Friday, April 29, 2011


ரஜினியின் அடுத்த படமான ராணாவில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோன், தனது காதலன் சித்தார்த் மல்லையாவுக்கு பல ஆயிரம் பேர் பார்க்க உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து, அதிர வைத்தார்.
தீபிகா படுகோனுக்கும் விஜய் மல்லையா மகன் சித்தார்த் மல்லையாவுக்கும் இடையே தீவிரமாக காதல் இருந்து வருவதாகக் கூறப்பட்டது. விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விளம்பரத் தூதராக உள்ளார் தீபிகா.
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தீபிகாவும் சித்தார்த்தும் கைகோர்த்தபடி ஜோடியாக சுற்றுவதைப் பார்க்கலாம். ஆனால் வழக்கம்போல இது வெறும் நட்பு மட்டுமே என்று கூறி வந்தார் தீபிகா.
இந்த நிலையில், பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் சமீபத்தில் மோதிய ஐபிஎல் போட்டியைக் காண விஜய் மல்லையாவும் வந்திருந்தார்.
அவரது மகன் சித்தார்த்தும் தீபிகாவும் இன்னொரு பகுதியில் ஒன்றாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆட்டத்தில் பெங்களூர் அணி வென்றதும், இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டனர். சுற்றிலும் ஆயிரக்கணக்கானோர் இருப்பதையோ, அருகில் விஜய் மல்லையா இருப்பதையோ இருவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
ரொம்ப ‘ரொமான்டிக்கான நட்பு’ போலிருக்கே!

Posted on 7:37 AM by சட்னி

No comments

Thursday, April 28, 2011
1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....


12) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....

15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

17) தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....

18) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

19) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?

Posted on 8:30 AM by சட்னி

No comments
கன்னியாகுமரி: 3 நர்ஸ்களுக்கும், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த சில பெண்களுக்கும் செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர் செல்வராஜ், என் உள்ளம் உன்னைத் தேடுதே என்ற ‘ஏ’ சர்டிபிகேட் படத்திலும் நடித்தவர் ஆவார்.
இவரே தயாரித்த இந்தப் படத்தைத் தயாரித்து ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியதும் அவரே. இதற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்தது. ஆனால், படத்தை யாரும் வாங்காததால் அது முடங்கிப் போனது. இதில் கதா‌நா‌யகி‌களாக சோ‌னி‌யா ‌ஷெ‌ட்‌டி‌, மம்‌தா‌ இருவரும்‌ நடித்தனர். இதில் மஞ்சுளாவும் ஒரு வேடத்தில் நடித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (58) மேலப்பாளையம் அருகே நத்தத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இந்த மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்த நர்ஸ்களுக்கு இவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததோடு, சில நோயாளிகளிடமும் தவறாக நடக்க முயன்றதாக புகார்கள் வந்ததால் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
இவரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மற்றும் சென்னையில் மருத்துவமனைகளை நடத்தி வரும் இவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் ஆளுக்கு ஒரு மருத்துவமனையை நிர்வகித்து வருகின்றனர். இந் நிலையில் கடந்த ஆண்டு இவர் களியக்காவிளையில் ஒரு நர்சையும் திருமணம் செய்துள்ளார்.
மேலும் நர்சிங் படித்து வேலை இல்லாமல் இருக்கும் பெண்களிடம் அதிக சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது மருத்துவமனையில் சேர்த்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தன்னை நடிகர், தயாரிப்பாளராகவும் அறிமுகப்படுத்திக் கொண்டு, சினிமாவில் சான்ஸ் வாங்கித் தருவதாகவும் பல பெண்களை சீரழித்துள்ளார்.
என் உள்ளம் உன்னைத் தேடுதே படப்பிடிப்பில், சொத்தவிளை பீச்சில் நடிகையுடன் இவர் ஆபாச குளியல் காட்சிகளில் நடித்த படங்களும் இப்போது வெளியாகி உள்ளன. இவற்றை போலீசார் கைப்பற்றி நடிகைகளுடன் இவருக்குள்ள தொடர்பு பற்றியும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Posted on 8:07 AM by சட்னி

No comments

Tuesday, April 26, 2011ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.
மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்

Visit XciteFun.net
30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)

Visit XciteFun.net
 
 
1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)
Visit XciteFun.net
 
 
25 கோடி பள்ளில படிப்பவர்கள்
Visit XciteFun.net
 
 
1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்
Visit XciteFun.net
 
 
15 கோடி வேலை தேடுவோர்
Visit XciteFun.net
 
 
1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்
Visit XciteFun.net

 
 
ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலி
  
மிச்சம் இருப்பது நீங்களும்  நானும்

நீங்க   எப்போ பார்த்தாலும் மெயில் அனுப்பறது/படிக்கிறதுல பிஸி

Visit XciteFun.net

அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்

Visit XciteFun.net


 

Posted on 3:34 PM by சட்னி

No comments

Tamanna
பவர் சோப் விளம்பரங்களில் நடிகை தமன்னாவின் படங்களையோ, வீடியோக்களையோ பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


முன்னணி நடிகையாவதற்கு முன்பு நிறைய விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் தமன்னா. ஸ்டார் நடிகையான பின்னரும் கூட விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

அந்த வகையில் அவர் புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப் நிறுவன விளம்பரங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் தமன்னா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அதில், புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப் நிறுவனம், சென்னை தி.நகரைச் சேர்நத் ஜே அன்ட் டி கம்யூனிகேஷன் மூலமாக தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு பிராண்ட் அம்பாசடராக செயல்பட அணுகியது.

இதையடுத்து 2008ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இதுதொடர்பாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2009ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

ஆனால் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் எனது அனுமதியின்றி எனது படங்களை தனது விளம்பரங்களில் அது பயன்படுத்தி வருகிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார் தமன்னா.

இதை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியம், வருகிற ஜூன் 8ம் தேதி வரை பவர் சோப் விளம்பரங்களில் தமன்னாவின் படங்கள், வீடியோ கிளிப்பிங்குகளைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.

Posted on 12:24 PM by சட்னி

No comments

Monday, April 25, 2011

ஒருவரை தாக்கிய 2 இளைஞர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

டெல்லியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் குமார்(24), விகாஷ்(24). அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கையேந்தி பவனில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருவரின் கை தவறுதலாக அவர்கள் தட்டில் வைத்திருந்த முட்டையில் பட்டுவிட்டது. அவ்வளவு தான் அந்த இருவரும் அந்த வழிப்போக்கர் மீது பாயந்துவிட்டனர். இதில் அந்த வழிப்போக்கர் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ரமேஷையும்,விகாஷையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வீரேந்தர் பட் கூறியதாவது,

இந்த இருவரின் இளம் வயதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறேன் என்றார்.என்ன கொடுமை சார் இது..!!!!

