வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, March 31, 2011

'அண்ணே, என் பேரு பாண்டி இல்லை'!..தேமுதிக வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த்!!

தர்மபுரி: வழக்கமாகவே நிதானம் இழந்த நிலையிலேயே காணப்படுபவர் தேமுதிக தலைவர் விஜய்காந்த்  . இதனால் தான் அவரை குடித்துவிட்டு சட்டசபைக்கு வருவதாக அவரது கூட்டணியின் தலைவியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே குற்றம் சாட்டினார்.


இந் நிலையில் நேற்று தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது கட்சி வேட்பாளரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அடித்து, அறைந்த விஜய்காந்த், அவரை 'கும் கும்' என்று குத்தினார்.

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர், அண்ணே என் பேரு பாண்டியன் இல்லைன்னே.. பாஸ்கர் என்று திருத்தினார்.

இதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்கும்படி மைக்கில் சத்தமாகவே பாஸ்கர் சொல்லிவிட, உடனே நிதானம் இழந்தார் விஜய்காந்த்.

ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்தார். அவை வேனுக்குள் தள்ளி முகத்திலும் முதுகிலும் குத்து குத்து என்று குத்தியதோடு, சரமாரியாக அறைந்தார்.

இதையடுத்து அந்த வேட்பாளர் வேனுக்குள்ளேயே பம்மியபடி, கைகளால் விஜய்காந்தின் அடிகளை தடுத்தார். ஆனாலும் விஜய்காந்த் முகத்தைத் தேடித் தேடி அவரைக் குத்திவிட்டு, அந்த இடத்தைக் காலி செய்தார்.

விஜயகாந்த்தின் இந்த கேவலமான செயல் அப் பகுதியில் நின்றிருந்த மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.

எங்களுக்கு ஏதாச்சும் நடந்தா ஜெயலலிதா தான் பொறுப்பு: கனிமொழி பேச்சு

Kanimozhiதிருச்சி: எங்களில் யாருக்கு எது நடந்தாலும் அதற்கு முழு பொறுப்பு ஜெயலலிதா தான் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.


திருச்சி மாவட்டம், துறையூரில் திமுக வேட்பாளர் என். பரிமளா தேவியையும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் என். செல்வராஜையும் ஆதரித்து கனிமொழி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

திமுக கூட்டணியில் ஒன்றாகச் சேர்ந்து வெற்றிக்காக பாடுபடுபவர்கள் இணைந்துள்ளனர். ஆனால் அதிமுக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கே நன்றாகத் தெரியும். கூட்டணி பற்றி முடிவு செய்யும் முன்பே அதிமுக போட்டியிடும் பட்டியல் வெளியானது. 

ஜெயலலிதா யாரைம் மதிக்காதவர். இத்தனை ஆண்டுகளாக அவருடன் இருந்த மதிமுகவை தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு வெளியேற்றியவர் ஜெயலலிதா.

அங்கிருந்து வெளியே வந்த பிறகு இன்னும் ஜெயலலிதாவுக்கு ஆணவமும், அகங்காரமும் குறையவில்லை என்கிறார் வைகோ. அவருக்கு எப்பொழுதுமே ஆணவமும், அகங்காரமும் குறையவே குறையாது என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.

கலைஞர் கொண்டு வந்த பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா. உழவர் சந்தைகளை மூடியவர் ஜெயலலிதா. சத்துணவில் முட்டை போடும் திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா. இந்த திட்டங்கள் எல்லாம் மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்புதான் மீண்டும் செயல்படுத்தப்பட்டன. 

தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான திருமண உதவித் தொகை ரூ. ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும், ஏழை மக்களின் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். 

வீட்டுக்கு 4 ஆடுகள் இலவசமாக கொடுத்து அவர்களை மீண்டும் ஆடு மேய்க்கச் சொல்கிறார் ஜெயலலிதா.

வேளாண் இடு பொருள்கள் வீட்டைத் தேடி வரும் என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார். சொன்னதைத் தாண்டியும் செய்வார். 

நாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கிறோம். ஆனால் ஜெயலலிதாவோ பொய் உரைகளையும், தவறான பிரசாரத்தையும் செய்கிறார். முதல்வர் கருணாநிதியை இகழ்ந்து பேசுகிறார். மக்களை ஏமாற்ற பார்க்கிறார். 

நாகையில் பேசிய ஜெயலலிதா, உடல் நலக் குறைவு என்று சொல்லி கருணாநிதி மருத்துவமனையில் படுத்துக் கொண்டு அனுதாபம் தேட முயற்சிப்பதாக கூறியிருக்கிறார்.

உடல் நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. உடன்பிறப்புகளின் முகத்தை பார்த்தாலே, உடன்பிறப்புகளின் கைத்தட்டலைக் கேட்டாலே உடல் நலக் குறைவு சரியாகிவிடும். 

அடுத்ததாக கனிமொழியை தாக்கிவிட்டு, அனுதாபம் தேட முயற்சிப்பார்கள் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். தந்தையே மகளைத் தாக்குவாரா? 

நான் யாரையும் நம்பி இங்கு வரவும் இல்லை, பேசவும் இல்லை. உடன்பிறப்புகளை நம்பித்தான் இங்கே வந்திருக்கிறேன். இந்த உடன்பிறப்புகளைத் தாண்டி தாக்கும் தைரியம் யாருக்கும் இல்லை. 

எங்களில் யாருக்கு எது நடந்தாலும் அதற்கு காரணம் ஜெயலலிதா தான் என்றார்.

பெண்கள் முன்னேற்த்தில் அக்கறை கொண்ட கருணாநிதி: 

திமுக ஆட்சியில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

திருச்சியில் நடந்த விழா ஒன்றில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கனிமொழி எம்.பி. தலைமையில் திமுகவில் இணைந்தனர். 

அப்போது கனிமொழி பேசியதாவது, 

தமிழகத்தில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூட பயந்த காலம் உண்டு. அந்த நிலைமையை மாற்றி பெண்களை தைரியமாக நடமாடச் செய்தவர் கருணாநிதி. அவர் தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்க சட்டம் கொண்டு வந்தார். தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான திருமண உதவித்தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரமாகவும், கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தருவதாக அறிவித்துள்ளார்.

இது தவிர மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4 லட்சம் கடனில் ரூ.2 லட்சம் மானியம் தரப்படும் என்றும் அறிவித்துள்ளார். ஏற்கனவே மகளிர் சுயஉதவிக்குழுகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார் நம் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். திமுக ஆட்சியில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். 

திருமண உதவி திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற பெண்கள் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்றார். தேர்தல் அறிக்கையில் இதை 8-ம் வகுப்பாக குறைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். ஆனால் முதல்வர் பெண்கள் கட்டாயம் 10-ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். அவருக்கு பெண்கள் முன்னேற்றத்தில் தனி அக்கறை உண்டு என்றார்.

