வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, May 14, 2011

ஆட்சி மாற்றம்- நடக்கப்போகும் காமெடி கலாட்டாக்கள்


1.கலைஞர் கதை வசனத்தில் 4 படங்கள் பூஜை# பழிக்குப்பழி வாங்க கலைஞர் திட்டம், தமிழக மக்கள் கலக்கம்@விதி வலியது.. துரத்தி துரத்தி அடிக்குதே

--------------------------------------
2. எனக்கு மக்கள் ஓய்வு கொடுத்துள்ளனர்-கருணாநிதி# தலைவரே.. உங்க ஊர்ல அல்வாவுக்கு ஓய்வுன்னு ஒரு அர்த்தம் இருக்கோ?நாங்க எல்லாம் விபரம் தெரியாம.

----------------------------
3. அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே ..அம்மாவை வணங்காமல் பதவி இல்லையே.கேப்டன் உள்ளிட்ட எம் எல் ஏக்கள் மனனம்

------------------
4. சன் டி வியை ஜெயா டி வி வாங்கிடுச்சாம்.. யார் சொன்னது? சன் டி வியே சொன்னாங்க #தளபதி பட வசன ஸ்டைலில் படிக்கவும்

----------------
5. அம்மாவின் ஆட்சியில் பதிவர்களுக்கு எதிர்காலம் இருக்குமா? ஓப்பனிங்கே சரி இல்லையே? ஆல் பிளாக்ஸ் லாக்குடு,இது தற்செயலா? நற்செயலா?

-------------------
6. நான் சட்ட சபைக்கு கோட் சூட் அணிந்தே வருவேன்,ஓப்பனிங்க் ஃபைட் ரொம்ப முக்கியம் -கேப்டன் நிபந்தனை,கவர்னர் திகைப்பு

-----------------
7. ரஜினி நடித்த நான் அடிமை இல்லை போஸ்டர் போயஸ் தோட்ட வாசலில் ஒட்டப்பட்டது எதிர்க்கட்சியின் சதியா? கேப்டன் விளக்கம்

------------------
8. பவ்யமாக காலில் விழுவது எப்படி?நின்று கொண்டே கூன் விழுந்த மாதிரி பம்முவது எப்படி?இவ்விடம் கற்றுக்கொடுக்கப்படும்#அதிமுக நோட் இட் &யூஸ் இட்

---------------------
9. திருவாரூர் : 49552 வாக்குகள் வித்யாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார்#அப்பாடா.. எப்படியோ ஜெயிச்சு மானத்தை காப்பாத்திட்டோம்,ஹூம் கனிமொழியை?

----------------------
10. சட்ட சபைக்கு ஜோடியுடன் தான் வருவேன். கேப்டன் நிபந்தனை,கோலிவுட் நடிகைகள் ஆதரவுக்கரம் நீட்டினர்,எம் எல் ஏக்கள் கிளு கிளு எதிர்பார்ப்பு

-------------------
11.சட்டசபையில் இனி வேட்டிக்கிழிப்பு,மைக் உடைப்பு கிடையாது.ஒன்லி லெக் ஃபைட்.. அதுவும் பேக் ஷாட்- கேப்டன் அறிவிப்பு,எம் எல் ஏக்கள் அதிர்ச்சி

---------------

12. சட்டசபையில் கனல் தெறிக்கப்பேச என்னோடு வசன கர்த்தா லியாகத் அலிகானையும் உள்ளே வர அனுமதிக்க வேண்டும்-கேப்டன் கோரிக்கை,ஜெ திகைப்பு#இமேஜினேஷன்

----------------

13. சட்டசபைக்கு கேப்டன் நிதானமாக செல்வாரா? மப்புடன் போவாரா? சன் டி வி யில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டி மன்றம் நடக்குமா?# டவுட்டு

----------------

14. சட்டசபைக்கு நான் வர வேண்டும் என்றால் அங்கே பாகிஸ்தான் தீவிர வாதியும் வர வேண்டும்.விஜய்காந்த் நிபந்தனை, ஜெ அதிர்ச்சி#கூட்டணிக்குழப்பம்

------------------

15. கேபிள் டிவி, சினிமா பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்க ஜெயலலிதா வழிவகை செய்வார்: விஜயகாந்த்#கடைசி வரை புரட்சித்தலைவின்னு சொல்ல மாட்டோமில்ல

---------------

16. கலைஞர் பேட்டி- தேர்தல் கமிஷன் திட்டமிட்டு எங்கள் வெற்றியை தடுத்தனர்.பணப்பட்டுவாடா சரி வர நடக்காததே எங்கள் தோல்விக்கு காரணம்#இமேஜினேஷன்.