Posted on 7:30 AM by karthik_gv

No comments

சென்னை: திமுக அரசின் தொழிலாளர் விரோதச் செயல்களை சுட்டிக்காட்டாமல் “மே” தின பொதுக் கூட்டங்களை நடத்துவது என்பது இயலாத ஒன்று. இதனால் அதிமுக சார்பில் நடைபெற இருந்த மே தின விழா கொண்டாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கொடநாட்டில் ஓய்வெடுத்து வரும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் “மே” தினத்தன்று அதிமுக சார்பில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் ஆண்டுதோறும் "மே தின விழா பொதுக்கூட்டங்கள்" நடத்தப்படுவதும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நலிந்த தொழிலாளர்கள் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதும் வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டும் உழைப்பின் மேன்மையை, உழைப்பவரின் உரிமையை உலகிற்கு உணர்த்தும் வகையில், மே தினத்தை கழகத்தின் சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடவும், ஆங்காங்கே பொதுக்கூட்டங்களை நடத்தவும், நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கவும் திட்டமிடப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், இது போன்ற பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் போது, எதிர்க்கட்சியினரை விமர்சனம் செய்து பேசக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளும் திமுக அரசின் தொழிலாளர் விரோதச் செயல்களை சுட்டிக்காட்டாமல் “மே” தின பொதுக் கூட்டங்களை நடத்துவது என்பது இயலாத ஒன்று.

இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் வாக்குப் பதிவிற்குப் பிறகு கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு ஓர் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

எனவே, தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் மதிப்பளிக்கும் வகையிலும், பேரவை தேர்தல் நடவடிக்கைகள் முடிந்த பிறகு, அதிமுக சார்பில் மே தினத்தை சிறப்பாக கொண்டாடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, அதிமுக சார்பில் மே தின விழா கொண்டாட்டம் நடைபெறும் தேதி மற்றும் நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் தேதி ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Posted on 7:21 AM by karthik_gv

No comments

Sunday, April 24, 2011


PTI Photo
FILE
நியூஸீலாந்தில் ஷேன் பாண்ட், இங்கிலாந்தில் பிளிண்டாஃப், மேற்கிந்திய தீவுகளில் கிறிஸ் கெய்ல் ஆகியோரை தொடர்ந்து தற்போது இலங்கையின் லசித் மலிங்காவும் கிரிக்கெட் வாரியங்கள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக அதிரடி முடிவை எடுக்க நேரிட்டுள்ளது. வாரியம் கொடுத்த நெருக்கடியால் டெஸ்ட் கிரிக்கெட்டே வேண்டாம் என்று உதறி விட்டார் மலிங்கா.

விளையாட்டு என்பதே திறமை தொடர்பானது. திறமை எவ்வளவு ஆண்டுகளுக்கு இருக்கிறதோ அது வரைதான் விளையாட்டு வீரருக்கு மதிப்பு மரியாதை, பணம் எல்லாம். ஒரு வீரர் நன்றாக விளையாடிய காலத்தில் எவ்வளவு 'தேச பக்தராக' இருந்தாலும் திறமை போய்விட்டால் அவரது தேசப்பக்திக்காக எந்த வாரியமாவது அணியில் வைத்திருக்குமா?

இதனைப் பற்றி கிரிக்கெட் வாரியங்களில் உள்ள 'தலைகள்', என்ன நினைக்கிறது என்றால், பணத்தாசை பிடித்து நாட்டுக்காக விளையாடுவதைக் கூட பொருட்படுத்தாத வீரர்கள் என்ற எண்ணத்தை தாங்கள் வளர்த்துக் கொள்வதோடு, பொது மக்கள் மனத்திலும் வீரர்கள் பற்றிய இது போன்ற ஒரு அவதூறை ஏற்படுத்துகின்றனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வீரர்கள் நன்றாகப் பணம் ஈட்டுகிறார்கள். ஆம்! ஆனால் அதற்காக கடின உழைப்பை வெளிப்படுத்துவதும் அவசியம். இதனை ஒரு பொழுது போக்கு கிரிக்கெட் என்றாலும் உழைப்பு அளவில் எல்லாம் ஒன்றுதான். சினிமா ஒரு பொழுதுபோக்குக் கலைதான் ஆனால் ஒரு சினிமாவை எடுக்க எவ்வளவு முட்டி மோதுகிறார்கள். எவ்வளவு செலவு, எவ்வளவு உழைப்பு...!

ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்காக பாண்ட், பிளிண்டாஃப், மலிங்கா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டை உதறுகின்றனர் என்று குற்றம்சாட்டினால் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்பு 'தேச'த்திற்காக விளையாடி காயமடைந்து, உடல் நிலை மோசமான வீரர்கள் பலருக்கு இந்த கிரிக்கெட் வாரியங்கள் என்ன கிழித்து விட்டது என்ற கேள்வியையும் நாம் எழுப்ப வேண்டும்.

ஒரு வேகப்பந்து வீச்சாளரின் காலம் எவ்வளவு? பொதுவாகவே அனைவரும் சச்சின், ஸ்டீவ் வாஹ் போன்று 15 ஆண்டு, 20 ஆண்டுகள் வரை விளையாட முடிவதில்லை. குறிப்பாக பந்து வீச்சாளர்களின் காலம் 6 முதல் 7 ஆண்டுகள்தான். அதுதான் அவர்கள் உச்சத்தில் இருக்கும் காலம்.

அதுவும் காயமடையாமல் இருப்பது அவசியம். காயமடைந்தால் நம் தேசப்பற்று வாரியத் தலைகளா வந்து காப்பாற்றப் போகிறது? சொந்தக் காசில்தான் சிகிச்சை பெறவேண்டியுள்ளது.

மேலும் 18 வயதில் ஒரு வீரர் விளையாட வருகிறார் என்றால் அவர் எம்.பி.ஏ. ட்ரிப்ளி, எம்.பி.பி.எஸ். படித்து விட்டா வருகிறார்? நேராக பள்ளி அல்லது தெரு கிரிக்கெட்டில்லிருந்து லீக், மாவட்டம், மாநிலம் பிறகு நாட்டு அணிக்குள் வருகின்றனர்.