Wednesday, March 30, 2011

விஜயகாந்த் குறித்து அவதூறாகப் பேசிய வடிவேலு மீது தேர்தல் ஆணையம் வழக்கு


தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து அவதூறாகவும், கண்ணியமில்லாமலும் பேசியதற்காக காமெடி நடிகர் வடிவேலு மீது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் திருவாரூரில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அத்தனை பேர் முன்னிலையில் மகா மோசமாக பேசினார் வடிவேலு. விஜயகாந்த்தை பழி தீர்த்துக் கொள்ள மைக் கிடைத்து விட்டதே என்ற வேகத்தில் பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை கண்ணியம் கூட இல்லாமல் விஜயகாந்த்தை ஒருமையில் விளித்தும், லூஸு என்று கூறியும், பொறுப்பற்றதனமாக பேசினார் வடிவேலு.
முகம் சுளிக்க வைக்கும் வகையில் வடிவேலு பேசியது குறித்து தேமுதிக உயர் மட்டக் குழு உறுப்பினர் திலீப்குமார் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பினார்.
அந்தப் புகாரில், அதில் எங்கள் தலைவர் விஜயகாந்தை பற்றி நடிகர் வடிவேலு தரக்குறைவாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும் பேசி பிரசாரம் செய்துள்ளார். இது தனியார் டி.வி.க்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தனி ஒருவரை பற்றி அவதூறாக தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து வடிவேலு மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி திருவாரூர் போலீஸார் தற்போது வடிவேலு மீது அவதூறாக விமர்சிப்பது, தரக்குறைவாக பேசுவது, தனிநபரை இழிவாக பேசுவது ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து இதேபோல வடிவேலு பேசினால் அவர் கூட்டங்களில் பேசுவதற்குத் தடை விதிக்கப்படக் கூடும் என்றும் தெரிகிறது.
மறுபடியும் சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு!
இதற்கிடையே திமுக ஆதரவு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், மீண்டும் விஜயகாந்த்தை படு மோசமாக விமர்சித்துப் பேசியுள்ளார் வடிவேலு. கடந்த முறை லூஸு என்று கூறிய வடிவேலு இந்த முறை விஜயகாந்த்தை பீஸு என்று வர்ணித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் வடிவேலு பேசியிருப்பது
அதிமுகவில் இன்றைக்கு கூட்டணியில் சேர்த்திருக்காங்க, கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ. அது சொல்லுது. என்னங்க, உங்க கூட்டணி தலைவரோட ஒரே மேடையில உட்கார்ந்து பேசுவீங்களாங்கற கேள்விக்கு, நாங்க என்ன ஜோசியமா பார்க்குறோம். என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு ன்னு சொல்லுறார்.
நான் சொன்னேன். எந்த நேரமும் தண்ணியப்போடுறாருன்னு. அதனால் இப்போ கண்ணாடி போட்டுக்கிட்டு பேசுது. கண்ணாடி போட்டா கண்ணை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைப்பு. இருந்தாலும் வாய் ரோலிங் ஆகுறப்போ தெரிஞ்சுடும்ல மக்களுக்கு.
அவர பற்றி பேசுறது வேஸ்ட். மக்கள் அவர் பேச்சை நம்பமாட்டாங்க.என்ன பேசுனாலும் தெளிவா பேசுறியாங்குறது தெரிஞ்சுடும்.
ஜெயிச்ச அந்த 5 வருசமா இந்த பீஸூ சட்டசபையில் எங்க உட்கார்ந்து இருந்துச்சின்னு யாருக்குமே தெரியல. டிவியில காட்டுனாங்களா பார்த்தீங்களா. சட்டசபையில் உட்கார்ந்து இருந்துசுச்சா. எங்காவது எழுந்திருச்சு பேசிச்சா.
விருத்தாசலத்தில் என்ன அள்ளி இறைச்சுட்டேன்னு ரிசிவந்தியத்தில் போய் சீட்டு வாங்கி நிக்குற. நீ உண்மையான ஆம்பளயா இருந்தா? மனுசனா இருந்தா? நேரே உன் சொந்த தொகுதி மதுரையில நிக்கனும். நானும் மதுரைக்காரன். நீயும் மதுரைக்காரன். நீ அங்க வந்துல்ல ஜெயிக்கனும். அத விட்டுப்புட்டு எதுக்கு இங்க வந்து நிக்குற.
டேய் வடிவேலு வந்துட்டாண்டா வாடான்னு அங்குட்டுப்போய் நிக்குற. எங்க போனாலும் நாங்க விடமாட்டோம். அதுவும் குறிப்பா நான் விடமாட்டேன்.
ஷூட்டிங் இல்லேன்னு கட்சி ஆரம்பிச்சுட்ட. இம்…ம்..ம்..ங்குற.. இப்படியே முக்குறியே. முக்காம என்ன செய்யப்போறேன்னு சொல்லு.
நாகரிகம் தெரியாத ஒரு ஆள். அவரை சேர்த்துக்கிட்டு அந்த அம்மாவுக்கு இப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பிச்சிடுச்சு.
விருத்தாசலம் அப்பாவி மக்கள் சினிமாவுல சண்டை போடுறத எல்லாம் பார்த்துட்டு நம்மையும் காப்பாத்துவாருன்னு அவசரப்பட்டு ஏமாந்து ஓட்ட போட்டிடுச்சுங்க.
இன்னைக்கு ஒரு மேடையில பேசியிருக்கிறாரு… நல்லது செய்யனும் நல்லது செய்யலன்னா யாராக இருந்தாலும் விடமாட்டேன்னு பேசியிருக்கிறாரு. என்ன கணக்கு? ஒண்ணுமே புரியல? சேர்க்கை சரியில்ல; அந்த கூட்டணியில சேர்க்கை சரியில்லை அவ்வளவுதான். ஒரு மாதிரியான கூட்டம் அது.
இப்ப என்ன நீ ஜெயிச்சுட்டேன்னு 41 சீட்டு வாங்கியிருக்க. இந்த பீஸூ பேச்சை யாரும் நம்ப மாட்டாங்க. கலைஞர் பேச்சைத்தான் பேசுவாங்க என்று வாய் போன போக்கில் பேசியுள்ளார் வடிவேலு.

Sunday, March 27, 2011

கற்பா... அது முடிந்து போன சமாச்சாரம்! - குஷ்பு

Kushbooகற்பு பத்தி பேசாதீங்க... அது முடிஞ்சு போன சமாச்சாரம், என்றார் திமுகவின் பிரச்சார பீரங்கியாக மாறியுள்ள நடிகை குஷ்பு.


தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து எக்குத் தப்பாகக் கூறி சர்ச்சையில் சிக்கி ஏகப்ட்ட நீதிமன்றங்களில் ஏறி இறங்கியவர் குஷ்பு. 

இந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதராக பிரசார களமிறங்கியிருக்கும் குஷ்பு, முதன் முதலாக தனது பிரசாரத்தை மதுரையில் "பறக்கும் முத்தங்களைக்" கொடுத்து நேற்று தொடங்கினார்.

அப்போது, நிருபர்களுக்கு பேட்டியளித்த குஷ்புவிடம், கற்பு குறித்த அவரது பேச்சு இந்த பிரச்சாரத்தில் சிக்கலை ஏற்படுத்தாதா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த குஷ்பு, "கற்பு விவகாரம் முடிந்து போன விஷயம்; இதற்கு சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பு சொல்லியாச்சு, ஏன் அதை திரும்ப திரும்ப கிளறுகிறீர்கள், என்றார்.

கற்பு குறித்து உங்களது கருத்தால், உங்கள் மீது பெண்கள் தவறான அபிப்ராயம் கொண்டுள்ளனர். அந்தக் கோபம் உங்கள் பிரசாரத்தில் பிரதிபலித்தால், என்ன செய்வீர்கள்? என்று கேட்கப்பட்டது.

உடனே ஏகத்துக்கும் டென்ஷனான குஷ்பு, "யார் நீங்க, அதிமுக ரிப்போர்ட்டரா?" என்றார் கோபத்துடன். 

உங்களுக்கு பிடிச்சமாதிரியே கேள்வி கேட்க நாங்க ஒண்ணும் திமுக தொண்டர் இல்லை என்று பதிலுக்கு அந்த நிருபரும் குரல் உயர்த்த, அமைதியாக திரும்பி நடந்தார் குஷ்பு.

Friday, March 25, 2011

சும்மா இருங்க....


No : 1
நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

No: 2

உன் பேரு என்ன..?
" சௌமியா "
உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

No : 3 ( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?
சுவிஸ்சர்லாந்து..
எங்கே Spelling சொல்லுங்க..
ஐயையோ.. அப்படின்னா " கோவா "
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

No : 4

( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...


* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *


No : 6 ( ஹோட்டலில் )
" ஒரு காபி எவ்ளோ..? "
" அஞ்சு ரூபா.. "
" எதிர் கடையில 50 பைசான்னு
போட்டு இருக்கே..?!! "

" டேய் லூசு.., அது ஜெராக்ஸ் காப்பிடா..!! "
* * * * * * * * * * * * * * * * * *
No : 7
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..
* * * * * * * * * * * * * * * * * *
No : 8 ( கல்யாண மண்டபம்.. )
"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "

" ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"

ஒரு பையன் ஒரு பெண்

ஒரு பையன் ஒரு பெண்
இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்
வெவ்வேறு வயதுகளில்:


@எல்கேஜி: 
பெண்: "பென்சில் தருவியா..?"
பையன்: "மிஸ்கிட்ட சொல்லிடுவேன்..!"


@5ம் வகுப்பு:
பெண்: "பென்சில் தருவியா..?"
பையன்: "இந்தா..!"


