'..சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்ளும் கனிமொழி!2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில், மெழுகுவர்த்தி தயாரிப்புப் பணி நடைபெறுகிறது.கைதிகள் உபயோகமாக நேரத்தை செலவிடும் வகையில் இந்த தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் சிறையிலுள்ள விற்பனை மையத்தின் மூலமாகவே பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன.இந்த மையத்தில்தான் சக கைதிகளிடம் மெழுகுவர்த்தி செய்ய கனிமொழி கற்று வருகிறார்.அதே நேரத்தில் தனது பெரும்பாலான நேரத்தை புத்தகங்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் செலவிட்டு வருகிறார்.

Posted on 8:00 AM by சட்னி

No comments

Wednesday, June 22, 2011

Aishwarya Rai

தனது மருமகள் ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் தரித்துள்ளதாக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் குறிப்பிட்டுள்ளார்.

37 வயதாகும் ஐஸ்வர்யா ராய் முன்னாள் உலக அழகியாவார். பாலிவுட் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமான முகம் ஐஸ்வர்யாவுடையது. 2007ம் ஆண்டு அவருக்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் இருவரும் பெற்றோராகும் நாளை அத்தனை பேரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இதுதொடர்பாக பல்வேறு விதமான தகவல்களும் வந்தவண்ணம் இருந்தன.இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் கர்ப்பமடைந்திருப்பதாக அவருடைய மாமனார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமிதாப் எழுதுகையில், செய்தி, செய்தி, செய்தி! நான் தாத்தாவாகப் போகிறேன். ஐஸ்வர்யா ராய் தாய்மயடைந்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார் அமிதாப்.

மேலும், இந்த செய்தியை வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் வாழ்த்துகள் தெரிவித்து 2843 டி்விட்டர் செய்திகள் வந்து குவிந்து விட்டதாகவும், இந்த வாழ்த்துகள், ஆசிர்வாதங்களைப் பார்த்து தான் நெகிழ்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார் அமிதாப்.

எப்போது குழந்தை பிறக்கும் என்பது குறித்த செய்தியையும், ஐஸ்வர்யாவுக்கு இப்போது எத்தனையாவது மாதம் என்பதையும் அமிதாப் கூறவில்லை.

ஐஸ்வர்யாவைப் போல அழகான குழந்தை பிறக்க வாழ்த்துவோம்.

Posted on 11:24 AM by சட்னி

1 comment


நடிகைகள் சம்பள பட்டியல்:

 அசின், அனுஷ்கா, ஜெனிலியாவுக்கு ரூ.1 கோடி;

 தமன்னா ரூ.80 லட்சம், 

ஹன்சிகா ரூ.30 லட்சம்நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. 
தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒரே விதமாக சம்பளத்தை நிர்ணயித்துள்ளனர்.
அதிக சம்பளம் வாங்குவதில் இலியானா முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ரூ.1 1/2 கோடி வாங்குகிறாராம். இலியானா தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு இணையாக சம்பளம் பெறுவோர் தமிழ், தெலுங்கு திரையுலகில் இல்லை என்கின்றனர்.

அனுஷ்கா ரூ.1 கோடி வாங்குகிறார். இவர் அருந்ததி படம் மூலம் தமிழுக்கு வந்தவர் வேட்டைக்காரன், சிங்கம், வானம் படங்களில் நடித்துள்ளார். தற்போது மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.அசின் ரூ.1 கோடி வாங்குகிறார். 
இதுபோல் ஜெனிலியாவும் ரூ.1 கோடி பெறுகிறார். அசின் கடைசியாக காவலன் தமிழ் படத்தில் நடித்தார். தற்போது ஹவுஸ்புல்-2 மற்றும் 2 ஸ்டேட்ஸ் ஆகிய இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

ஜெனிலியா வேலாயுதம் தமிழ் படத்தில் நடிக்கிறார். தமன்னா ரூ.80 லட்சம் வாங்குகிறார். இவர் தமிழில் கடைசியாக நடித்த வேங்கை படம் ரிலீசுக்கு தயாராகிறது.மேலும் மூன்று தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளன.