Posted on 8:32 AM by சட்னி

No comments

இந்தத் தேர்தலில் எல்லாரது பேச்சையும் கேட்டேன். ஆனால் வடிவேலு அளவுக்கு மோசமாகப் பேசியவர்கள் யாருமில்லை. நாகரீகமான முதல்வருக்குப் பக்கத்தில் இந்த அநாகரீகமான சாக்கடை எதற்கு? என்று கடுமையாகத் தாக்கியுள்ளார் அமீர்.


Director Ameer insults AR Rahman

சமீபத்தில் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த தேர்தலில் சீமானின் எழுச்சிமிகு பேச்சு தொடங்கி, ,வைகோ வின் மவுனம் உட்பட,அனைத்து அரசியல் தலைவர்ல்களின் பேச்சையும் நான் கூர்ந்து கவனித்தேன்.வடிவேலு அளவுக்கு யாரும் கேவலாமாகவோ கிழ்த்தரமாகவோ பேசவில்லை. விஜயகாந்தை குடிகாரன் என்கிறார் இவர். குடிக்கிரவன் கெட்டவன் என்றால் அதை விற்கிறவன்? இதை கேட்டால் நான் யாரையோ ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம்.

அரசே நடத்தும் மதுக்கடையில் அரசு நிர்ணயைத்த விலையை கொடுத்து ,மது குடிப்பதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்? தவறுன்னா ஏன் அரசாங்கமே அந்த கடைகளை திறந்து வெச்சிருக்கு?

விஜயகாந்த் வேட்பாளரை அடிச்சது உண்மைன்னா நிச்சயமா அது தப்புதான்... விஜயகாந்த் வேட்பாளரை அடிச்சாரா இல்லை, உதவியாளரை தட்டினாரா என்பது தெளிவாக தெரியவில்லை... ஆனால் அவர் அடிச்ச மாதிரியான காட்சிக்கு பிண்ணனி இசை எல்லாம் அமைச்சு, கிராஃபிக்ஸ் வேலைகளை காட்டியது, அடிச்சதை விட மோசமான விசயம்.


குடிச்சதையும் அடிச்சதையும் சொல்லி சொல்லியே மக்களோட பிரச்சனைகளை மறக்கடிச்சிட்டாங்களே அதுதான் ஜீரணிக்க முடியாத துரோகம்.

சாமி ஊர்வலத்துக்கும், சாவு வீட்டுக்கும் கூட்டம் வரும். வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களோட தவிர்க்க முடியாத கலாச்சாரம். யாரையும் திட்டிப் பேசினா, நாலு பேர் கேட்கத்தான் செய்வாங்க. அந்த மாதிரிதான் வடிவேலுக்கும் கூட்டம் சேர்ந்தது.

விஜயகாந்துக்கு கேப்டன்கிற பட்டம் ஏன் கேட்குற வடிவேலுக்கு வைகை புயல் கிற பட்டம் மட்டும் ஏன்..? இந்த புயல் எந்த மரத்தை சாய்ச்சுச்சு..? எந்த வீட்டை இடிச்சுச்சு..? வட்ட செயலாளர் தொடங்கி, ரொளடிங்க வரைக்கும் அத்தனை பேருக்கும் பட்டம் கொடுத்தே இந்த ஊரு பழகிடுச்சு. 

விஜயகாந்தை பத்தி இத்தனை பேசற வடிவேலு, அந்த அம்மையார் விசயத்தில் அடக்கி வாசிப்பது ஏன்..?ஆட்சி மாறினால் அதோ கதி ஆகிடும்ங்கிற பயம்தானே..?எப்போதுமே... அம்மையார் என்றுதான் அழைப்பேன் என 87 வயதிலும் நாகரீகத்துடன் பேசுகிறார் முதல்வர் கலைஞர். அந்த அசாத்திய நாகரீகத்துக்கு பக்கத்தில் இந்த சாக்கடை எதற்கு?

சினிமாவில் ஒரு காமெடி நடிகரோட ரோல் ஹீரோவின் பின்னால் ஒளிந்து கொள்வதுதான்! நிஜத்திலும் வடிவேல் அதைத்தான் பண்ணி இருக்கார்.கலைஞர்,ஸ்டாலின், அழகிரி பின்னால் ஒளிந்துகொண்டு பேசினார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, திருவிழா பொம்மை போல தெருவுக்கு வரும் அத்தனை சினிமா நட்சத்திரங்களையும் கண்டிக்கிறேன்...கடந்த தேர்தலில் அ.தி.மு.க வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சிம்ரனும்,கவிஞர் சினேகனும் இன்றைக்கு எங்கே போனார்கள்..?" என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

Posted on 8:27 AM by சட்னி

No comments

 கே வி ஆனந்த் இயக்கத்தில் அடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பெரும் போட்டியே நடக்கிறதாம் இளம் நாயகிகளுக்குள்.


ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக முதலில் பேசப்பட்டவர் மேக்னா ராஜ். ஆனால் ஹீரோவின் பார்வை அவர் மீது படவில்லையாம்.
அதனால் தப்ஸி, சமந்தா மற்றும் காஜல் அகர்வாலின் புகைப்படங்களைக் காட்டினார்களாம்.
ஆனால் சூர்யாவோ, தீபிகா படுகோனை முயற்சி செய்யுங்கள் என கூறிவிட்டாராம், அவரது ரேஞ்ச் தெரியாமல். அங்கே போனால், நான் சூப்பர் ஸ்டாரின் ஜோடி இப்போ. சம்பளம் 6 கோடி என கைகளை விரிக்க, தலை தெறிக்க ஓடிவந்திருக்கிறார்கள்.
இப்போது காஜல் அகர்வாலை முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம். தப்ஸியிடம் பேசலாமா என்று கேட்டதற்கு, சூர்யாவிடமிருந்து வந்த பதில், “தப்ஸி வேணாம்!”
விஷயம் கேள்விப்பட்ட தப்ஸி ஏக கோபமாகி, சாபம் விட ஆரம்பித்துவிட்டாராம்!

