போடா போடி, வேட்டை மன்னன் ஆகிய படங்களை அடுத்து சிம்பு ஒப்பந்தம் ஆகியிருக்கும் படம் ஓஸ்தி. ரிச்சா நாயகியாக நடிக்க தரணி இயக்க இருக்கிறார். ஒஸ்தி இந்தியில் வசூல் சாதனை படைத்த டபாங் படத்தின் ரீமேக் ஆகும். 

டபாங் படத்தில் நாயகனாக நடித்த சல்மான்கானை சந்தித்து டிப்ஸ் கேட்க நினைத்தார் சிம்பு. ஆனால் தான் ஒப்புக் கொண்ட படங்களுக்கு வரிசையாக தேதிகளை ஒதுக்கி விட்டதால் சந்திக்க நேரமில்லை என்று கூறி விட்டாராம் சல்மான்கான். 

அதுமட்டுமல்லாது தனது வெற்றியின் ரகசியத்தை யாருக்கும் சொல்ல மாட்டாராம் சல்மான். வேட்டை மன்னன், போடா போடி படங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப் பட்டவுடன் ஜிம்மிற்கு சென்று ஒஸ்திக்காக கடுமையாக உடற்பயிற்சி செய்ய இருக்கிறாராம் சிம்பு