சினிமாவில் நம்பர்-1 இடத்தை பிடிக்கத்தான் ஒவ்வொரு நடிகையும் ஆசைப்படுகிறார்கள். சிலர் அப்படிப்பட்ட விருப் பம் தனக்கு இல்லை என்று வெளிப்படையாக பேசலாம். ஆனால் உள்ளூருக்குள் அந்த இடத்தை பிடிக்கத்தான் போராடுகிறார்கள்.
எனக்கும் நம்பர்-1 நடிகையாக ஆசை இருக்கிறது. அந்த இடத்தை நிச்சயம் பிடிப்பேன். அதற்காக ரொம்ப கஷ்டப்பட்டு நடித்து வருகிறேன். நடிகைகளுக்கு தேசிய விருது பெறுவதுதான் கனவு எனக்கு அந்த கனவு நிறைவேறி விட்டது.
சிறந்த நடிகை என்பதையும் நிரூபித்து விட்டேன். இனிமேல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமாவில் நீடிப்பதற்கு கவர்ச்சி அவசியம்.
நானும் கதைக்கு தேவையென்றால் அதுபோன்று நடிப்பேன். தேவை இல்லாமல் கவர்ச்சி காட்ட மாட்டேன். தெலுங்கு பட உலகில் நிறைய வாய்ப்புகள் வருகிறது.