Posted on 8:22 AM by சட்னி

No comments

Saturday, April 23, 2011


ஒவ்வொரு விசைக்கும் எதிர்விசை உண்டு. அனுபவப்பூர்வமாக இப்போது உணரத் தொடங்கியிருக்கிறார் வடிவேலு.
தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெ‌ரிந்துவிடும். திமுக-வே வந்தால் பிரச்சனையில்லை. மாறாக அதிமுக வந்தால்…?
இந்த‌க் கோணத்திலும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. தேர்தல் பிரச்சாரத்தில் இவர் ஜெயலலிதாவை விமர்சிக்கவே இல்லை. அதற்கு இப்போது விளக்கம் தந்திருக்கிறார். திமுக அரசின் சாதனைகளை சொன்னாலே போதும் என மு.க.ஸ்டாலின் கூறினார், அதனால்தான் ஜெயலலிதா பற்றி எதுவும் கூறவில்லை என விளக்கம் தந்திருக்கிறார். அப்போ விஜயகாந்த்?
அவரோட படத்தில் அடுத்த முதல்வர்னு பேசச் சொன்னாங்க, ஆளைவிட்டு அடிச்சார் என சொந்தக் காரணங்களை நிரப்பி எஸ்கேப்பாகப் பார்க்கிறார்.
இப்போதே இப்படி குழைபவர் அதிமுக வந்தால் காவடி எடுத்தாலும் எடுப்பார்.

Posted on 8:12 AM by சட்னி

No comments

http://picasamusic.com/musicimg/KO.jpg

பாலைவன ரோஜாக்கள்,ஊமை விழிகள், சொல்வதெல்லாம் உண்மை போன்ற பட வரிசையில் லேட்டஸ்ட் பிரஸ் ரிப்போர்ட்டர் ஓரியண்ட்டட் ஸ்டோரி லைனில் சுபாவின் கதைக்கருவை  வைத்து கே வி ஆனந்த்  களம் இறங்கி இருக்கும் படம் தான் தலைவன் என்ற அர்த்தம் உள்ள கோ படம்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே மாறி மாறி ஊழல் பண்ணும் கட்சி என்பதால் ஒரு மாற்று சக்தி வேண்டும் என சில இளைஞர்கள் முன் வந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராடுகிறார்கள்...ஆட்சி மாற்றம் வருகிறது.. பின் நடக்கும் சுவராஸ்யமான சம்பவங்கள் தான் கதை.. 
கேட்கும்போது மறுபடியும் ஒரு அரசியல் படமா ? என யாரும் சலித்துக்கொள்ள தேவை இல்லை.. நீட் ஆக்‌ஷன் கம்ர்ஷியல் தான்.

படத்தில் முதலில்  நம் மனதைக்கவர்வது பியா தான்.துறு துறுப்பான நடிப்பு,இயல்பான முக பாவனைகள்,செம்பருத்திப்பூ மலர்ந்த மாதிரி உதட்டில் தக்க வைத்த சிரிப்பு என சர்வசாதாரணமாக நம் மனதில் சப்பணம் போட்டு அமர்ந்து விடுகிறார்.அவரது ஹேர் ஸ்டைல் செம அழகு..
 இரண்டாவது படத்தின் ஒளிப்பதிவு.. கே வி ஆனந்தின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் இயற்கை அழகை அள்ளுகிறது.. ஆக்‌ஷன் காட்சிகளில் நம்மையும் உடன் அழைத்து செல்லும் லாவகமான கேமரா கோணங்கள்,பல இடங்களில் வெல்டன் சொல்ல வைக்கிறது.

3 வது கதைக்களன் . பத்திரிக்கை ஆஃபீஸ்-ல் நடப்பதை நம் கண் முன் கொண்டு வந்திருக்கும் ஆர்ட் டைரக்‌ஷன்.ஆரம்பக்காட்சிகளில் குப்பத்தில் குடிசைகளில் கேமரா புகுந்து புறப்பட்டு படம் பிடிக்கும்போது ஒரு படத்துக்கு ஆர்ட் டைரக்‌ஷன் எவ்வளவு முக்கியம் என நிரூபிக்கிறது..

அடுத்தது ஜீவா.. பிரஸ் ரிப்போர்ட்டரை கண் முண் நிறுத்துகிறார்.. தன்னை சுற்றி எது நடந்தாலும் அவர் உடனே கேமராவை கையில் எடுப்பது அருமை..ஒரு பத்திரிக்கையாளனுக்கு கேமரா மூன்றாவது கை மாதிரி என்ற லைனை கேட்ச் பண்ணி , கேரக்டரை உள் வாங்கி நடித்திருக்கிறார்.

அடுத்து அஜ்மல்.. இவரது அண்டர்ப்ளே ஆக்டிங்க் நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. ஆனால் கட்சியின் இளைஞர் படைத்தலைவர் என்ற அளவில் காட்டத்தான் அவர் ஒர்த். அதை மீறி ஒரு கட்சிக்கே தலைவராக காட்டுவதும் சி எம்மாக காட்டுவதும் குருவி தலையில் பனங்காய் கதை தான்.
ஹீரோயின் கார்த்திகா.. ராதாவின் மகள்.ஆள் நல்ல உயரம் தான்.. ஆனால் இவர் தமிழ் சினி ஃபீல்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார். அவரது புருவங்கள் மகா மைனஸ்.. செயற்கையாக வரையப்பட்ட வளைந்த வில் போன்ற புருவங்கள்  பிளஸ் என நினைத்து விட்டார்கள் போல.. அது அவரது முகம் எப்போதும் கோபமாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர் முகம் ஒரு ட்ரை ( DRY SKIN)ஸ்கின் என்பதால் மேக்கப் போடும்போது பக்கா செயற்கை காட்டுகிறது.. பாப்பாவுக்கு நடிப்பும் வர லேது..  ஸாரி டூ சே திஸ்... 

படத்தில் சுவராஸ்யமான வசனங்கள்

 1.  ரேஷன் கார்டுல என்ன விசேஷம்?

நாங்க ஆட்சிக்கு வந்தா ரேஷன் கார்டுக்கு 5 லிட்டர் சாராயம் தருவோம்.

2.  மிஸ்டர் டாக்டர் பிரகாஷ்.. நீங்க ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆனதும் 10 பேஷண்ட்டை மொத்தமா ஒரே சமயத்துல போட்டுத்தள்ளுனது எப்படி?ங்கறதை விளக்குவீங்களா?

3. தீ விபத்து நடந்தப்ப  எப்படி தப்பிச்சீங்க?

என் கிட்டே  4 வாட்டர் பாக்கெட் இருந்தது.. அதை என் மேல பீய்ச்சி அடிச்சுக்கிட்டேன்.