@10ம் வகுப்பு:
பெண்: "பேனா இருந்தா கொடுக்க முடியுமா..?"
பையன்: "ஓ மை காட்... ப்ளாக் வேணுமா., ரெட் வேணுமா., ப்ளூ வேணுமா., க்ரீன் வேணுமா.?"


@12ம் வகுப்பு:
பெண்; (ஒன்றுமே கேட்கவில்லை)
பையன்: "2உன்னோட பென் சரியா எழுதலைனு நெனைக்கிறேன். இந்தா என்னோட பென்... இதை யூஸ் பண்ணிக்க..!"


@காலேஜ்:
பையன்: "புதுசா ஒரு பென் வாங்கினேன்... எழுதிப் பாத்துட்டுக் குடு...!".



நீதி:

"எப்படி இருந்த பயலை
எப்படி மாத்திட்டாளுக பாத்தீங்களா..?"

அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்....


வானம் பட பிரஸ் மீட்டில் ஒரே அனுஷ்கா புராணம். அதிலும் சிம்பு ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார் அனுஷ்காவை.
சிலம்பரசன்-அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ள புதிய படம், வானம். இந்த படத்தில் பரத், பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால், வேகா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.
தெலுங்கில் வெற்றிபெற்ற ‘வேதம்’ என்ற படத்தை தமிழில் வானம் ஆக்கியுள்ளனர். ஒரிஜினல் படத்தில் அல்லு அரவிந்த்-அனுஷ்கா ஜோடியாக நடித்திருந்தார்கள். அந்த படத்தை இயக்கிய கிரிஷ்தான் வானம் படத்தையும் இயக்கியுள்ளார்.
வானம் படத்தின் பாடல்கள் வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது. பாடல்களை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, அனுஷ்காவுக்கு ஏகத்துக்கும் ஐஸ் வைத்தார்.
“இந்த படத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன். வேதம் பார்த்தபோதே, இந்தப் படத்தில் தமிழில் செய்யணும், அதில் கதாநாயகியாக அனுஷ்காவையே போட வேண்டும் என்று. அந்த அளவு அசத்தலாக பண்ணியிருந்தார் அனுஷ்கா.
அவருடைய நடிப்பு, நடனம் எல்லாமே பிரமாதம். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.
இயக்குநரை சிபாரிசு செய்தது கூட அனுஷ்காதான். மிகத் திறமையான இயக்குநர்.
யுவன் சங்கர் ராஜாவுடன்…
நான், காதல் அழிவதில்லை படம் நடிப்பதற்கு முன்பு இருந்தே யுவன்சங்கர்ராஜாவை எனக்கு தெரியும். இரண்டு பேரும் இணைந்து பணிபுரிந்த படங்களில் பாடல்கள், ‘ஹிட்’ ஆகிவருகின்றன. எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது வெறும் நட்பு மட்டுமல்ல. இரண்டு பேரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருக்கிறோம்,” என்றார்.

கருணாநிதியின் சொத்து விவரம்-சொந்தமாக ஒரு கார் கூட இல்லை

சென்னை: முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியுள்ளபடி அவரிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருவாரூர் தொகுதியில் முதல்வர் கருணாநிதி போட்டியிடுகிறார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா நிற்கிறார். இருவரும் வேட்பு மனுவுடன் தங்களது சொத்துக்கள் குறித்த விவரத்தையும் இணைத்துள்ளனர்.

இந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் இருவருக்குமே சொத்து மதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது.

கருணாநிதியின் சொத்து மதிப்பு விவரம்:

கருணாநிதி பெயரில் ரொக்கம்மாக 15 ஆயிரம் ரூபாய். அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் 30 ஆயிரம் ரூபாய், துணைவி ராஜாத்தி பெயரில் 2 லட்சம் ரூபாய் உள்ளது.

வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 4 கணக்குகள் உள்ளன. இதில் 5 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 152 ரூபாய். அடையாறு கரூர் வைசியா வங்கியில் 13 லட்சத்து 74 ஆயிரத்து 664 ரூபாய்.

கர்நாடகா வங்கியில் 39 லட்சத்து 62 ஆயிரத்து 995 ரூபாய். ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் 10 ஆயிரத்து 958 ரூபாய். சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 11 ஆயிரத்து 135 ரூபாய்.

கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 11 லட்சத்து 39 ஆயிரத்து 441 ரூபாய். ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 180 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரத்து 5,256 ரூபாய். 22 பைசா வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ளார்.

அஞ்சுகம் பதிப்பகம் என்கிற பங்குதாரர் நிறுவனத்தில் 50 சதம் பங்குகள் 78,330 ரூபாய். இந்த நிறுவனத்திற்கு சென்னை, 180/93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சொந்தான கட்டடம் மற்றும் நிலம். கோபாலபுரம் 15-4வது குறுக்குத்தெருவில் அஞ்சுகம் அம்மாள் அறக்கட்டளைக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட 6 ஆயிரத்து 162 சதுர அடி மனை மற்றும் அதில் உள்ள கட்டடம். அறக்கட்டளை சொத்து ஆயுட் காலம் அனுபவ பாத்தியம் உள்ளது. தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் (சர்வே எண் 29, 30/2, 31/2ஏ) 14.30 ஏக்கர் நிலம். இதற்கான மதிப்பு 4 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 855 ரூபாய். இதன் மூலம் அவரது பெயரில் 10 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரத்து 380 ரூபாய். அவருக்கு திரைப்படம் எடுக்க மும்பையில் மோசர்பேரிடம் 10 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிய வகையில் கடன் உள்ளது என தெரிவித்துள்ளார். வருமான வரி 37 லட்சத்து 34 ஆயிரத்து 20 ரூபாய் கட்டியுள்ளார்.

அசையும் சொத்து மதிப்பில், மனைவி தயாளு பெயரில் கலைஞர் "டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய் உட்பட 15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 ரூபாய். அசையா சொத்துகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 635 ரூபாய். இது தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பாக 5 லட்சத்து 51 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

துணைவியார் ராசாத்தி பெயரில் அசையும் சொத்துகள் 20 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 924 ரூபாய். அசையா சொத்துகள் 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 318 ரூபாய். இதற்கு தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 ரூபாய்.

கனிமொழியிடம் ரூ. 1 கோடி கடன் வாங்கிய ராசாத்தி

ராசாத்தி தனது மகள் கனிமொழியிடம் இருந்து, பற்றில்லாக் கடனாக வாங்கிய ஒரு கோடியே ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 503 ரூபாய் கடன் உள்ளது என சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, March 23, 2011

வீட்டுக்காவலில் வைக்கபட்ட ஜெயலலிதா.... அதிமுக அதிர்ச்சி


http://makkalavaitherdhal2009.files.wordpress.com/2009/03/subramaniam-swamy.jpg?w=257&h=300 

இன்றைக்கு வெளியான ஜூனியர் விகடனில் வந்த அம்மா பற்றிய நியூஸ் பதட்டத்தை கிளப்பியது.அ தி மு க மத்தியிலும் சரி சாதாரண அரசியல் ஆர்வலர்களும் சரி , இந்த செய்தியை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவித்தனர்...


 ஏனெனில் வெளியான இதழ் நம்பகத்தன்மை மிக்க விகடன் குரூப் நியூஸ்.. ஆனால் சொன்ன ஆள் அரசியல் காமெடியன் சு சுவாமி....அவரது பேட்டியும் எனது கமெண்ட்டும்.......


1. ''அ.தி.மு.க. வேட்பாளர் லிஸ்ட் முதலில் வெளியிட்டது எனக்குத் தெரியாது என்று ஜெயலலிதா சொல்லியதில் இருந்தே, கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்கிற பரிதாப நிலைமையைப் புரிந்துகொள்ளலாம்! இரண்டாவது லிஸ்ட் இப்போது வெளி வந்து இருக்கிறது. இதாவது அவருக்குத் தெரியுமா, என்பது போகப் போகத்தான் நமக்குத் தெரியும்.

