1.முதல்வர் கருணாநிதி: கள்ளக் கையெழுத்துப் போட்டோர், லஞ்சம் வாங்கியோர், அபராதம் செலுத்தியவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது ராஜராஜன் காலத்தில் விதிமுறையாக இருந்தது


  சட்னி-சாம்பார் -தலைவா,ஆனா ஆ.ராசா காலத்துக்குப்பிறகு அது வழக்கொழிஞ்சு போச்சே? ஏனுங்கோ?2.தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: காங்கிரஸ் கட்சியில் கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாது. கூட்டணி பற்றி நானே பேசக்கூடாது. அந்த முடிவு சோனியாவிற்கு மட்டும் தான் உண்டு. எனவே, இனிமேல் கூட்டணி பற்றி காங்கிரஸ் கட்சியினர் பேசமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

சட்னி-சாம்பார் - அண்ணே,தலைவர் நீங்களே கூட்டணி பற்றி பேசக்கூடாதுன்னா அப்புறம் எதுக்கு அந்த தலைவர் போஸ்ட்டிங்க்?


3.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:
விஜயகாந்த் கட்சி உட்பட பல கட்சிகள் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், காங்கிரஸ், மக்களின் உரிமைக்காகப் போ ராடி வரும் இயக்கம். வரும் 2016க்குள் நாம் மூன்று பெரிய தேர்தல்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல், இந்த ஆறு ஆண்டு காலமும் கட்சியை வலுப்படுத்த மேலிடம் முன்வந்தால், 2016ல் ஆட்சி அமைக்க முடியும்.

சட்னி-சாம்பார் - யானை போய் குதிரை வந்தது டும் டும் டும்,குதிரை போய் கழுதை வந்தது டும் டும்,2011 போய் 2016 வந்தது டும் டும் டும்


 

4.சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பேச்சு:
 கருணாநிதி கூறிய வாக்குறுதியை நம்பி தமிழக மக்கள் ஓட்டளித்தனர். இன்று குடும்பத்தினர் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கின்றன.

  சட்னி-சாம்பார் - அது வேணா உண்மைதான்,கலைஞர் குடும்பத்துக்கு எல்லா உதவிகளும் கிடைக்குது.5.   திருமணத்துக்கு பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் - காதலன் பிரபுதேவா

  சட்னி-சாம்பார் -ஆம்,டைவர்ஸுக்குப்பிறகு நடிப்பார்.(இத்தனை நாளா நடிச்சாரா?)
6. இந்த ஆண்டு எனக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. நான் சந்தோஷமா இருக்கேன். என் சந்தோஷத்தை கொடுக்காதீங்க  - நயன்தாரா


  சட்னி-சாம்பார் -ஓப்பனிங்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஃபினிஷிங்க்லதான் பிரச்சனை ஆகிடுது.போன வருஷம் சிம்பு,இந்த வருஷம் பிரபுதேவா,அடுத்த வருஷம் உங்க மனசை அசத்தப்போவது யாரு?7.பிரபுதேவா பெயரை நான் பச்சை குத்தியிருக்கிறேன். எதற்காக அவர் பெயரை பச்சை குத்தியிருக்கிறார் என்று பலரும் கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்னதான் நினைக்கிறார்கள் என புரியவில்லை. நமக்காக வாழ்றவங்களுக்காக நாம வாழுறோம். இதுதான் உண்மை. இது எல்லாருக்குமே பொருந்தும். அதைத்தான் நானும் செய்கிறேன். எப்‌போதுமே நான் மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு கவலைப்படுறதில்லை.

-நயன்தாரா
சட்னி-சாம்பார்-நீங்க வேணா பாருங்க கஜினி சூர்யா மாதிரி பல பேரை பச்ச குத்தி கலக்கப்போறீங்க.