நீங்கள் கொடுத்ததே போதும் - விஜய்காந்த்...ரிஷிவந்தியம் தொகுதியில் நலத்திட்டங்களை நிறைவேற்ற அரசு ஒதுக்கும் பணத்தில்,
ஒரு நயா பைசா கூட எடுக்க மாட்டேன். எனக்கு நீங்கள் கொடுத்ததே போதும் என்று தேமுதிக தலைவரும் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான விஜயகாந்த் கூறினார்.


ஒரு கட்சியின் தலைவர் என்பதால், என்னால் அடிக்கடி இங்கு வர முடியவில்லை என்றாலும் கூட, உங்களின் தேவைகளை அறிந்து கடமையாற்றுவேன். நான் இங்கு வருவதில்லை என்று எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்வார்கள். இவர்கள் 15 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து என்ன செய்தார்கள்.