ஒருவரை தாக்கிய 2 இளைஞர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

டெல்லியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் குமார்(24), விகாஷ்(24). அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கையேந்தி பவனில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருவரின் கை தவறுதலாக அவர்கள் தட்டில் வைத்திருந்த முட்டையில் பட்டுவிட்டது. அவ்வளவு தான் அந்த இருவரும் அந்த வழிப்போக்கர் மீது பாயந்துவிட்டனர். இதில் அந்த வழிப்போக்கர் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ரமேஷையும்,விகாஷையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வீரேந்தர் பட் கூறியதாவது,

இந்த இருவரின் இளம் வயதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறேன் என்றார்.என்ன கொடுமை சார் இது..!!!!