--------------------

17.காதலும், காங்கிரஸூம் ஒன்று தான்.தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் டெபாசிட் கேட்கலாமா?

----------------

18. ரிஷியவந்தியத்தில் விஜயகாந்த் 30,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!#சரக்கடி கொண்டாடு.. ஊற்றிக்கொடு.. திண்டாடு

----------------

19. விடுதலைச் சிறுத்தைகள் 10 இடங்களிலும் அதிர்ச்சித் தோல்வி #அது சரி.. சாமியே சந்துல படுத்துக்கிடக்காம். பூசாரி பஞ்சு மெத்தை கேட்டாராம்

--------------

20. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவையெல்லாம் தோராயமாக ஒன்றரை ஆண்டுகளில் செய்து முடிப்போம்.-ஜெ#மீதி மூன்றரை ஆண்டுகள் சாராயமா காய்ச்சுவீங்களா?

----------------

21. குவாட்டர் அடிச்சுட்டு குப்புற கிடக்கறவங்க எல்லாம் திமுக ஆளுங்க.ஆஃப் அடிச்சுட்டு ஆப்பம் சாப்பிட்டு கிடக்கறவங்க கேப்டன் கட்சி ஆளுங்க

-----------------

22. வைகோ-போயஸ்சுக்கு போய் வாழ்த்து சொல்லலாமா?கோபாலபுரம் போய் ஆறுதல் சொல்லலாமா?தன் சொந்த அம்மாவிடம் கருத்து கேட்க கலிங்கப்பட்டி போனார்.

---------------------

23. நீங்க 40 வருஷமா கட்சி மாறாம இருக்கீங்களா? ஆச்சரியமா இருக்கே?ஆமா, அன்னைல இருந்து இன்னை வரைக்கும் நான் ஆளுங்கட்சி தான்

--------------------

24. திடீர்னு உங்க வீட்ல சமையலை உங்க மனைவி செய்யறாங்க?நாட்ல ஆட்சி மாற்றம்,வீட்ல காட்சி மாற்றம்#இனி 5 வருஷத்துக்கு மனைவி சமையல் தான்.அப்பாடா

----------------------

25. ஜெ இனி கூட்டணிக்கட்சியை மதிப்பாரா?#நல்லா கேட்கறாங்கய்யா டீட்டெயிலு.எப்போ மதிச்சாரு.. இப்போ மதிக்க?

-----------------------  


26.அம்மா ஏன் கோபமா இருக்காங்க? கேப்டனின் பசங்க 2 பேருக்கும் மினிஸ்டர் போஸ்ட் வேணும்னு கேட்டாராம்

---------------------

27. எங்களைத் தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்; ஜெ.#ஹூம்.இதே டயலாக்கைத்தான் போன எலக்‌ஷன் முடிவப்ப அய்யா சொன்னாரு

-------------------

28. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்படும்: ஜெ#அப்போ அய்யா &கோ-வை உள்ளே வைக்கும் படலம் எப்போ?பை ஆர்வக்கோளாறு ஆர்ய மாலா

---------------------

29. பொருளாதார நிலைப்புத் தன்மைக்கு வழிவகுப்பது முக்கியப் பணி: ஜெ#யாரோட பொருளாதாரம்னு விளக்கமா சொல்லிடுங்கம்மா ..நாங்க எல்லாம் டியூப்லைட்டு

--------------

30.தமிழக நிர்வாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவதே முதல் பணி: ஜெ-அய்யய்யோ.. அதுக்கே 5 வருஷம் சரி ஆகிடுமே? அப்புறம் எப்போ நல்லாட்சி நடத்துவீங்க?