4. ஜீவா - அர்னாட்ஷா(!!) என்ன சொல்லி இருக்கார்னா நல்ல ஃபிகரா ,டாப்பா இருக்கற பொண்ணுங்களுக்கு டாப் சரியா இருக்காதாம் .. ( மூளை....)

5. பியா - நான் அந்தப்பொண்ணு கிட்டே பேச்சு குடுத்தேன்.. ஒரே நைட்ல ரூ 30,000 சம்பாதிக்கறாளாம்.. சில சமயம் ரூ 50000 கூட கிடைக்குமாம்.சரி.. ஒரு ஆர்வத்துல கேட்கறேன்.. எனக்கு எவ்வளவு கிடைக்கும்?

 ஜீவா - ம் ம் ஒரு நூத்தம்பது ரூபா?

பியா - அடப்பாவி.. அடி வாங்கப்போற.. சரி இவளுக்கு... 

ஜீவா- ஆள் ஹைட் ஜாஸ்தி.. அதுக்காக சும்மா அனுப்பிட முடியுமா..ஏதோ போட்டு குடுத்து அனுப்பலாம்.

கார்த்தி.-- அடச்சே.. என்ன பேச்சு இதெல்லாம்..
http://1.bp.blogspot.com/_Uno_emuDLJc/TIsE3nNxllI/AAAAAAAAIC4/hEiuyjjVjN4/s1600/piaa_bajpai_hot_photo_shoot_pics_images_04.jpg
6.  வில்லன் - தமிழ்ப்பேப்பர்ல தாண்டி வேலை செய்யறீங்க? எதுக்கு இங்கிலீஷ்ல பேசறீங்க?

7. நான் யாருன்னு உனக்குத்தெர்யுமா?

அல்லக்கை

என்ன சொன்னே?

 சாரி,.. அண்ணனோட கை.. 

8.  ஜீவா - ஏய்.. அதெல்லாம் போகட்டும்.. நீ கடிச்சியே ஒருத்தனை.. அல்சேஷன் நாய் பிச்சை வாங்கனும்.. 

பியா - !!!!!!!!!!!!!!!!

9. பிரஸ்னா பாசிட்டிவ் மேட்டர்க்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது.. நெகட்டிவ் மேட்டர் தான் எடுபடும்.. ஒரு கள்ளக்காதல், ஒரு கொலை,இப்படித்தான் நியூஸ் எடுக்கனும்.. 


10. சார்.. பிரஸ்னா கேவலமா நினைக்காதீங்க.. பத்திரிக்கைக்காரங்களால தான் ஆட்சியே மாறுது.. ( ஆமா.. கருத்துக்கணிப்புன்னு எதையாவது போட்டு மக்களை குழப்பறதே இவங்க தானே?)

11.  பியா - தூங்காம கண்ணை மூடிக்கிட்டே கனவு காண்பதும் ஒரு சுகம் தான்.. 

12. நான் ஏன் அவனை லவ் பண்றேன்னா பொண்ணுங்க தானா வந்து பேசுனா பசங்க அடுத்த நிமிஷமே மேல கை போட நினைப்பாங்க.. ஆனா அவன் அப்படி இல்லை...அவன் ஒரு ஜெம்..  ( இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நினைச்சிருக்கலாம்.. அதுக்குள்ள அவசரப்பட்டுட்டியே பொண்ணு.. )

13. டேய்.. எதுக்குடா கொதிக்கறீங்க? அரிசி மூட்டை இருந்தா அங்கே நாலஞ்சு எலிங்க இருக்கத்தான் செய்யும்.. ஆட்சின்னு ஒண்ணு இருந்தா அங்கே ஊழல் இருக்கத்தான் செய்யும்.. ( நாலஞ்சுன்னா ஓக்கே ஒண்ணே முக்கால் லட்சம் கோடின்னா நாட் ஓக்கே)
14. நிருபர் - சி எம் சார்.. உங்களுக்கும், இந்த கொள்கைப்பரப்புச்செயலாளர்க்கும் ஏதோ கனெக்‌ஷன்னு பேசிக்கறாங்களே?

பிரகாஷ்ராஜ் - அவ எம் பொண்ணு மாதிரி.. 

நிருபர் - அப்போ அவங்கம்மாவுக்கும் உங்களுக்கும் கனெக்‌ஷன்னு நியூஸ் போட்டுக்கலாமா/ சார்?   ( எம் ஜி ஆர் - ஜெ நேரடி அட்டாக் )

15. இந்த மாதிரி ஆளுங்கட்சிக்கு எதிரா நியூஸ் போட எவ்வளவு வாங்குனீங்க?

சார்.. நீங்க தான் சொன்னீங்க.. எங்க  நல்லாட்சில எதிர்க்கட்சியே கிடையாதுன்னு.. அப்புறம் எப்படி?

16.  டியர்.. உன் மன்சுல நான் இல்லைன்னா ஏன் உன் கண்ணு கலங்குது?

17. பியா - அடேய்.. நீ என்னை லவ் பண்ணலைன்னாலும் பரவாயில்லை.. ஆனா போற வர்றவளை எல்லாம் லவ் பண்றியே அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல..  ( ஆஹா என்ன ஒரு உயர்ந்த உள்ளம் )
18. இந்த உலகத்துல பழமையான தொழில் ரெண்டே ரெண்டு தான்.. 

1. அரசியல் 2. விபச்சாரம்,.

ஆனா இப்போ அரசியலே விபச்சாரமா போச்சு.. 

19 தம்பிங்களா.. அரசியல்னா சும்மா இல்ல.. சுறா, திமிங்கலம் எல்லாம் பசியோட உலாவற இடம்.. ஜாக்கிரதையா இருக்கனும்.. இல்லைன்னா ஆளைப்போட்டுத்தள்ளிடும்.. ( சரி விடுங்க,. தெரியாம சுறா பார்த்துட்டோம்.. அதையே சொல்லிக்காண்பிச்சுட்டு)


20. நம் தலைவர் ஒரு பாயும் புலி.. நடமாடும் சிங்கம்.. அதனால் தான் நடிகை ஷமீதா ஸ்ரீயை தன் கூடவே வைத்திருக்கிறார்.. ( இந்த இடத்துல நமீதாவை அட்டாக்)

 21. ஷமீதா - ஹாய் மச்சான்ஸ்.. உங்க எல்லாருக்கும் தெரியும்.. எனக்கு ரொம்பப்பெரிய..... மனசுன்னு.. ( நல்ல வேளை.. )

 22 - சி எம் - என்னடா நான் பேசறப்ப கூட்டமே இல்லை..?