இதென்னங்க பெரிய பிரமாதம், ஏப்ரல் 14 க்குப்பிறகு கேப்டனே யார்னு தெரியாதுன்னு சொல்லப்போறாங்க..அவர் வந்து என்னை சந்தித்ததே எனக்கு நினைவில் இல்லைன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் விடப்போறரா ?இல்லையா?ன்னு பாருங்க...
 http://thatstamil.oneindia.in/img/2008/12/sasikala-jayalalitha-250.jpg

2. தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ஜெயலலிதா பக்கம் வெற்றி என்கிற நிலை இருந்தது. இப்போது மாறி வருகிறது. போயஸ் கார்டனில் ஜெயலலிதா கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட்டில் இருக்கிறாரோ என்கிற சந்தேகம் எனக்கு எழுகிறது. 'மன்னார்குடி  கும்பல் பிடியில்... நவ துஷ்டக் கிரகங்களின் பிடியில்... ராகு கேது பிடியில் ஜெயலலிதா சிக்கிக்கொண்டு தவிக்கிறாரோ?' என்று சந்தேகப்படும் அளவுக்கு, அடுத்தடுத்த குழப்பங்களை செய்து வருகிறார்.

நவக்கிரகம்கறீங்க.. ஆனா எனக்கென்னவோ ஒரே ஒரு கிரகம் தான் அவரைப்பிடிச்சு ஆட்டுவிக்குதுன்னு நினைக்கறேன்..  அது சசிகலா ...அந்த கிரகம் இல்லைன்னா அம்மா செம ஃபார்ம்ல இருப்பாங்க.

3. மெஜாரிட்டியான ஸீட்டுகளைப் பிடித்து, காங்கிரஸுடன் தேர்தலுக்குப் பிறகு கூட்டணிவைக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் திட்டம். அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான், முதலில் ராமதாஸைக் கூட்டணியைவிட்டு விரட்டினார். இப்போது வைகோவையும் அனுப்பிவிட்டார். விஜயகாந்த்தையும் அலைக்கழித்து விரட்டப் பார்த்தார். இப்படித் தப்பும் தவறுமாக ஜெயலலிதா அரசியலில் முடிவெடுப்பதாக வெளியில் பிரகடனப்படுத்தி, அவரது இமேஜை சீர் குலைக்கும்விதமாக செயல்படுகிறது அந்தக் கூட்டம்.

காங்கிரஸ் கூட கூட்டணி வெச்சா அம்மா இமேஜ் டேமேஜ்தான் ஆகும்.
ராம்தாஸ் புற்றுநோய் மாதிரி.. விரட்டுனதே நல்லது...கேப்டன் இப்போ அம்மா கூட இருக்கறது நல்லதுதான்..  

http://thatstamil.oneindia.in/images25/jaya-sasi-450.jpg

4. அ.தி.மு.க-வில் எந்தக் கட்சிகளை சேர்க்க வேண்டும்? யாரை கழட்டிவிட வேண்டும்? ஜெயலலிதா யாருடன் போனில் பேச வேண்டும்? யாரை நேரில் சந்திக்க வேண்டும்? இன்றைக்கு ஜெயலலிதா என்ன சேலை கட்ட வேண்டும்? என்பது உட்பட அனைத்து விஷயங்களையும் கன்ட்ரோல் பண்ணுவது சசிகலாதான்!'' 

 மகாபாரத்துக்கு ஒரு சகுனி, ராமாயனத்துக்கு ஒரு கூனி, போயஸ் தோட்டத்துக்கு ஒரு சசிகலா...


5. , ''சசிகலா சொல்வதைச் செய்யும் ரோபோ பொம்மைதான் ஜெயலலிதா. சுயமாக அவரால் எதையும் செய்ய முடியாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்பற்றி இனி ஜெயலலிதா எங்கே பேசப்போகிறார்? பொறுப்பான எதிர்க்கட்சி என்கிற வகையில், முதலில் ஜெயலலிதா என்னுடன் ஆலோசனை செய்து இருக்கலாம். ஆனால், செய்தாரா? நானும்கூட, 'சசிகலா போயஸ் கார்டனில் இருக்கும் வரை பேசப் போவது இல்லை' என்று முடிவு எடுத்து இருக்கி​றேன். அதனால்தான், நானும் ஜெயலலிதாவுடன் தொடர்புகொள்ளவே இல்லை. எங்கள் இருவருக்கும் இடையே விரிசல் விழுந்துவிட்டது!'' 

 அம்மா ஒரு கண்ணாடி மாதிரி.. யார் வந்து மோதுனாலும் விரிசல் விழத்தான் செய்யும்...


6. ''வைகோ இருந்தால், தேர்தலுக்குப் பிறகு காங்கிர​ஸுடன் கூட்டணி சேர முடியாதே? அதனால்தான், கழட்டிவிட்டார். கண்டிப்பாக தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு, புதிய கூட்டணி ஏற்படப்போகிறது. எம்.எல்.ஏ-க்கள் மியூசிக்கல் சேர் விளையாட்டு, குதிரை பேரங்கள் நடக்கும். முடிவில், ஜெயலலிதாவோ, கருணாநிதியோ... முதல்வர் பதவியில் அமர மாட்​டார்கள். அமரப்போவது யார் என்கிறீர்களா? காங்​கிரஸ்! அதற்காகத்தான் சசிகலா மறைமுகமாக அரசியல்​ரீதியாக காய் நகர்த்துகிறார்!''

இதென்ன புதுக்கதை?காங்கிரஸ்க்கு டெபாசிட்டே கிடைக்காம கேவலப்படப்போகுது....
 http://img.dinamalar.com/data/uploads/WR_316760.jpeg

'7. 'சொன்னால் நம்ப மாட்டீர்கள். தமிழக அரசியலில் என்ன நடக்கப்போகிறது என்பது முடிவானதே லண்டனில்! கடந்த சில நாட்களாக டெல்லியை சேர்ந்த முக்கிய அரசியல் வி.வி.ஐ.பி. ஒருவர் லண்டனுக்கு ஆஸ்துமா சிகிச்சைக்காகப் போனார். அங்கே புலிகள் ஆதரவாளர் ஒருவரை அவருக்கு ஏற்கெனவே தெரியும். அந்தத் தொடர்பு மூலம், சென்னையில் உள்ள அ.தி.மு.க. பிரமுகரை அணுகி, தேர்தலுக்குப் பிறகு நடக்கவிருக்கும் எதிர்கால அரசியல் பேச்சுவார்த்தை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டுவிட்டது. அதைத்தான் நான் சொல்கிறேன்!'' 

 பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்றாரே...



8. ''ஜெயலலிதாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுத்து டெல்லி அரசியலுக்கு அனுப்பிவிடுவார்கள். இங்கே சசிகலாவின் திரை மறைவு அரசியல் தொடரும். அதன் மூலம் வரும் பலாபலன்களை நிர்வகிப்பார். அவரது டம்மிகள் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். மிடாஸ் மதுபான உற்பத்தி கம்பெனியானது சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்களால் நடத்தப்படுவது. அந்த நிறுவனத்துக்கு கடந்த ஐந்து வருட தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைத்தது என்று கேட்டால், மயக்கமே போட்டுவிடுவீர்கள். அந்த அளவுக்கு தி.மு.க-வுடன் தொழில் முறைத் தொடர்புகள் உண்டு. இவை எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியுமா... தெரியாதா? என்று எனக்குத் தெரியாது. ஆனால், நடந்தது உண்மை. இதைப்போலவே, தேர்தலுக்குப் பிறகும் நான் சொன்னது நிச்சயமாக நடக்கும்!''


விட்டா சசிகலா ,கலைஞர் கூட்டு சதின்னு சொல்லிடுவீங்க போல....

Tuesday, March 22, 2011

கவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா



  கவுண்டமணி - (பம்மிக்கொண்டே வருகிறார்).- ஐயா வணக்கமுங்க,எனக்கு 2 டவுட்டுங்க ,உங்க கிட்ட கேக்கலாமுங்களா?

கலைஞர் - வா தம்பி வா,சரித்திரம் திரும்புகிறதா?வழக்கமா செந்தில்தானே உங்க கிட்ட சந்தேகம் கேட்பாரு,சரி கேள்! (மனசுக்குள்) என்ன குண்டை தூக்கிபோடப்போறானோ?)

கவுண்டமணி - ஐயா,ஒச்சாயி என்பது தமிழ்ப்பெயரா,இல்லையா?

கலைஞர் - தமிழ் அகராதியில் தேடிப்பார்த்தோம் தம்பி,அப்படி ஒரு வார்த்தையே அகராதியில் இல்லை.