ஹன்சிகா மோட்வானி மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இரண்டாவதாக எங்கேயும் காதல் படம் தற்போது ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் ஜோடியாக வேலாயுதம் படத்தில் தற்போது நடிக்கிறார். இவரது சம்பளம் ரூ.30 லட்சத்தை தாண்டி உள்ளதாம். டாப்சியும் இவருக்கு இணையாக சம்பளம் வாங்குகிறாராம். காஜல் அகர்வால் தெலுங்கில் மகதீரா படம் ஹிட்டானதும் சம்பளத்தை உயர்த்தி விட்டார்.

Posted on 8:32 AM by சட்னி

No comments


கிளாமர் காட்டி ஒருபோதும் நடிக்க மாட்டேன் – தமன்னா

எதற்கும் ஒரு எல்லை உண்டு. கிளாமருக்கும் எல்லை உண்டு. அதைத் தாண்டி நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்கிறார் தமன்னா.
சில வாரங்களுக்கு முன்பு வரை தமன்னாதான் தமிழ் சினிமாவின் ஒய்யார நாயகியாக இருந்தார். அத்தனை ஹீரோக்களும் தமன்னாவுடன் ஜோடி போட அலை மோதிய காலம் அது.
ஆனால் இன்று தமன்னாவை பூதக் கண்ணாடி வைத்துத் தேட வேண்டியுள்ளது. காரணம், இப்போது அவர் தமிழில் அவ்வளவாக நடிப்பதில்லை. மாறாக தெலுங்கில் பிசியாகி விட்டார்.
இருப்பினும் தற்போது ஹரி இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக வேங்கை படத்தில் நடித்து வருகிறார் தமன்னா.
இதில் சாதாரண கல்லூரி மாணவியாக மகா எளிமையாக நடிக்கிறாராம் தமன்னா. ஏன் கிளாமர் பக்கம் போகவில்லையா என்று கேட்டால், எனக்கு கிளாமர் நடிப்பு, சாதா நடிப்பு என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. நல்ல கதையா என்றுதான் பார்ப்பேன். கதை பிடித்திருந்தால் நடிப்பேன்.அது கிளாமருடன் கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும்.
அதேசமயம், கிளாமர் காட்டுவதிலும் ஒரு எல்லை உண்டு. எல்லை கடந்தால் அது விரசமாகி விடும். அதற்கு எனது ஓட்டு எப்போதுமே கிடையாது. அதற்காக கிளாமரே கூடாது என்றெல்லாம் இல்லை.
இப்போது கூட பத்ரிநாத் என்ற படத்தில் கிளாமராகத்தான் நடித்திருக்கிறேன். அதேபோல 100பர்சன்ட் லவ் என்ற படத்திலும் கிளாமர் காட்டியுள்ளேன். எல்லாம் எல்லை கடக்காத அழகான கிளாமர்தான் என்று நீண்ட விளக்கமளித்து பெருமூச்சு விட்டார்.
சரி தமிழ் என்னாச்சு என்று கேட்டால், மறுபடியும் நீளமாக பேசினார் தமன்னா. அப்படியெல்லாம் கிடையாது. நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதை எனக்குப் பிடித்தாற் போல இல்லாததால் ஒப்புக் கொள்ளவில்லை. மற்றபடி தமிழை நான் புறக்கணிக்கவில்லை. நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் மறுபடியும் நடிப்பேன் என்று கூறி நிறுத்தினார்.
கார்த்தி கல்யாணத்திற்குப் போவீங்களா தமன்னா…?

Posted on 8:18 AM by சட்னி

No comments

Tuesday, June 21, 2011

காலேஜ் விழாக்களில் ஃபிகர்களின் முகங்களிலும் ,உடம்பிலும் தங்கி விடும் ஜிகினாக்கள் அவர்களை தேவதைகள் ஆக்குகின்றன#ஜிகிடி


பெண்கள் இடையில் ஒட்டியாணம் அணிவது நாம் ஒட்டியாணத்தை ரசிக்க அல்ல,அந்த சாக்கில் கூச்சம் இல்லாமல் அவர்கள் இடையை ரசிக்க#ஜிகிடி