தலைவரே .. ஷமீதா போனதும் கூட்டமும் போயிடுச்சு.. நீங்க அவங்க பேசறதுக்கு முன்னாமே பேசி இருக்கனும்..

 அட.. வெளக்கெண்ணெய்.. அதை நீ முதல்லியே சொல்லி இருக்கனும். 

23  இந்தகாலத்துல இளைஞர்கள் எல்லாம் ஐ டி ல ஒர்க் பண்ணத்தான் விரும்பறாங்க.. ஃபாரீன்ல வேலை கிடைச்சா உடனே நாட்டை அம்போன்னு விட்டுட்டு ஓடிடறாங்க.. 

. ஏன்.. உனக்கு விசா கிடைக்கலைங்கற கோபத்துல பேசறியா?
இயக்குநருக்கு பாராட்டு போகும் இடங்கள் (ALL CREDITS GO TO DIRECTER)
1. காலேஜ் ஃபிளாஸ்பேக் காட்சியில்  வரும் கனவில் தூங்கு  பாடல் காட்சியில் அஜ்மல், ஆடு இரண்டு பேரும் ஒரே கிளை இலையை ஆளுக்கு ஒரு முனையில் வைத்து தின்பது...
 
2. அதே பாடல் காட்சியில் காலேஜ் ஃபிகர்களாக வருபவர்கள் நிஜமான காலேஜ் ஃபிகர்ஸாக இருப்பது...

3.  கார்த்திகா தனிமையில் ரூமில் இருக்கும்போது சடார் என ஒரு உருவம் வருவதை சர்ப்பரைஸ் ஷாட்டாக எடுத்தது.. ( தியேட்டரில் பாதிப்பேர் வீல் என கத்தி விட்டார்கள்)

4.  ஒரு சேஸிங்க் சீனில் உயரமான பில்டிங்க்ல இருந்து ஜாக்கிசான் போல பைப்பில் சறுக்கிக்கொண்டே ஜீவா வரும் சீனை டூப் இல்லாமல் ,கட் ஷாட் இல்லாமல் லெங்க்த்தி ஷாட்டாக எடுத்தது..( வெல்டன் ஜீவா)

5. சூப்பர் ஹிட் சாங்கான என்னமோ ஏதோ பாட்டுக்கான லொக்கேஷன், பாடல் படமாக்கப்பட்ட விதம்,கண்ணியமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்.( THE PICTURAISATION OF THE SONG IS SO LOVELY)

இயக்குநருக்கு சில கேள்விகள் ( மைனஸ்)

 1.  படத்தின் ஆதார இடமான மேடையில் குண்டு வெடிக்கும் சீனை பிரம்மாண்டமாக எடுக்காமல் சொதப்பியது ஏன்? அதை லாங்க் ஷாட்டில் துக்ளியூண்டு காட்டி தப்பிச்ட்டீங்களே.. 

2. மொத்தப்படத்திலும் மனித நேயத்தை புகழ்ந்து விட்டு பாடல் காட்சியில் திருநங்கைகளை கிண்டல் செய்யும் ஷாட் எதற்கு?

3. என்னதான் ஒரு நிருபர்க்கு கடமை கண்ணாக இருந்தாலும் விபத்து நடந்தாலும் சரி.. கலவரம் நடந்தாலும் சரி.. ஜீவா  மக்களை காப்பாற்றாமல்
ஃபோட்டோ எடுத்துட்டு இருப்பது ஏன்?

4. படம் செம ஃபாஸ்ட்டா போய்ட்டிருக்கறப்ப எதுக்கு அந்த வெண்பனியோ பெண்மணீயோ மெலோடி பாட்டு? அதுவும் செகண்ட் ஆஃப்ல...?

5. தீவிரவாதிகளை பார்க்க சி எம் தான் மட்டும் தனியே போய்ப்பார்க்க வேண்டிய அவசியம் என்ன? மாட்டிக்கவா?

6. ரிப்போர்ட்டர்க்கான டிரஸ் கோட் படத்தில் ஹீரோ, ஹீரோயின் டாரும் மெயிண்ட்டெயின் பண்ணலையே..? ( ஹீரோ காலர் இல்லாத பனியனுடனும், ஹீரோயின் முதுகில் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடனும் சுத்தறாங்களே?)

7. செகண்ட் ஆஃப்ல வைத்த ட்விஸ்ட் ஓக்கே.. ஆனா அதுக்கான காரணத்தை ஃபிளாஸ்பேக்ல சொல்லி இருக்கனும்.. 

இந்தப்படம் ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று

 ஈரோடு வி எஸ் பி, சண்டிகா , ஸ்ரீ கிருஷ்ணா என 3 தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகி இருக்கு.


Posted on 6:47 AM by karthik_gv

No comments

Friday, April 22, 2011

சென்னை: திமுக குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்  தின் குற்றச்சாட்டுக்கு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முரசொலியில் திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

சாதியில் தங்களை உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டு அந்த இழிவான எண்ணத்தை மெய்ப்பிப்பதற்காக கடும் முயற்சியிலே ஈடுபட்டு அதற்காக பூணூலை உருவிக் கொண்டு போர்க் குரல் கொடுத்த கூட்டத்தை எதிர்த்து அய்யா பெரியாரும்- அறிஞர் அண்ணாவும் அறப்போர் ஆயுதங்களை ஏந்தி ஆயிரக்கணக்கான இளைஞர்களை தம் அணியில் திரட்டி, தன்மான இயக்கத்தின் விரிவாக்கம் கண்ட போது வர்ணாஸ்ரம வெறி கொண்ட வைதீகப் புரியினர் வெகுண்டெழுந்து பெரியார் மீதும், அண்ணா மீதும் கடுங்கணைகளை- காதால் கேட்க முடியாத சுடுமொழிகளை வீசித் தாக்கி வந்த காலந்தொட்டு- நானும் கவனித்து வருகின்றேன்; உன் போன்றோரும் கவனிக்க தவறியிருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளேன்.

அருவறுக்கத்தக்கதும்- ஆபாசமானதுமான அர்ச்சனைகளை உயர் வர்க்கத்தார் என கருதிக் கொண்டிருப்பவர்கள் அன்றும் சரி- இன்றும் சரி - நம்மீது பொழிவதை நிறுத்திக் கொள்ளவில்லை. அவற்றுக்கு மறுப்பு கருத்தாக நாம் எழுதியோ- பேசியோ அவர்களுக்கு விளக்கம் அளிக்கும்போது எந்தவொரு நிலையிலும்- தரம் தாழ்ந்து அவர்களை விமர்சிக்கும் முறையை கையாண்டதில்லை.