 கவுண்டமணி - ஐயா,அந்தப்பேரில் கோடம்பாக்கத்தை சேர்ந்த பலரின் குல தெய்வ சாமி பேரே ஒச்சாயி அம்மன்னு சொல்றாங்க.

கலைஞர்- சாமியே இல்லைனு சொல்றேன்,நீ சாமி பேர்க்கு வாதிட வந்துள்ளாயே தம்பி. 

 கவுண்டமணி - ஐயா,ஒண்ணுமில்லைங்க,தமிழ்ப்படம்னு நினச்சுதான் டைட்டில் வெச்சிருக்காங்க,இப்போ திடீர்னு தமிழ்ப்பட டைட்டில் இல்லைன்னா அவங்க எங்கே போவாங்கஏதோ வரி விலக்கு இருந்தாலாவது
4 காசு பாப்பாங்க.

கலைஞர் - தம்பி,யாருக்காகவும்,எதுக்காகவும் கழகமும் சரி,சட்டமும் சரி வளைந்து கொடுக்காது..இது பற்றி நான் முரசொலியில் எழுதிய கவிதை ஒன்று வந்ததே,படிக்கவில்லையா?

 கவுண்டமணி  (நல்ல வேளை,எனக்கு படிக்க தெரியாது,தப்பிச்சேன்) அது போகட்டுங்கய்யா,என் 2வது டவுட்...

கலைஞர்  - ஐயம் என தமிழிலேயே கேள்



 கவுண்டமணி  - (இந்த வெட்டி தமிழ்ப்பற்றுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை) ஐயா,குவாட்டர்,கட்டிங்க் இந்த 2 வார்த்தைகளும் தமிழ்ப்பெயரா?அதுக்கு மட்டும் வரி விலக்கு அளிச்சது எப்படி?உங்க குடும்ப படம்கறதாலயா அப்படினு நான் கேட்கலைங்க,சில பன்னாடை பரதேசிப்பசங்க கேட்கறாஙக,உங்க ரேஞ்ச் தெரியாம விளையாடறாங்க,உங்க ஸ்டைல்ல அதுக்கு ஒரு பதில் சொல்லிட்டா எல்லாரும் மூடிட்டு அவங்கவங்க வேலையை பார்ப்பாங்க.


கலைஞர் - அது ... அது வந்து... ஒரு னிதை  , அதன் குழந்தை பால் வேண்டி குவா குவா என கத்துகிறது.அதைக்கேட்டு பெற்ற மனம் ட்டர்என கிழிகிறது.என் கட்டித்தங்கமே என அதை கொஞ்சுகிறாள்,அது பால் கிடைத்த மகிழ்ச்சியில் ங்கா ங்காஎன்கிறது,இதன் சுருக்கம்தான் அந்த டைட்டில்.இப்போது டார்க்கில் உள்ள எழுத்துக்களை படித்துப்பார்,வ குவாட்டர் கட்டிங்க் ,இப்போ சமாதானமாகி விட்டதா?

 கவுண்டமணி  - ஐயா,நிஜமாலுமே நீங்க பேரறிஞர்தானுங்க.இல்லாத ஒண்ணுக்கு எப்படி எல்லாம் விளக்கம் அளீச்சு தப்பிக்கிறீங்க?விபரம் தெரியாத யாரோ பன்னாடைப்பரதேசிப்பசங்க என்னை உசுப்பி விட்டுட்டாங்கய்யா,ஐயா என்னை மன்னிக்கனும்,அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா?

கலைஞர் - ம் ம் போகும்போது முரசொலி வாங்கிட்டு போங்க.

 கவுண்டமணி  - மன்னிச்சுக்குங்க ஐயா,அதுல வர்ற கடிதத்தை எல்லாம் உங்க கட்சிக்காரங்களே படிக்க முடியறதில்லையாம்,சாரி அட்ஜஸ் பிளீஸ்.

கலைஞர் - ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை அட்ஜஸ்.ஸ்டாலின்  நான்கு எழுத்து,அழகிரி நான்கு எழுத்து,கனிமொழி நான்கு எழுத்து,கழகம் நான்கு எழுத்து ,கலைஞர் நான்கு எழுத்து,எங்களில் யாராவது ஒருவர் தொடர்ந்து அரியணையில் இருப்பது தமிழனின் தலை எழுத்து.


கலைஞர் செல்கிறார்.பிறகு கவுண்டமணி கோடம்பாக்கம் போகிறார்.

 கவுண்டமணி  - யோவ்,யாருய்யா அது என்னைப்போய் நியாயம் கேக்க சொன்னது?டே வீங்குன வாயா,ஓடிப்போயிடு,என்னய்யா டைட்டில் வைக்கிறீங்க?ஒச்சாயி மச்சாயின்னு ,வேற பேரே கிடைக்கலியா?ஆயி போயின்னு ,இதுல நியாயம் வேற கேக்கனுமோ,அவரே பாவம் குடும்பத்தை பாப்பாரா,உங்க நியாயத்தை பாப்பாரா?இனி எவனாவது தூது போங்கண்ணேனு என் கிட்டே வந்தீங்க அந்த டூத்பேஸ்ட் தலையனை (செந்தில்)விட்டு கடிக்க வெச்சுடுவேன் ஆமா 

பிரம்மச்சாரி அறையில் இருக்க வேண்டிய 8 விசயங்கள்.......... (பெண்களுக்குப் பிடித்த)


என் அருமை கல்யாணமாகாத நண்பர்களே!!ஃபிகர் மடக்குவது எப்படி, கடலை போடுவது
எப்படின்னு ஏகப்பட்ட மேட்டர் நம்ம மக்கள் பிளாகில் போடுறாங்க! 

வெளிய போகும்போடு செம ஸ்டைலாப் போவீங்க! நாங்க சொல்லித்தர வேண்டியதில்லை! 
நான் நீங்க வீட்டிலோ, ரூமிலோ இருக்கும்போது ?ரூம் பத்தி சொல்ல வேண்டியது இல்லை!! 
நான் சொல்லப்போறது ரொம்பத்தேவையான விசயம்னு தலைப்பைப் பார்த்தவுடனே தெரிந்து
இருக்கும்! 
திடீர்னு நீங்க விரும்புகிற ஃபிகர் எப்பவோ நீங்க சொன்ன அட்ரெஸ்ஸ வச்சு ” சும்மா இந்தப் பக்கமா வந்தேன் , அப்படியே உங்க ஞாபகம் வந்ததுன்னு “உள்ளே நுழைந்தால்!!.........” இப்படியெல்லாம் சந்தர்ப்பம் வருமா?ன்னு”
கேக்கக்கூடாது! 


ஃபிகர் எல்லாம் எந்த நேரத்தில் எங்கே நுழைவார்கள் என்று தெரியாது!! 
””எப்ப வருவாங்கன்னு  தெரியாது! நமக்கு மச்சம் இருந்தா வரவேண்டிய நேரத்தில்
கரெக்டா வந்து விடுவார்கள்!”” 
அப்படி உள்ளே நுழைந்து விட்டால்? நடக்கும் கூத்தே தனிதான்! 
சரி!! நாம் அறையை எப்படி வைத்து இருக்க வேண்டும் என்று பார்ப்போம்!! 


1. அறையில் எங்காவது ஒரு இடத்தில் நீங்கள் செய்த மரத்தால், இல்லை
 ஐஸ் குச்சி ,இல்லை மூங்கில் குச்சி வைத்து செய்த பொருளை மாட்டி வைக்கவும்!! 
(அட்லீஸ்ட் விளக்குமாத்துக் குச்சி!!!)இல்லையா நீங்க செய்தா எப்படி இருக்குமோ?...
அதுக்குத் தோதா ஒன்னை வாங்கி வைங்க. எப்பவோ 12த் படிக்கும்போது செய்தது!ன்னு
அள்ளி விடுங்க! 
அதை வச்சு ஒரு ஜோக்கூட அடிக்கலாம். ”படித்து முடித்து வேலை கிடைக்கலைன்னா கைவசம் தொழில் இருக்கு”.என்பது போல!! நீங்க செல்ஃப் ஜோக் அடிச்சா ரசிப்பாங்க!மறந்து போய் அவங்களை வைத்து ஜோக் அடிச்சீங்க! சாப்டர் குளோஸ்!!! 



