வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Sunday, May 15, 2011

கொங்குமண்டலத்தில் காங்கிரஸ் ‘டங்குவாரை’ அறுத்த அதிமுக

Coimbatore
கொங்கு மண்டலத்திற்குட்பட்ட தொகுதிகளில் ஒன்றைக்கூட காங்கிரஸால் ஜெயிக்க முடியவில்லை. போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் மோசமான தோல்வி அடைந்திருக்கிறது காங்கிரஸ்.

கொங்கு மண்டலம்

கோவை, ஈரோடு, திருப்பூர், ஊட்டி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்குமண்டலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 9 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றைக் கூட கைப்பற்ற முடியாமல் படுதோல்வி அடைந்தது காங்கிரஸ். திருச்செங்கோடு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், அவினாசி, ஊட்டி, தொண்டாமுத்தூர், வால்பாறை ஆகிய 9 தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகள் ஆகும்.

வீணானது ராகுலின் பிரச்சாரம்

ராகுலின் செல்லப்பிள்ளைப் பட்டியலில் இருக்கும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய ராகுலே ஈரோட்டிற்கு வந்து பிரச்சாரம் செய்தார். ராகுலின் பிரச்சாரமும், இளங்கோவனின் ஆதரவும் கைகொடுக்கும் என்ற கனவில் மிதந்த யுவராஜாவிற்கு தேர்தல் முடிவு அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

விடியல் சேகர், எம்.என். கந்தசாமி, யுவராஜா, மயூரா கந்தசாமி, கோவை தங்கம், செல்வகுமார் போன்ற பிரபலமான முகங்களே தோல்வியைத் தழுவி இருப்பது தொண்டர்கலை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

என்ன காரணம்?

ஈழ விவகாரத்தில் தமிழினத்திற்குச் செய்த துரோகம், திமுகவின் குடும்ப அரசியல் மற்றும் பிரம்மாண்ட ஊழல்களின் மீதான எரிச்சல், மோசமான உட்கட்சி பூசல், தங்கபாலுவைப் போன்ற காமெடியான தலைமை, பிரச்சாரத்தில் ஒருங்கிணைப்பு இல்லாமை ஆகியவை தமிழகம் முழுவதிலும் தோல்வியை ஏற்படுத்திய பொதுவான காரணங்கள் என்றாலும் கொங்குமண்டலத்தின் பிரச்சனைகள் எதையுமே காங்கிரஸ் கண்டு கொள்ளாததை இப்பகுதியில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

உள்ளூர் பிரச்சனைகள்

மின் பற்றாக்குறை கொங்குமண்டலத்தின் உற்பத்தியாளர்களை வெகுவாகப் பாதித்தது, திருப்பூரின் சாயக்கழிவு நீர் பிரச்சனை, நூல் விலை உயர்வு, லாரி தொழில் எதிர்கொண்ட பிரச்சனைகள், விவசாயிகள் எதிர்கொண்ட சவால்கள் என கொங்குமண்டலத்தின் பிரச்சனைகள் எதையும் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தும் கொங்கு மண்டலத்தின் எந்த பிரச்சனைகளையும் கண்டுகொள்ளாத காங்கிரஸை மக்கள் துரத்தியடித்திருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.


0 comments:

Post a Comment