ஜெயம் ரவி, பரத் உள்ளிட்ட நட்சத்திரங்களும் தேர்தல் களத்தில் குதிக்கிறார்கள். சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிக்கு ஓட்டு வேட்டையாட சினிமா நட்சத்திரங்கள் பலரையும் விலைபேசி வருகிறார்கள்.

கடந்த தேர்தலில் தமிழக அரசியல் பற்றி எதுவுமே தெரியாத சிம்ரன் உள்ளிட்ட நடிகைகள் கூட பிரசாரத்தில் ஈடுபட்டு ஓட்டு வேட்டையாடினார்கள். இந்த ‌தேர்தலிலும் பல நட்சத்திரங்கள் ஓட்டு வேட்டையாட இருக்கிறார்கள். முன்னணி நடிகரான விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக குரல் கொடுக்கக்கூடும் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.