கலகலப்பாக சிரித்துப்பேசும் பெண்ணை விட அமைதியாக இருக்கும் ஃபிகர் தான் அட்ராக்டிவ்#ஜிகிடி
சைட் அடிக்கும் ஃபிகர் மாடர்ன் கேர்ளாகவும், தாலி கட்டும் ஃபிகர் குடும்பப்பாங்காக சேலை கட்டியும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஆண்கள் மனசு#ஜெண்ட்ஸாலஜி

திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகி விட்டு திருமணத்துக்கு மறுப்பதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்#செட்டில்மெண்ட் எவ்வளவு வேணும்?சீமான் 3 வருடங்களாக பழகி ஏமாற்றி விட்டார் என நடிகை 4 பக்கங்கள் புகார் கடிதம்#அடச்சே,வெறும் 4 தடவை தான் ஏமாத்துனாரா?


நான் ஒரே ஒரு முறை தான் அந்த நடிகையை சந்தித்தேன் -சீமான்#ஓஹோ ஒரு தடவை சந்திச்ச பின் 3 வருஷம் பிரியாமயே இருந்தீங்களா?


ஜெ ஆட்சிக்கு வந்ததும் திருட்டு விசிடி கடைகள் மூடப்பட்டு விட்டன - கலைப்புலி ஜி.சேகரன்#அண்ணன் செம ஜால்ராவா இருக்காரே..எந்த கச்சேரிலண்ணே?


 தனது வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க தைரியம் உள்ள டைரக்டர் யாராவது இருந்தா என்கிட்ட வாங்க-.நடிகை சோனா#நீளப்படமா இருந்தா ம்ஹூம்,நீலப்படம்னா ஓஹோ


இடையில் செருகும் சேலைக்கொசுவத்துக்கான சேஃப்டி பின்னில் கூட டிசைண்டு பின்னாக செலக்ட் பண்ணுவது ஹை க்ளாஸ் ஃபிகரின் நுட்பமான மெனக்கெடல்#ஜிகிடி


சீமான் பற்றிய ட்வீட்கள் வெறும் காமெடிக்கே.. அவர் தப்பு செஞ்சாரா? இல்லையா? என்பது பற்றி எனக்கு தெரியாது.. பொங்கிப்பாயக்காத்திருக்கும் சீமான் ஆதரவாளர்களுக்கு சிரமம் தராமல் இங்கேயே அட்வான்ஸ் மன்னிப்பு கேட்கப்படுறது.. இப்படிக்கு தப்பு செய்யும்போதே பாவ மன்னிப்பு கேட்டு தப்பித்துக்கொள்வோர் சங்கம்...

Posted on 9:01 AM by சட்னி

No comments

தமிழ், தெலுங்கு சினிமாவையும் நடிகர் நடிகைகளையும் அவமதிக்கும் விதத்தில் பேட்டி அளித்த நடிகை காஜல் அகர்வால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், என ஒட்டுமொத்த திரையுலகமும் கொந்தளித்துள்ளது.

ஏன்.... அப்படி என்ன பண்ணார் காஜல்?

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமா மூலம்தான் ஒரு நடிகையாக அடையாளம் காட்டப்பட்டார் வட இந்தியப் பெண்ணான காஜல்.

ஆனால், சமீபத்தில் ஒரு பாலிவுட் சினிமா நிகழ்ச்சியில் பேசிய அவர், "என்னை தமிழ் அல்லது தெலுங்கு நடிகை என்று சொல்ல வேண்டாம். அதை நான் விரும்பவில்லை. நான் வட இந்தியப் பெண் என்பதுதான் எனக்குப் பெருமை", என்றார்.

அவரது இந்தப் பேட்டி வட இந்திய சேனல்களில் ஒளிபரப்பானது. இதைப் பார்த்து டென்ஷனாகிவிட்டார்கள் தென்னிந்திய நடிகர் நடிகைகள். இன ரீதியான அவமானமாக இதை அவர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக தெலுங்கு திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள், காஜல் அகர்வால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

"இந்தியில் சீண்டுவாரில்லை என்பதால்தானே, தமிழ் அல்லது தெலுங்குக்கு வந்தோம். இங்கே வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதையெல்லாம் யோசிக்கக் கூட மறுக்கிறார்கள் காஜல் அகர்வாலைப் போன்ற சிலர். காஜல் பேச்சு அநாகரீகமானது. தவறானது. இந்த ரோஷமும் உணர்வும் உள்ள அவர் எதற்கு தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிக்க வேண்டும்", என்று பொரிந்து தள்ளியுள்ளார் சக நடிகை ஒருவர்.