எதிர் தரப்பினரின் எரியீட்டிகள் பாயும் போதெல்லாம் எவ்வளவு பவ்வியமாக- பக்குவமாக- பண்பாடு கெடாமல் பழைய உறவுக்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடாமல் துடிக்கும் இளமை வாய்ந்த வாலிபனாக நான் விளங்கிய காலத்திலிருந்து- இன்று வரை மாற்றுக் கட்சித் தலைவர்களை- மாற்று முகாமிலே உள்ள நண்பர்களை - மதிக்கும் போக்கினை துளியளவும் கை விடாமல் கடைப்பிடித்திருக்கிறேன் என்பதும்- இன்னமும் கடைப்பிடித்து வருகிறேன் என்பதும் என் இயல்பு மட்டுமல்ல- என்னை ஆளாக்கிய பெரியார்- அண்ணா ஆகிய இருவரின் வழியில் நடந்து நாம் பெற்றுள்ள வளர்ச்சியுமாகும்.

எதிர் வரிசை இயக்கங்களில் குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் மீது- அதன் தலைவர்கள் எனப்படுவோர் சிலர் மீது- எத்துணை வருத்தங்கள் அல்லது கோபங்கள் ஏற்பட்டாலும், அவற்றை வெளிப்படுத்தும் போது- அவர்கள்பால் கொண்டிருக்கும் அன்பையும்- பழைய நட்பையும் என்றைக்கும் நான் மறந்தவனல்லன்.

அண்ணன் ஜீவானந்தம் என்றும்- பெரியவர் மணலி என்றும்- மரியாதை கலந்த அன்பு வைத்தே அவர்களிடம் பழகியிருக்கிறேன். இன்னமும் நல்லகண்ணு போன்றவர்கள் அந்த வரிசையில் தான் என் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த உண்மையும், உயிர்நாடிகளில் ஒன்றாக நாம் ஏற்றுக் கொண்டுள்ள "கம்யூனிசம்'' என்ற கொள்கையும்- என்னை இயக்கிக் கொண்டிருக்கிற குன்றாத குருதியோட்டமாகவே திகழ்வதை அக்கட்சிகளின் நண்பர்கள் பலரும் அறிவார்கள். அத்தகைய நண்பர்களில் ஒருவராகத்தான் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்தை நான் கருதியிருக்கிறேன்.

அவர் எனக்கு அறிமுகமான காலத்திலிருந்து இடையிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் எங்கள் நட்பை என்றைக்கும் பாதித்ததில்லை.

திராவிட இயக்கத்தை- பெரியாரை- அண்ணாவை; விபூதி வீரமுத்துக்கள் போன்ற நாராச நடையினர் விமர்சித்துத் தாக்கிய காலத்தை நாம் மறந்து விட முடியாத அளவுக்கு பாண்டியன்களும், ராமகிருஷ்ணன்களும் நரகல் நடையில் நம்மை இழித்தும் பழித்தும் பேசுகிறார்களே என எண்ணும்போது கூட, தோழர் பிரகாஷ் காரத் போன்றவர்கள்- எச்சூரி போன்றவர்கள் அந்த அணியில் இருக்கிறார்களே என்பதை நினைத்து- இவர்களது ஏச்சுப்பேச்சுக்களை தரக்குறைவான தாக்குதல்களை நான் பொருள்படுத்தாமல் இருந்து விடுவதுண்டு.

காரணம் இவர்களையெல்லாம் விட கம்யூனிச கொள்கை மீது என்னை கவர்ந்த அம்சங்கள் பல இருப்பது தான் என்பதை நானே அவ்வப்போது வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆனால் நான் வியப்படைந்து, விழி கலங்கும் நிலையில் படித்த ஒரு செய்தி பிரகாஷ் காரத் பெயராலேயே "தீக்கதிர்'' ஏட்டில் வெளிவந்திருப்பதைப் பார்த்து, திகைத்து திடுக்கிட்டேன்.

"தீக்கதிர்'' ஏட்டில் என்னைப்பற்றியும்- என் தலைமையில் உள்ள கழகத்தைப் பற்றியும் இழிமொழிகள், ஏசல் மொழிகள் வெளிவருவது வழக்கம் தான் என்றாலும், அந்த வழக்கத்திற்கு மாறாக இந்தச் செய்தியின் கர்த்தாவாக நண்பர் பிரகாஷ் காரத் இருப்பது தான் என்னை திடுக்கிட செய்த ஒன்றாகும்.

"மாநில சுயாட்சி மற்றும் மத்திய-மாநில உறவுகளுக்கு குரல் கொடுத்த கட்சிகளில் முன்னோடியாக விளங்கியது தி.மு.க. அத்தகைய பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சி மிகவும் தரம் தாழ்ந்து இன்றைய தினம் ஒரு குடும்ப முன்னேற்ற கழகமாக மாறி, கொள்ளையடித்த பணத்தை தேர்தலிலும் பயன்படுத்தி, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயல்வதைப் பார்க்கும்போது, மிகவும் பரிதாபமாக இருக்கிறது''. இந்த வரிகள் பிரகாஷ் காரத்தால் கூறப்பட்டவை.

அவரது இந்த கூற்றுக்குப்பதில் சொல்ல ஆரம்பித்து குடுமி பிடி சண்டையில் ஈடுபட நான் விரும்பவில்லை. ஏனெனில் மூன்றாண்டுகளுக்கு முன்பு கூட அவரும், அவருடன் சில கம்யூனிஸ்டு கட்சி தளபதிகளும் சென்னையில் என் வீட்டிற்கே வந்து கொள்கை அடிப்படையிலான பல கருத்துக்களையும்- இந்திய தேசிய அடிப்படையிலான பல கருத்துக்களையும்- காங்கிரஸ்  கட்சியுடன் உறவு உண்டா இல்லையா- இனியும் நீடிக்குமா- என்பன போன்ற பல கருத்துக்களையும்- அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம்  போன்ற கருத்துக்களையும் மணிக் கணக்கில் உரையாடி விவாதித்திருக்கிறோம்.

