வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Monday, March 21, 2011

ஃபிகர் மடக்குவது எப்படி?- 1

ஃபிகர் மடக்குவது எப்படி?மேட்டருக்கு வர்ரதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஃப்ளேஷ்பேக்...இந்த ஹீரோவெல்லாம் படத்துல நான் ஏன் தாதாவானேண் சொல்லுவாங்கள்ளே அந்த மாதிரி.......... ரவுண்டு ரவுண்டு ரவுண்டு...ஃப்ளாஷ்பேக் ஆரம்பம்...நம்ம சட்னி சாம்பார் எடிட்டர் இருக்காரே ... ஒவ்வொரு வார்த்தையிலயும் முள்ளு வக்கிறதுல கில்லாடி..தேமேன்னு அசின் படத்தப் போட்டுட்டு உக்காந்திருந்த என்னப் பாத்து"டேய்..நீ என்ன இப்பல்லாம் இந்த நடிகைகள் ஃபோட்டோ போட்டு கேலரி போடறதோட உக்காந்துக்கறே!... வந்து சேர்ந்தப்ப "நான் பெரிய ரைட்டர்.. ஆர்டிகிள் எல்லாம் எழுதுவேன்னு சொன்ன? இப்ப வெறும் கேலரி போட்டு ஓட்டுற ? இந்த நடிகைகள் படத்த யாரு வேணா எடுத்துப் போடலாம்...நீ எதுக்கு இங்க தண்டத்துக்கு?"

"அந்த படமெல்லாம் யாரு வேணா போட முடியாது...அதையெல்லாம் ஒரு கலா ரசனையோட செலக்ட் பண்ணி சரியான ஏங்கிள்ல போடணும்" என்று சொல்ல நினைத்தேன்.. ஆனா ஏற்கனவே பக்கத்திலிருந்த சப் எடிட்டர் ஷஹி "அந்த கேலரி போடும் ஜந்து நீ தானா?" என்பது போல் பார்க்க.. தலையைக் குனிந்து கொண்டேன்...

இரண்டு நாள் கழிச்சு நான் எடிட்டர் ரூமுக்கு அண்ணாமலையில் ரஜினி எம்.எல்.ஏ வீட்டுக்குள்ள என்ட்ரி ஆவதைப் போல என்ட்ரி கொடுத்தேன்..

சீரயஸா மன்மோகன் சிங் பத்தி தலையங்கம் எழுதிட்டிருந்த எடிட்டர் என்னப் பாத்தாரு..
"சார்..ஆர்டிக்கிள் எழுத சொன்னீங்களே..ஒரு தொடரே எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்!"
எடிட்டர் என்னை ஆச்சர்யமா பாத்தாரு... "என்ன டைட்டில்?"
சப் எடிட்டர் ஷஹி அன்னிக்கு லீவு என்பதை உறுதி செய்து கொண்டு நான் கொஞ்சம் தயங்கி தயங்கி பேரை சொன்னேன்..
டைட்டில் கேட்டதும் எடிட்டர் என்னை கேவலமாய் பார்த்தார்..
"இல்ல எடிட்டர் சார்.. இந்தக் காலத்துலயும் நிறைய பசங்க அவங்க ஃபீலிங்க்ஸை மனசுக்குள்ள வச்சிக்கிட்டே தவிக்கிறாங்க.. ஐஞ்சு பேரு பொண்ணுங்களோட கடல போடறான்னா அதப்பாத்து பத்து பேரு "அவனுக்கு மச்சம்டா"ந்னு பொருமறான்.. அதுவே அவனுக்கு அந்த வாய்ப்பு வந்தா என்ன பேசுறதுன்னே தெரியாம " டு யு லைக் ரஜினிகாந்த்?" னு சொதப்புறான்... அதனால பொண்ணுங்க மனச புரிஞ்சுக்கிட்டு அவங்களை எப்படி கவர் பண்றது? எப்படி அவங்க மனசுல இடம் பிடிக்கறதுன்னு ஒரு தொடர் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு ரொம்ப அவசியம்!"

நான் பட பட வெனப் பொரிய ...
"ஏதோ செஞ்சு தொலை!" என்று எடிட்டர் ஆசீர்வதிக்க..
ரவுண்டு ரவுண்டு ரவுண்டு.. ஃப்ளேஷ்பேக் முடிந்தது...

இதோ "ஃபிகர் மடக்குவது எப்படி?" தொடர் ஆரம்பம்...

ஹலோ ஆரம்பத்துலேயே சொல்லிட்டேன்...
பிசா ஹட்டுல கடல போட்டு டிஸ்கோதேவுல டேன்சப் போட்டு மஹாபலிபுரம் டேட்டிங் போற பார்டில்லாம் அப்படியே அப்பிட் ஆய்டுங்க.... இது பொண்ணுங்கன்னாலே ஷையா ஃபீல் பண்ற நல்ல பசங்களுக்கு.... ஓகே...

ஸ்டார்ட் ம்யூசிக்... பூ மிதிக்க அண்ணன் ரெடி.. இங்க பூசு... ஆ இங்க பூசு.....

( கண்ணுங்களா..ஏற்கனவே என்ன இங்க ஒப்புக்கு சப்பாணியாத்தான் வச்சிருக்காங்க நீங்கல்லாம் ஓட்டப் போட்டாத்தான் தொடர்ந்து ஃபிகரப் பத்தி எழுத வுடுவாங்க...)

0 comments:

Post a Comment