பதிலுக்கு பதில்...

இயக்குநர் ஸ்ரீதர் ரெட்டி கூறுகையில், "இரண்டு வாரத்துக்கு முன் ஹைதராபாதுக்கு வந்த காஜல் அகர்வால், இந்த ஊர் பிரியாணி, முத்துக்கள், ரசிகர்கள் எல்லாரையும் பிடிக்கும். ஐ லவ் ஹைதராபாத் என்றார். அடுத்த வாரம் சென்னையில் இருந்தார். அங்கே, ஒரு படத்துக்கு ஒப்பந்தமான அவர், ஐ லவ் சென்னை. இந்த ஊர் மாதிரி எதுவும் இல்லை, என்றெல்லாம் பேட்டியளித்தார். இது அவரது தொழில் நிர்ப்பந்தம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதேபோல ஐ லவ் மும்பை என்று சொல்லியிருக்கலாம்.

அதைவிட்டுவிட்டு, 'என்னை தென்னிந்திய நடிகை என்று சொல்வதில் பெருமையில்லை' என்று அவர் கூறியிருப்பது, அநாகரீகமானது. நம்மை அவமானப்படுத்தும் செயல். இதைவிட பெரிய அவமானத்தை அவர் பதிலுக்கு பெற வேண்டி வரும். நாங்களும் அவரை அப்படியே நடத்துவோம்," என்றார்.

பிரபல தமிழ் நடிகர் ஒருவர் கூறுகையில், "காஜல் தனது இன வெறியைக் காட்டியுள்ளார். சினிமாவுக்கு இது நல்லதல்ல. அவர் இங்கே நடிப்பது யாருக்குமே நல்லதல்ல. காஜலுக்கு வாய்ப்பு மறுப்போம்," என்றார்.

Posted on 8:27 AM by சட்னி

No comments

Monday, June 20, 2011


சீமான் பரபரப்பு பேச்சு!!


சீமான் சீரியஸாக பேசி காமெடி.....


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம் என்று டைரக்டரும், நாம் தமிழர் கட்சித்தலைவருமான சீமான் சீரியஸாக பேசி காமெடி செய்துள்ளார். பெப்ஸி விஜயன் மகன் சபரீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் மார்க்கண்டேயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் விஜய் மற்றும் சல்மான்கான், டைரக்டர் சீமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விஜயலட்சுமி விவகாரத்தில் சிக்கியிருக்கும் டைரக்டர் சீமான் பேசுவதற்காக மைக்கை பிடித்ததும், விழாவுக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் சீரியஸாக கேட்க ஆரம்பித்த‌னர். ஆனால் சீமானோ காமெடியாக பேசினார். அதிலும் நடிகர் விஜய் பற்றிய பேசிய பேச்சை கேட்டதும் அரங்கத்தினுள் ஒரே கிச்சு கிச்சு. சீமான் பேசும்போது, தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே வழி வகுத்தது, என்றார்.
தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக பிரச்சாரம் செய்ய தயங்கி, தனது அப்பாவை தேர்தல் களத்திற்கு அனுப்பி வைத்தவர் விஜய். அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் அறிக்கை தர மாட்டார்; பேட்டி கொடுக்க மாட்டார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே இரு மாதங்களுக்கு முன்பு பலமுறை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதேப்போலவே விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததே தவிர விஜய் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கக் கூட மறுத்துவிட்ட விஜய், ஜெயித்த பிறகு சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை இப்படியிருக்க… டைரக்டர் சீமானோ… ஆட்சி மாற்றத்திற்கு விஜய்தான் காரணம் என்று பேசியிருப்பது… அதுவும் ரொம்பவே சீரியஸாக பேசியிருப்பது சரியா? தவறா? என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.

Posted on 1:29 PM by சட்னி

5 comments

asa

Blog Archive

There was an error in this gadget