2.இருவர் விளையாடும் வீடியோ கேம்! வீடியோ கேம் குழந்தைங்க விளையாடுவதுன்னு
நினைச்சா அதை மாத்திக்கங்க! இரண்டு பேர் சேர்ந்து ஆடி அவங்களையும் ஜெயிக்கவிடுங்க! அப்பத்தான் நீங்க ஜெயிக்கலாம்!! என்ன புரிந்து இருக்குமே! 



3.நல்ல சமையல் அடுப்பு அவசியம் இருக்கணும்!! கன்னங்கரேல்னு ஒரு ஸ்டவ்வைப்
பத்தவச்சீங்க ..நிலைமை மோசம்தான்! ரெண்டு மூனு அயிட்டம் செய்ய்த்தெரிந்து வச்சுக்கோங்க!  திடீர்ன்னு பிரெட் டோஸ்ட் மாதிரி ஏதாவது செய்து அசத்துங்க!! அப்புறம் என்ன? உங்க ராஜ்ஜியந்தான்!! 


4.ஜிம்மிக்ஸ் வேலை செய்த உங்கள் போட்டோ ஆல்பம்( ஒரிஜினல் நாட் அட்வைஸ்ட்), 
டூர் ஆல்பம்(அதுல மேக்ஸிமம் லாங்க் ஷாட் தானே இருக்கும்!!!உங்கள் குளோசப் கூடவே
கூடாது!) ஆகியவற்றை டேபிளின் மேல் பார்வையில் படும்படி வைக்கவும்!! அவற்றின்
மூலம் ஏகப்பட்ட விசயம் பேசலாமே!! 



5.சாக்கலேட் மில்க், பெப்ஸி,கோலா ஆகியவற்றை கொஞ்சம் வைத்திருங்கள்! அந்த
நேரத்துக்கு ஓடி அலையக்கூடாது!! என்ன சரிதானே!!பீ கூல்! 
ரம் ,பீர்ன்னு வெளிய எடுத்திடாதீங்க!! அந்த பாட்டில்கள் கண்ணில் படாமல் இருக்கட்டும்! 



6.நீங்கள் சென்ற இடங்களின் போட்டோக்களை பெரிதுபடுத்தி காலேஜ் நோடீஸ்போர்ட் போல
கொலாஜ் பாணியில் சுவற்றில் ஒட்டி அலங்கரித்து வைங்க! மொத்தமும் பார்த்தா ஒங்க
டூர் மொத்தமும் ஞாபகம் வரணும்!!போன இடம் வந்த இடம் என்று ஏகப்பட்ட விசயங்கள்
பேசலாம், கடலை இழுத்துக்கொண்டே போகும்!! 



7.பெண்களுக்கு செல்லப்பிராணிகள் என்றால் ரொம்பப் பிடிக்கும்!!!  நாய்,பூனை போல.
நாய் பூனை இல்லைன்னா மீன் தொட்டியாவது சின்னதாக வைத்து விடுங்கள்!  இதெல்லாம்
பார்த்தா பெண்கள் உங்களை பொறுப்பானவர் என்று நினைப்பார்களாம்!!! 



8.  எதாவது இசைக்கத்தெரியுமென்றால் நீங்க பாஸ்!! தெரியாதா? இப்போதிலிருந்தே
ஏதாவது ஒரு இசைக்கருவியை எப்படியாவது கற்றுக்கொள்ளுங்கள்!! கிடார் மாதிரி
ஒன்னைக் கண் படும் விதத்தில் வைக்கவும்!! வாசிக்கலைன்னாலும் அதைக்கையிலெடுத்துப் பார்ப்பார்கள் பாருங்க!! அப்புறம் என்ன? அசத்தல்தான்! 
என்ன பேச்சலர்ஸ் ரெடியா? 

இவ்வளவு திறமையும் ஏற்கெனவே இருக்கு பாஸ்ன்னா ஓக்கே!!! 


இல்லைன்னாலும் பரவாயில்லை! ஆரம்பிங்க இப்போதிருந்தே!! 

Monday, March 21, 2011

ஃபிகர் மடக்குவது எப்படி - 3 -


செய்யக் கூடாதது : 

ஃபிகர் : சே , வர்ரப்பவே ஸ்கூட்டி ப்ராப்ளம்... அப்படி இப்படி பஸ்ஸ பிடிச்சு வந்தா  இங்க பீச்சுல ஒரே வெய்யில். ஏண்டா வந்தோம்னு இருக்கு ....

நம்ம ஹீரோ :ஆமாம், நாங்கூடத்தான் உனக்கு முன்னாடியே இங்க வந்து உக்காந்திருக்கேன்... ஆனா உனக்கு இப்ப ஏண்டா வந்தேன்னு இருக்கு..உ னக்கு எம்மேல லவ்வே போயிடிச்சி...

புரியுதா தலைவா..இப்படி நாமளா ஃபிகரோட ஃபீலிங்க்ஸ் புரிஞ்ச்சுக்காம ஒரு ட்ராக்ல போகக்கூடாது.. இதே சிட்டுவேஷன்ல நாம எப்படி நடந்துக்கணும்னா..

 செய்யக் வேண்டியது : 

ஃபிகர் : சே , எங்கப்பா ரொம்ப சோதிக்கறார்... கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிடே இருக்காரு ... எதுக்கெடுத்தாலும் சந்தேகம் வேற ...

நம்ம ஹீரோ : அப்படியா... தட்ஸ் டூ பேட்.. பாவம் நீ....



ஃபிகர் : சே , வர்ரப்பவே ஸ்கூட்டி ப்ராப்ளம்... அப்படி இப்படி பஸ்ஸ பிடிச்சு வந்தா  இங்க பீச்சுல ஒரே வெய்யில். ஏண்டா வந்தோம்னு இருக்கு ....

நம்ம ஹீரோ :எவ்வளோ கஷ்டப்பட்டு எனக்காக வந்திருக்க... ...


கொஞ்சம் சினிமாடிக்கா டையலாக் டைப்புல இருந்தாலும் இந்த மாதிரி ஃபிகர் புலம்புரப்போ நாம் நல்ல லிஸடனர்ஸா மாறுவதைத் தவிர வேறு வழி இல்லை. 

ஃபிகர் டைப்புகள் இன்னும் வரும்...
பின்குறிப்பு :  தலைவா... ஓட்டுப் போட மறந்துடாத ! அப்புறம் ஓட்டுப் போடவே வயசு பத்தல ... எப்படி ஃபிகர் பத்தி படிக்கலாம்னு கேட்டுறப் போறாங்க :-) வர்ட்டா?

ஃபிகர் மடக்குவது எப்படி? - 2 - ஃபிகருக்கு என்ன பிடிக்கும்?