ஆனால் அந்த சமயங்களில் என் இதயத்தில் நல்லதோர் இடத்தை பெற்றிருந்த அந்த நண்பர் காரத் இப்போது ஏன் இத்தகைய நச்சு நினைப்பினர் ஆனார் என்பது தான் எனக்கு புரியவில்லை- என்றாலும் நாம் கட்டிக் காத்து வரும் அண்ணாவழி- பெரியார் வழி- பண்பாட்டு சங்கிலியில் ஒரு கரணை கூட தேய்ந்து அறுந்து விடாத அளவுக்கு அந்த நண்பரோடு பழகி வந்திருக்கிறேன். ஆனால் கம்யூனிஸ்ட் ஏட்டில் இந்த வாசகங்கள் அவர் பெயரால் வெளி வந்த பிறகு "அவரா இவர்?'' என்ற கேள்விக்கு பதில் காண முடியாமல் துடித்துத்தான் போகிறேன்.

அவர் எழுப்பியுள்ள "குடும்ப முன்னேற்றக் கழகம்'' என்ற குற்றச்சாட்டுக்கு அவரோடு இணைந்து இயக்க பணியாற்றும் பிருந்தா காரத்தே விடையாகவும், விளக்கமாகவும் விளங்கும்போது அந்த குற்றச்சாட்டை தவிர்த்து- "ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயல்வதை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது''-என்று அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு மாத்திரம் பதில் சொல்ல விரும்புகிறேன்.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கருணாநிதி முயலுவதை பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது என்கிறார் அந்த நண்பர். கொள்கை அடிப்படையில் நானும், என் தலைமையில் உள்ள கழகமும் விடாப்பிடியாக இருந்து இலங்கை பிரச்சனையிலும் - மத்திய மாநில உறவுகள் பிரச்சனையிலும் - "நெருக்கடி கொடுமைக்கு ஈடுகொடுத்து இந்தியாவிலேயே சுதந்திர காற்றை சுவாசிக்கும் இடம் தமிழ்நாடு  தான்'' என்று தோழர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டே சென்னை கூட்டத்தில் பாராட்டிய அளவுக்கு- நானும், என் தலைமையிலே உள்ள கழகமும் நிமிர்ந்து நின்றபோது அதைப் பார்க்காமல் இருந்து விட்டாரே- அல்லது பார்த்தும் இப்போது அதை மறந்து விட்டாரே காரத் என்பதை நினைக்கும்போது தான் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

தமிழகத்தைப் போல்..தேர்தல் ஆணையத்துக்கு காரத் கோரிக்கை: 

இந் நிலையில் தற்போது நடைபெற்றுவரும் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் கறுப்புப் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு பிரகாஷ் காரத் கோரியுள்ளார்.

தமிழகத்தைப் போல அனைத்து சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டால் அதை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

Posted on 8:32 AM by karthik_gv

No comments

Sunday, April 17, 2011

 


1.முதல்வர் கருணாநிதி: கள்ளக் கையெழுத்துப் போட்டோர், லஞ்சம் வாங்கியோர், அபராதம் செலுத்தியவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது ராஜராஜன் காலத்தில் விதிமுறையாக இருந்தது


  சட்னி-சாம்பார் -தலைவா,ஆனா ஆ.ராசா காலத்துக்குப்பிறகு அது வழக்கொழிஞ்சு போச்சே? ஏனுங்கோ?2.தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: காங்கிரஸ் கட்சியில் கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாது. கூட்டணி பற்றி நானே பேசக்கூடாது. அந்த முடிவு சோனியாவிற்கு மட்டும் தான் உண்டு. எனவே, இனிமேல் கூட்டணி பற்றி காங்கிரஸ் கட்சியினர் பேசமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

சட்னி-சாம்பார் - அண்ணே,தலைவர் நீங்களே கூட்டணி பற்றி பேசக்கூடாதுன்னா அப்புறம் எதுக்கு அந்த தலைவர் போஸ்ட்டிங்க்?


3.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:
விஜயகாந்த் கட்சி உட்பட பல கட்சிகள் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், காங்கிரஸ், மக்களின் உரிமைக்காகப் போ ராடி வரும் இயக்கம். வரும் 2016க்குள் நாம் மூன்று பெரிய தேர்தல்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல், இந்த ஆறு ஆண்டு காலமும் கட்சியை வலுப்படுத்த மேலிடம் முன்வந்தால், 2016ல் ஆட்சி அமைக்க முடியும்.

சட்னி-சாம்பார் - யானை போய் குதிரை வந்தது டும் டும் டும்,குதிரை போய் கழுதை வந்தது டும் டும்,2011 போய் 2016 வந்தது டும் டும் டும்


 

4.சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பேச்சு:
 கருணாநிதி கூறிய வாக்குறுதியை நம்பி தமிழக மக்கள் ஓட்டளித்தனர். இன்று குடும்பத்தினர் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கின்றன.

  சட்னி-சாம்பார் - அது வேணா உண்மைதான்,கலைஞர் குடும்பத்துக்கு எல்லா உதவிகளும் கிடைக்குது.5.   திருமணத்துக்கு பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் - காதலன் பிரபுதேவா

  சட்னி-சாம்பார் -ஆம்,டைவர்ஸுக்குப்பிறகு நடிப்பார்.(இத்தனை நாளா நடிச்சாரா?)
6. இந்த ஆண்டு எனக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. நான் சந்தோஷமா இருக்கேன். என் சந்தோஷத்தை கொடுக்காதீங்க  - நயன்தாரா


  சட்னி-சாம்பார் -ஓப்பனிங்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஃபினிஷிங்க்லதான் பிரச்சனை ஆகிடுது.போன வருஷம் சிம்பு,இந்த வருஷம் பிரபுதேவா,அடுத்த வருஷம் உங்க மனசை அசத்தப்போவது யாரு?7.பிரபுதேவா பெயரை நான் பச்சை குத்தியிருக்கிறேன். எதற்காக அவர் பெயரை பச்சை குத்தியிருக்கிறார் என்று பலரும் கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்னதான் நினைக்கிறார்கள் என புரியவில்லை. நமக்காக வாழ்றவங்களுக்காக நாம வாழுறோம். இதுதான் உண்மை. இது எல்லாருக்குமே பொருந்தும். அதைத்தான் நானும் செய்கிறேன். எப்‌போதுமே நான் மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு கவலைப்படுறதில்லை.

-நயன்தாரா
சட்னி-சாம்பார்-நீங்க வேணா பாருங்க கஜினி சூர்யா மாதிரி பல பேரை பச்ச குத்தி கலக்கப்போறீங்க.

Posted on 7:31 AM by சட்னி

No comments

asa

Blog Archive

There was an error in this gadget