http://makkalavaitherdhal2009.files.wordpress.com/2009/03/subramaniam-swamy.jpg?w=257&h=300 

இன்றைக்கு வெளியான ஜூனியர் விகடனில் வந்த அம்மா பற்றிய நியூஸ் பதட்டத்தை கிளப்பியது.அ தி மு க மத்தியிலும் சரி சாதாரண அரசியல் ஆர்வலர்களும் சரி , இந்த செய்தியை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவித்தனர்...


 ஏனெனில் வெளியான இதழ் நம்பகத்தன்மை மிக்க விகடன் குரூப் நியூஸ்.. ஆனால் சொன்ன ஆள் அரசியல் காமெடியன் சு சுவாமி....அவரது பேட்டியும் எனது கமெண்ட்டும்.......


1. ''அ.தி.மு.க. வேட்பாளர் லிஸ்ட் முதலில் வெளியிட்டது எனக்குத் தெரியாது என்று ஜெயலலிதா சொல்லியதில் இருந்தே, கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்கிற பரிதாப நிலைமையைப் புரிந்துகொள்ளலாம்! இரண்டாவது லிஸ்ட் இப்போது வெளி வந்து இருக்கிறது. இதாவது அவருக்குத் தெரியுமா, என்பது போகப் போகத்தான் நமக்குத் தெரியும்.

இதென்னங்க பெரிய பிரமாதம், ஏப்ரல் 14 க்குப்பிறகு கேப்டனே யார்னு தெரியாதுன்னு சொல்லப்போறாங்க..அவர் வந்து என்னை சந்தித்ததே எனக்கு நினைவில் இல்லைன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் விடப்போறரா ?இல்லையா?ன்னு பாருங்க...
 http://thatstamil.oneindia.in/img/2008/12/sasikala-jayalalitha-250.jpg

2. தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ஜெயலலிதா பக்கம் வெற்றி என்கிற நிலை இருந்தது. இப்போது மாறி வருகிறது. போயஸ் கார்டனில் ஜெயலலிதா கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட்டில் இருக்கிறாரோ என்கிற சந்தேகம் எனக்கு எழுகிறது. 'மன்னார்குடி  கும்பல் பிடியில்... நவ துஷ்டக் கிரகங்களின் பிடியில்... ராகு கேது பிடியில் ஜெயலலிதா சிக்கிக்கொண்டு தவிக்கிறாரோ?' என்று சந்தேகப்படும் அளவுக்கு, அடுத்தடுத்த குழப்பங்களை செய்து வருகிறார்.

நவக்கிரகம்கறீங்க.. ஆனா எனக்கென்னவோ ஒரே ஒரு கிரகம் தான் அவரைப்பிடிச்சு ஆட்டுவிக்குதுன்னு நினைக்கறேன்..  அது சசிகலா ...அந்த கிரகம் இல்லைன்னா அம்மா செம ஃபார்ம்ல இருப்பாங்க.

3. மெஜாரிட்டியான ஸீட்டுகளைப் பிடித்து, காங்கிரஸுடன் தேர்தலுக்குப் பிறகு கூட்டணிவைக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் திட்டம். அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான், முதலில் ராமதாஸைக் கூட்டணியைவிட்டு விரட்டினார். இப்போது வைகோவையும் அனுப்பிவிட்டார். விஜயகாந்த்தையும் அலைக்கழித்து விரட்டப் பார்த்தார். இப்படித் தப்பும் தவறுமாக ஜெயலலிதா அரசியலில் முடிவெடுப்பதாக வெளியில் பிரகடனப்படுத்தி, அவரது இமேஜை சீர் குலைக்கும்விதமாக செயல்படுகிறது அந்தக் கூட்டம்.

காங்கிரஸ் கூட கூட்டணி வெச்சா அம்மா இமேஜ் டேமேஜ்தான் ஆகும்.
ராம்தாஸ் புற்றுநோய் மாதிரி.. விரட்டுனதே நல்லது...கேப்டன் இப்போ அம்மா கூட இருக்கறது நல்லதுதான்..  

http://thatstamil.oneindia.in/images25/jaya-sasi-450.jpg

4. அ.தி.மு.க-வில் எந்தக் கட்சிகளை சேர்க்க வேண்டும்? யாரை கழட்டிவிட வேண்டும்? ஜெயலலிதா யாருடன் போனில் பேச வேண்டும்? யாரை நேரில் சந்திக்க வேண்டும்? இன்றைக்கு ஜெயலலிதா என்ன சேலை கட்ட வேண்டும்? என்பது உட்பட அனைத்து விஷயங்களையும் கன்ட்ரோல் பண்ணுவது சசிகலாதான்!'' 