மொதல்ல ஓட்டு போட்டு இரண்டாவது பகுதி எழுத வச்ச எல்லா நண்பர்களுக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ். எடிட்டர்டேர்ந்து காப்பாத்திட்டீங்க பாஸ். தலைப்பில இலக்கணப் பிழை கண்டுபிடிச்சு மெயில் போட்ட தூத்துக்குடி சிவாவுக்கு : ( “ஃபிகர் மடிப்பது எப்படி?”ன்னு இருக்கணுமாம்!) இதெல்லாம் கொஞ்சம் ஓவர்ங்கண்ணா!. ஓகே மேட்டருக்கு வருவோமா? கண்ணுங்களா ஃபிகர் விஷயத்துல நாம மொதல்ல ஞாபகம் வச்சுக்க வேண்டியது... நாம நார்த் மெட்ராஸ்னா ஃபிகர் சவுத் மெட்ராஸ்.. ஃபிகர் சத்யம் தியேட்டர்னா நாம பரங்கிமலை ஜோதி! அதாவது நாம வேற உலகம் ; ஃபிகருங்க இருக்கறது வேற உலகம்...இதத்தான் “மென் ஆர் ஃப்ரம் மார்ஸ் வுமன் ஆர் ஃப்ரம் வீனஸ்”ன்ற புக்ல சொல்றாங்க.  ஃபிகருங்களோட டேஸ்டே தனி.அவங்களுக்கு புடிச்சதெல்லாம் வேற! அவங்க சிந்திக்கற ஸ்டைலே வேற! நாம நமக்கு புடிச்சதே ஃபிகருக்கும் புடிக்கும்னு அப்ரோச் பண்ணோம்னா ரொமான்ஸ் ஊத்திக்கும்.. அதனால ஃபிகர் மடிக்கிற டெக்னிக்குல இந்த அடிப்படை ஞானம் ரொம்ப முக்கியம்....பாய்ஸ் ஃபீலிங்ஸ் உடம்புல ஆரம்பிச்சு மனசுக்கு போவுது.ஆனா கேர்ள்ஸ் ஃபீலிங்ஸ் மனசுல ஆரம்பிச்சு உடம்புக்கு போவுது. ரெண்டு பேருக்கும் ஸ்டார்டிங் பாயிண்டே வேற! ஓகே ... இன்னொரு முக்கியமான விஷயம்.. நாம ஒரு ஃபிகருக்கு ரூட் போடறோன்னா அது அந்த ஃபிகருக்கு தெரியக் கூடாது.. அதாவது அந்த ஃபிகரே கதின்னு ஆரமபத்துலயே சுத்திட்டோம்னா ஃபிகர் “இது சரியான ஜொள்ளு பார்டி”ன்னு உஷாராயிடும்.அதே சமயம் ஃபிகரை கண்டுக்காம இருந்து ரஜினி மாதிரி “ நாம பொண்ண தேடி போகக்கூடாது! பொண்ணுங்களா நம்மள தேடி வரணும்” அப்படின்னு சொன்னா அது தலைவருக்கு வொர்க் அவுட் ஆகும், நமக்கு ?.அதனால் ஃபிகர கவர் பண்ணனும் அதே சமயம் ஃபிகருக்கு அது தெரியக் கூடாது.பட்டும் படாம எல்லா மீட்டுங்கும் எதேச்சையா நடந்த மாதிரி ஆரம்பத்துல கொண்டு போகணும். இந்த மாதிரி சந்திப்ப ஏற்பாடு பண்றதுக்கும் ஃபிகருக்கு என்னா புடிக்கும்னு தெரிஞ்சு வக்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம். ஃபிகர் ஷாப்பிங் மால் போனா நாம காஃபி ஷாப்ல ஃபிகர தேடிட்டு சுத்தக் கூடாது.ஃபிகர் பேஸ்கின் ராபின்ஸ்ல உக்காந்து ஐஸ்க்ரீம் சாப்டிட்டுருக்கும்!ஃபிகருக்கு என்னவெல்லாம் பிடிக்கும்னு முதல்ல ஸ்டடி பண்ணனும். ஒரு லிஸ்டே போட்டு வச்சிக்கணும்...பொதுவா தொண்ணூறு சதவிகிதம் ஃபிகருங்களுக்கு புடிச்ச சில மேட்டருங்கள கீழ லிஸ்ட் போட்டிருக்கேன்.. ( மீதி பத்து பர்சென்ட் விதி விலக்கு தலைவா! அத்த நீயாத்தான் கண்டுபிடிச்சுக்கணும்)
1.   எல்லா ஃபிகருக்கும் ஷாப்பிங் பிடிக்கும். “ஐ ஹேட் ஷாப்பிங்யா” ன்னு சொல்ற ஃபிகர் உட்பட...
2.   எல்லா ஃபிகருக்கும் ஃபேஷன், ட்ரஸ் ,இந்த மாதிரி விஷயம் நிச்சயம் கவனத்த கவரும்..
3.   முக்கால் வாசி ஃபிகருக்கு ம்யூசிக் பிடிக்கும். ஆனா இன்னா டைப் ம்யூசிக்னு முதல்ல தெரிஞ்சுக்கணும். “பான் ஜோவி” கேட்குற ஃபிகருக்கு நாமளா நமக்கு புடிச்ச தமிழ் பாட்ட ரெக்கார்ட் பண்ணிக் கொடுத்தா ....ரொமான்ஸ் டர்ர்ருதான்.



4.   ஃபிகருங்களுக்கு மத்த ஃபிகருங்களைப் பத்தி பேசுறது ரொம்ப பிடிக்கும். ஆனா இதுல நாம உஷாரா இருக்கணும். நம்ம ஃபிகர் நம்ம பாத்து “ நித்யாவுக்கு ரொம்ப நல்ல ட்ரஸ் சென்ஸ் இல்ல?” அப்டின்னு கேட்டா நாம உடனே “ஆமாம் அன்னிக்கு ஒரு டைட் ஜீன்ஸ் போட்டு சும்மா கும்முன்னு வந்தாளே சூப்பர்”னு சொன்னோம்னா அப்படியே அப்பிட்டாவ வேண்டியதுதான். அதே சமயம் “நித்யாவா யாரவ? நான் நோட்டிஸ் பண்ணதில்லையே” என்று செவாலியே ஏக்டிங்லாம் கொடுக்க வேண்டாம்..ஒரு ஸ்மைல் பண்ணிட்டு “ஆமாம், நல்லா ட்ரஸ் பண்றா.. பட் என்க்கென்னவோ உன் ட்ரஸ் சென்ஸ் அதவிட புடிக்கும்”னு சின்சியரா சொன்னோம்னா நம்ம கொடி ஃபிகர் மனசுல கொஞ்சம் கொஞ்சமா ஏறுங்கண்ணா!
5.   நிறைய ஃபிகருங்களுக்கு கோயிலுக்கு போறது ரொம்ப பிடிக்கும். பொதுவா ரொமான்ஸ் ஸ்டார்டிங்ல போறதுக்கு கோயில் ரொம்ப நல்ல இடம்..
ஓகே இதெல்லாம் பிடிக்காத ஃபிகர் கூட இருக்கலாம். ஆனா நைண்டி பர்சென்ட் இதுக்குள்ள வந்திடும்.... அடுத்த பகுதியில ஃபிகருங்க பல வகைப்படும் ... அது என்ன வகைங்கன்னு பார்ப்போம்...

( நல்லாத்தானே போயிட்டிருக்கு ..ஒரு ஓட்டக் குத்துங்க நண்பா! விளாட்டா இருந்தாலும் ஓட்டு விஷயத்துல அலர்டா இருப்போம்ல!)

ஃபிகர் மடக்குவது எப்படி?- 1

ஃபிகர் மடக்குவது எப்படி?மேட்டருக்கு வர்ரதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஃப்ளேஷ்பேக்...இந்த ஹீரோவெல்லாம் படத்துல நான் ஏன் தாதாவானேண் சொல்லுவாங்கள்ளே அந்த மாதிரி.......... ரவுண்டு ரவுண்டு ரவுண்டு...ஃப்ளாஷ்பேக் ஆரம்பம்...நம்ம சட்னி சாம்பார் எடிட்டர் இருக்காரே ... ஒவ்வொரு வார்த்தையிலயும் முள்ளு வக்கிறதுல கில்லாடி..தேமேன்னு அசின் படத்தப் போட்டுட்டு உக்காந்திருந்த என்னப் பாத்து"டேய்..நீ என்ன இப்பல்லாம் இந்த நடிகைகள் ஃபோட்டோ போட்டு கேலரி போடறதோட உக்காந்துக்கறே!... வந்து சேர்ந்தப்ப "நான் பெரிய ரைட்டர்.. ஆர்டிகிள் எல்லாம் எழுதுவேன்னு சொன்ன? இப்ப வெறும் கேலரி போட்டு ஓட்டுற ? இந்த நடிகைகள் படத்த யாரு வேணா எடுத்துப் போடலாம்...நீ எதுக்கு இங்க தண்டத்துக்கு?"

"அந்த படமெல்லாம் யாரு வேணா போட முடியாது...அதையெல்லாம் ஒரு கலா ரசனையோட செலக்ட் பண்ணி சரியான ஏங்கிள்ல போடணும்" என்று சொல்ல நினைத்தேன்.. ஆனா ஏற்கனவே பக்கத்திலிருந்த சப் எடிட்டர் ஷஹி "அந்த கேலரி போடும் ஜந்து நீ தானா?" என்பது போல் பார்க்க.. தலையைக் குனிந்து கொண்டேன்...

இரண்டு நாள் கழிச்சு நான் எடிட்டர் ரூமுக்கு அண்ணாமலையில் ரஜினி எம்.எல்.ஏ வீட்டுக்குள்ள என்ட்ரி ஆவதைப் போல என்ட்ரி கொடுத்தேன்..

