விலைமாது கேரக்டர் எனக்கு வேணும்! அடம் பிடிக்கும் அனுஷ்கா!!வானம் படத்தை எந்த மொழியில் ரீ-மேக் செய்தாலும் அந்த விலைமாது கேரக்டரை எனக்குத்தான் கொடுக்க வேண்டும், என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார். தெலுங்கில் வெளியான வேதம் படத்தின் தமிழ் ரீ-மேக்தான் வானம். சிம்பு நாயகனாக நடித்த இப்படத்தின் நாயகியாக அனுஷ்கா நடித்திருந்தார். பரத், வேகா, பிரகாஷ் ராஜ், சோனியா அகர்வால் என பல முன்னணி நட்சத்திரங்கள், முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தாலும், அனுஷ்காவின் விலைமாது கேரக்டர்தான் ரொம்பவே பேசப்பட்டது.

இந்நிலையில் அனுஷ்கா அளித்துள்ள பேட்டியொன்றில், தெலுங்குப் படங்கள் ஆர்ப்பாட்டமானவை. ஆனால் தமிழ்ப் படங்கள் ஆழமானவை… யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை. எனக்கு இந்த இருவகைப் படங்களிலும் நடிப்பது சுவாரஸ்யமாக உள்ளது. வானம் படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்தேன். அதன் ஒரிஜினல் படமான வேதம் படத்திலும் இதே கேரக்டரை நான் செய்திருந்தேன். எந்த மொழியில் அந்தப் படத்தை ரீமேக் செய்தாலும் அந்த வேடத்தை நானே செய்ய விரும்புகிறேன். அந்த கேரக்டரை எனக்குத்தான் தர வேண்டும் என்று டைரக்டரிடம் கேட்பேன், என்று கூறியுள்ளார்.

முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கத் தயங்குகிற கேரக்ரை விரும்பி கேட்டுப் பெறுவேன் என்று சொல்லும் அனுஷ்கா, தன் அழகு ரகசியம் யோகாதான் என்று கூறுகிறார். ஒரு யோகா டீச்சராக வாழ்க்கையை தொடங்கிய அனுஷ்கா, 12 வயதிலிருந்து யோகா செய்து வருகிறாராம். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது யோகா செய்து விடுவாராம்.