 மகாபாரத்துக்கு ஒரு சகுனி, ராமாயனத்துக்கு ஒரு கூனி, போயஸ் தோட்டத்துக்கு ஒரு சசிகலா...


5. , ''சசிகலா சொல்வதைச் செய்யும் ரோபோ பொம்மைதான் ஜெயலலிதா. சுயமாக அவரால் எதையும் செய்ய முடியாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்பற்றி இனி ஜெயலலிதா எங்கே பேசப்போகிறார்? பொறுப்பான எதிர்க்கட்சி என்கிற வகையில், முதலில் ஜெயலலிதா என்னுடன் ஆலோசனை செய்து இருக்கலாம். ஆனால், செய்தாரா? நானும்கூட, 'சசிகலா போயஸ் கார்டனில் இருக்கும் வரை பேசப் போவது இல்லை' என்று முடிவு எடுத்து இருக்கி​றேன். அதனால்தான், நானும் ஜெயலலிதாவுடன் தொடர்புகொள்ளவே இல்லை. எங்கள் இருவருக்கும் இடையே விரிசல் விழுந்துவிட்டது!'' 

 அம்மா ஒரு கண்ணாடி மாதிரி.. யார் வந்து மோதுனாலும் விரிசல் விழத்தான் செய்யும்...


6. ''வைகோ இருந்தால், தேர்தலுக்குப் பிறகு காங்கிர​ஸுடன் கூட்டணி சேர முடியாதே? அதனால்தான், கழட்டிவிட்டார். கண்டிப்பாக தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு, புதிய கூட்டணி ஏற்படப்போகிறது. எம்.எல்.ஏ-க்கள் மியூசிக்கல் சேர் விளையாட்டு, குதிரை பேரங்கள் நடக்கும். முடிவில், ஜெயலலிதாவோ, கருணாநிதியோ... முதல்வர் பதவியில் அமர மாட்​டார்கள். அமரப்போவது யார் என்கிறீர்களா? காங்​கிரஸ்! அதற்காகத்தான் சசிகலா மறைமுகமாக அரசியல்​ரீதியாக காய் நகர்த்துகிறார்!''

இதென்ன புதுக்கதை?காங்கிரஸ்க்கு டெபாசிட்டே கிடைக்காம கேவலப்படப்போகுது....
 http://img.dinamalar.com/data/uploads/WR_316760.jpeg

'7. 'சொன்னால் நம்ப மாட்டீர்கள். தமிழக அரசியலில் என்ன நடக்கப்போகிறது என்பது முடிவானதே லண்டனில்! கடந்த சில நாட்களாக டெல்லியை சேர்ந்த முக்கிய அரசியல் வி.வி.ஐ.பி. ஒருவர் லண்டனுக்கு ஆஸ்துமா சிகிச்சைக்காகப் போனார். அங்கே புலிகள் ஆதரவாளர் ஒருவரை அவருக்கு ஏற்கெனவே தெரியும். அந்தத் தொடர்பு மூலம், சென்னையில் உள்ள அ.தி.மு.க. பிரமுகரை அணுகி, தேர்தலுக்குப் பிறகு நடக்கவிருக்கும் எதிர்கால அரசியல் பேச்சுவார்த்தை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டுவிட்டது. அதைத்தான் நான் சொல்கிறேன்!'' 

 பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்றாரே...8. ''ஜெயலலிதாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுத்து டெல்லி அரசியலுக்கு அனுப்பிவிடுவார்கள். இங்கே சசிகலாவின் திரை மறைவு அரசியல் தொடரும். அதன் மூலம் வரும் பலாபலன்களை நிர்வகிப்பார். அவரது டம்மிகள் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். மிடாஸ் மதுபான உற்பத்தி கம்பெனியானது சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்களால் நடத்தப்படுவது. அந்த நிறுவனத்துக்கு கடந்த ஐந்து வருட தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைத்தது என்று கேட்டால், மயக்கமே போட்டுவிடுவீர்கள். அந்த அளவுக்கு தி.மு.க-வுடன் தொழில் முறைத் தொடர்புகள் உண்டு. இவை எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியுமா... தெரியாதா? என்று எனக்குத் தெரியாது. ஆனால், நடந்தது உண்மை. இதைப்போலவே, தேர்தலுக்குப் பிறகும் நான் சொன்னது நிச்சயமாக நடக்கும்!''


விட்டா சசிகலா ,கலைஞர் கூட்டு சதின்னு சொல்லிடுவீங்க போல....