கன்னியாகுமரி: 3 நர்ஸ்களுக்கும், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த சில பெண்களுக்கும் செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர் செல்வராஜ், என் உள்ளம் உன்னைத் தேடுதே என்ற ‘ஏ’ சர்டிபிகேட் படத்திலும் நடித்தவர் ஆவார்.
இவரே தயாரித்த இந்தப் படத்தைத் தயாரித்து ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியதும் அவரே. இதற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்தது. ஆனால், படத்தை யாரும் வாங்காததால் அது முடங்கிப் போனது. இதில் கதா‌நா‌யகி‌களாக சோ‌னி‌யா ‌ஷெ‌ட்‌டி‌, மம்‌தா‌ இருவரும்‌ நடித்தனர். இதில் மஞ்சுளாவும் ஒரு வேடத்தில் நடித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (58) மேலப்பாளையம் அருகே நத்தத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இந்த மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்த நர்ஸ்களுக்கு இவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததோடு, சில நோயாளிகளிடமும் தவறாக நடக்க முயன்றதாக புகார்கள் வந்ததால் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
இவரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மற்றும் சென்னையில் மருத்துவமனைகளை நடத்தி வரும் இவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் ஆளுக்கு ஒரு மருத்துவமனையை நிர்வகித்து வருகின்றனர். இந் நிலையில் கடந்த ஆண்டு இவர் களியக்காவிளையில் ஒரு நர்சையும் திருமணம் செய்துள்ளார்.
மேலும் நர்சிங் படித்து வேலை இல்லாமல் இருக்கும் பெண்களிடம் அதிக சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது மருத்துவமனையில் சேர்த்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தன்னை நடிகர், தயாரிப்பாளராகவும் அறிமுகப்படுத்திக் கொண்டு, சினிமாவில் சான்ஸ் வாங்கித் தருவதாகவும் பல பெண்களை சீரழித்துள்ளார்.
என் உள்ளம் உன்னைத் தேடுதே படப்பிடிப்பில், சொத்தவிளை பீச்சில் நடிகையுடன் இவர் ஆபாச குளியல் காட்சிகளில் நடித்த படங்களும் இப்போது வெளியாகி உள்ளன. இவற்றை போலீசார் கைப்பற்றி நடிகைகளுடன் இவருக்குள்ள தொடர்பு பற்றியும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.