அனுஷ்கா சமீபத்தில் வெளிப்புற படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்க சென்றார். தங்கச் சிலைபோல தகதகத்த அனுஷ்காவிடம் ஆட்டோகிராப் வாங்க ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடி விட்டனர். ஆட்டோகிராப் கேட்டு அவரை ‌நெருங்கிய ரசிகர்கள் சிலர் கதகதப்புக்கா அனுஷ்காவை உரசியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அனுஷ்கா, வாய்க்கு வந்தபடி ரசிகர்களை திட்டித் தீர்த்து விட்டாராம்.

இதையடுத்து அங்கிருந்த ரசிகர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கொண்டு அனுஷ்காவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் தெரியாமல் இடித்த ரசிகரை இப்படி திட்டியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், என்று அவர்கள் கூறியதுடன், மன்னிப்பு கேட்காவிட்டால் இங்கு படப்பிடிப்பு நடத்த முடியாது, என்று கூச்சல் போட ஆரம்பித்தனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அனுஷ்கா சம்பந்தப்பட்ட ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.