தமிழ் சினிமாவின் சிரிப்பு நடிகர் சந்தானம், செக்ஸ் சர்ச்சையில் சிக்கிய சாமியார் நித்தியானந்தாவை அவரது ஆசிரமத்தில் சந்தித்துப் பேசி ஆசியும் பெற்றுக் கொண்டார்.


நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமான செயல்களில் ஈடுபட்டு கையும் களவுமாக வீடியோவில் சிக்கியவர் நித்தியானந்தா. பின்னர் நான் அவன் இல்லை என்ற ரீதியில் மறுத்தார். அதேபோல நடிகை ரஞ்சிதாவும் அதை மறுத்தார். ஆனால் அவர்கள் இருவரும்தான் அந்த படுக்கை அறையில், வீடியோ காட்சியில் உள்ளனர் என்று கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். 
santhanam and Nithyananda

இவர்கள் தொடர்பான வழக்கு கர்நாடக கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

நித்தியானந்தா மீது பாலியல் புகார்கள் எழுந்தபோதிலும் அவரை இன்னும் நம்புவோர் இருக்கத்தான் செய்கின்றனர். டிவி நடிகை மாளவிகா தொடர்ந்து நித்தியானந்தாவுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார். அவரது ஆசிரம நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நடிகை ரஞ்சிதாவும் இப்போது பகிரங்கமாகவே வெளியில் வர ஆரம்பித்து விட்டார்.

இந்தநிலையில், தமிழ் சிரிப்பு நடிகர் சந்தானம் நித்தியானந்தாவை சந்தித்துப் பேசி ஆசி பெற்றுள்ளார்.

சினிமாப் பட ஷூட்டிங்குக்காக பெங்களூர் போயிருந்தாராம் சந்தானம். அப்போது நித்தியானந்தாவை பார்க்க விரும்பியுள்ளார். இதையடுத்து அவரும், படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்டும் சேர்ந்து போய் நித்தியானந்தாவை அவரது ஆசிரமத்தில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

அடுத்த பட காமெடியில் நித்தியானந்தாவை வைத்து ஏதேனும் வசனம் பேசத் திட்டமா சந்தானம்?