---------------

31. தமிழக மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி: ஜெ#அப்போ எங்களுக்கும் பதவி உண்டா?ன்னு கேட்டுடபோறாங்கம்மா ஜாக்கிரதை

--------------

32. சட்டசபைல கலைஞரே எதிர்க்கட்சித்தலைவரா வர ஜெ விருப்பம். கேப்டன் வந்தா பேசியே கொல்வாரே?

--------------

33.திமுக வில் தோற்ற பெரும்புள்ளிகள் ,கரும்புள்ளிகள் அனைவரும் 108 ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டு கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தில் பயன் அடைவு

-----------------------

34. 108 ஆம்புலன்ஸ் திட்டம் நிறுத்தப்படாது -ஜெ அறிவிப்பு..அடங்கொய்யால கூட்டுத்தொகை 9 வருதாம். அம்மாவுக்கு ராசியானஎண்ணாம்


-------------------------------

35. ஜெ பதவிஏற்புக்குப்போனப்ப கேப்டனை ஏன் அங்கே விடலை?தேசியக்கொடி ஏத்தறப்ப கொடியை இறக்கு ,என் கட்சிக்கொடிதான் ஏத்தனும்னு தகராறு பண்ணீட்டா?

----------------------



36. ஜெ அறிவிப்பு- கஜானா காலி.எனவே ஆட்சி நடத்த மக்கள் நன்கொடை அளிக்க வேண்டும்.அந்த பணத்தில் இருந்து தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

---------------------

37. ஜெ ஏன் கோபமா இருக்காரு?பதவி ஏற்புக்கு மேடை ஏறும்போது பல ஸ்டூடண்ட்ஸ் குறுக்கிட்டு மேடம் லேப்டாப் எப்போ?ன்னு கேட்டாங்களாம்#ஆர்வக்கோளாறு

-------------------

38. இனிமே ஃபிகர்கள் யாரும் மஞ்சள் தேய்ச்சுக்குளிக்காதீங்க.. ஒன்லி அரப்புத்தான். அம்மா உத்தரவு#பசலை படர்ந்த முகங்கள் எதிர்பார்க்கலாமா?

-----------------

39. அவருக்கு ஏன் ஹார்ட் அட்டாக் வந்துச்சு?விஜயகாந்த் நடிச்ச விருதகிரி படத்துக்கு தேசிய விருது கிடைக்கப்போறதா தகவல் வந்துச்சாம்..

-------------------

40. ஆட்சி மாற்றத்தால கோடம்பாக்கத்துல என்ன மாற்றம் வரும்?இத்தனை நாளா சன் பிக்சர்ஸ் படமா வந்து கழுத்தை அறுத்துச்சு.இனி ஜெயா பிக்சர்ஸ் படமா வரும்

---------------------------

41. ஈரோட்ல இத்தனை நாளா மஞ்சள் தானே பயிர் ஆச்சு? திடீர்னு ஏன் வெற்றிலை பயிரிடறாங்க?ஆட்சி மாற்றத்தால மஞ்சள் நகரம் இனி பசுமை நகரமா மாறப்போகுதாம்

---------------------

42. கேப்டன் கட்சி ஆளுங்க எல்லாம் அந்தப்புரம் போறாங்களே? ஏன்?கேப்டன் கைல அடி வாங்குனவங்க எல்லாம் மகா ராஜா ஆகியாச்சே?மகாராஜா எங்கே போவாரு?

-----------------

43. இப்போ அம்மா வெற்றி.. அதனால மங்காத்தா ஹிட் ஆக செண்ட்டிமெண்ட்டா ஒரு காரணம் கிடைச்சிருக்கு தல ரசிகர்களுக்கு

--------------------

44. அதிமுக ஜெயிச்சா தீக்குளிச்சிடறேன்னு சில மானஸ்தருங்க சவால் விட்டாங்களே.. பெட்ரோல் இங்கே .. பெட் கட்டுன ரோல்ஸ் எங்கே?

---------------------

45. ஆட்சிக்கு வந்ததும் அம்மாவின் முதல் வேலை அய்யாவுக்கு ஆப்பு கனி மொழிக்கு காப்பு..?

0 comments:

Post a Comment