சீரயஸா மன்மோகன் சிங் பத்தி தலையங்கம் எழுதிட்டிருந்த எடிட்டர் என்னப் பாத்தாரு..
"சார்..ஆர்டிக்கிள் எழுத சொன்னீங்களே..ஒரு தொடரே எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்!"
எடிட்டர் என்னை ஆச்சர்யமா பாத்தாரு... "என்ன டைட்டில்?"
சப் எடிட்டர் ஷஹி அன்னிக்கு லீவு என்பதை உறுதி செய்து கொண்டு நான் கொஞ்சம் தயங்கி தயங்கி பேரை சொன்னேன்..
டைட்டில் கேட்டதும் எடிட்டர் என்னை கேவலமாய் பார்த்தார்..
"இல்ல எடிட்டர் சார்.. இந்தக் காலத்துலயும் நிறைய பசங்க அவங்க ஃபீலிங்க்ஸை மனசுக்குள்ள வச்சிக்கிட்டே தவிக்கிறாங்க.. ஐஞ்சு பேரு பொண்ணுங்களோட கடல போடறான்னா அதப்பாத்து பத்து பேரு "அவனுக்கு மச்சம்டா"ந்னு பொருமறான்.. அதுவே அவனுக்கு அந்த வாய்ப்பு வந்தா என்ன பேசுறதுன்னே தெரியாம " டு யு லைக் ரஜினிகாந்த்?" னு சொதப்புறான்... அதனால பொண்ணுங்க மனச புரிஞ்சுக்கிட்டு அவங்களை எப்படி கவர் பண்றது? எப்படி அவங்க மனசுல இடம் பிடிக்கறதுன்னு ஒரு தொடர் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு ரொம்ப அவசியம்!"

நான் பட பட வெனப் பொரிய ...
"ஏதோ செஞ்சு தொலை!" என்று எடிட்டர் ஆசீர்வதிக்க..
ரவுண்டு ரவுண்டு ரவுண்டு.. ஃப்ளேஷ்பேக் முடிந்தது...

இதோ "ஃபிகர் மடக்குவது எப்படி?" தொடர் ஆரம்பம்...

ஹலோ ஆரம்பத்துலேயே சொல்லிட்டேன்...
பிசா ஹட்டுல கடல போட்டு டிஸ்கோதேவுல டேன்சப் போட்டு மஹாபலிபுரம் டேட்டிங் போற பார்டில்லாம் அப்படியே அப்பிட் ஆய்டுங்க.... இது பொண்ணுங்கன்னாலே ஷையா ஃபீல் பண்ற நல்ல பசங்களுக்கு.... ஓகே...

ஸ்டார்ட் ம்யூசிக்... பூ மிதிக்க அண்ணன் ரெடி.. இங்க பூசு... ஆ இங்க பூசு.....

( கண்ணுங்களா..ஏற்கனவே என்ன இங்க ஒப்புக்கு சப்பாணியாத்தான் வச்சிருக்காங்க நீங்கல்லாம் ஓட்டப் போட்டாத்தான் தொடர்ந்து ஃபிகரப் பத்தி எழுத வுடுவாங்க...)

ஹன்ஸிகாவுடன் 'ஆட்டத்தை'த் தொடங்கினார் உதயநிதி!

ஒரு கல் ஒரு கண்ணாடி (அதாவது ஓகே ஓகே) படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. 


பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் 'ஸ்டார் இயக்குநர்' அந்தஸ்தை எட்டிப் பிடித்துவிட்ட ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நாயனாக அறிமுகாகிறார் உதயநிதி ஸ்டாலின் என்பதும் அவருக்கு இணையான வேடத்தில் சந்தானம் நடிப்பதும் பழைய செய்தி.

இதுவரை இந்தப் படத்துக்காக தன்னை பிரமாதமாகத் தயார்ப்படுத்தி வந்த உதயநிதி, கடந்த வாரம் படப்பிடிப்பில் இறங்கிவிட்டார் என்பதும், எடுத்த எடுப்பிலேயே ஹீரோயின் ஹன்சிகா மோத்வானியுடன் காதல் காட்சிகளில் கலக்கிவிட்டார் என்பதும் புதிய செய்தி.

இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. மாதவப் பெருமாள் கோயிலில் நடந்த முதல் காட்சியில் நடித்தது உதயநிதியும் சந்தானமும். அடுத்தது, ஹன்ஸிகாவடனான காதல் காட்சிகள்.

எடுத்த எடுப்பிலேயே இயக்குநர் ராஜேஷ் மற்றும் ஹீரோயின் ஹன்ஸிகாவை அசத்திவிட்டாராம் உதயநிதி, தனது இயல்பான நடிப்பால்.

"அவர் நடித்ததைப் பார்த்தால் யாரும் முதல்பட ஹீரோ என்று நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். காமெடியில் சந்தானத்தையே மிரள வைக்கிறார் மனிதர்", என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் உதயநிதியை.

ஹீரோவாச்சே!!

Sunday, March 20, 2011

கிரைண்டர் அல்லது மிக்சி - தி.மு.க., : கிரைண்டர் + மிக்சி - அ.தி.மு.க., : சபாஷ் சரியான போட்டி

* வீடுதோறும் கிரைண்டரும், மிக்சியும் சேர்த்து தரப்படும்.

*
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தாலி இலவசம்.

* விதவைப் பெண்கள் அனைவருக்கும், இலவச தையல் மிஷின் வழங்கப்படும்
.

* அனைத்து குடும்பங்களுக்கும் இலவச மொபைல் போன் வழங்கப்படும்
.



* ஆறாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்.

* கூலித் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச சைக்கிள்.


* அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை.


*
அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக அரசின் சார்பில் கேபிள், "டிவி' இணைப்பு வழங்கப்படும்.

* குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும், 30 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.


*
குடும்ப அடடைதாரர்கள் அனைவருக்கும் மாதம் ஒரு லிட்டர் இலவச மண்ணெண்ணெய்.

*
அனைத்து சமுதாய மாணவ, மாணவியருக்கும் இலவச கல்வி உதவித்தொகை.

* மாணவ, மாணவியருக்கு தகுதி அடிப்படையில் இலவச, "லேப்-டாப்' வழங்கப்படும்
.

*
மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* அரசு மருத்துவ காப்பீட்டுத் தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க., வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையில், அதிகாரப்பூர்வமாக இவையெல்லாம் இடம்பெற உள்ளன.

புலிக்கு இறைச்சி ஊட்டிய 'ஜங்கிள் குயின்' அசின்!

அதென்னமோ தெரியவில்லை... முன்னணி நடிகைகள் எல்லாம் சமீப காலமாக காடு, புலிகள் என எக்கச்சக்க அட்வென்ச்சர் தேடித் திரிகிறார்கள்.

போனவாரம் த்ரிஷா நடுக்காட்டில் புலியுடன் தங்கியிருக்க ஆசைப்பட்டு ராஜஸ்தான் போயிருந்தார்.

இந்த வாரம் அசின் வாரம்... இவரும் புலியை விட்டுவைக்கவில்லை. ஒரு மிருகக்காட்சி சாலைக்குப் போய் புலி வாய்க்குள் கைவிட்டு இறைச்சியை ஊட்டி அசரடித்தாராம்.

இந்தியில் தயாராகும் ரெடி படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்கும் அசின், இதன் படப்பிடிப்பு  க்காக சமீபத்தில் தாய்லாந்து போயிருந்தார். அப்போது அங்குள்ள டைகர் டெம்பிள் பகுதியை சுற்றி பார்க்க சென்றுள்ளார் படப்பிடிப்புக் குழுவுடன். அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள புலிகளைப் பார்த்ததும் ஆர்வத்துடன் அருகில் சென்றாராம் அசின்.

தைரியமாக அருகில் போய் ஒரு புலிக் குட்டிக்கு உணவு ஊட்டினாராம். இதை பார்த்த படப்பிடிப்பு குழுவினர் பதறினார்கள். புலி வாய்க்குள் கை வைத்து உணவு ஊட்டியது பயமில்லையா? என்று அவரிடம் கேட்டபோது, "மனதில் தைரியம் இருந்தால் எந்த பயமும் நம்மை பயமுறுத்தாது. தைரியம் இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாதுட என்றார்.

இதையடுத்து அவருக்கு ஜங்கிள் கி ராணி (காட்டு ராணி) என்று செல்லமாக பட்டம் சூட்டினார்களாம் படக்குழுவினர்!