ஒரு குட்டிக்கதை...


ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த மீனவனொருவன். தன் தொழிலுக்காக வேண்டி அதிகாலையிலயே எழுந்து மீன் பிடிப்பதற்கு தேவையான வலை ஏனைய பொருள்கள் உணவு என்பவற்றை எடுத்துக்கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தான்.


கடற்கரைக்குச்சென்றதும் இருளாகவேயிருந்தது. அது கடலுக்குள் பணிக்க சரியான நேரமாக அவனுக்குப்படவில்லை சரி இன்னும் கொஞ்சம் நேரம் விடியும் வரை காத்திருப்போம் என்றென்னி கடற்கரையில் உட்கார்ந்திருந்தான்.. அப்போது ஒரு பை அவன் கண்ணில் படவே அதை எடுத்து கையை உள்ளே விட்டுப்பார்த்தான் அவை வெறும் கற்களாக தோன்றியது.


பொழுது போக்கிற்காக அதை ஒவ்வொன்றாக கடலில் வீசி எறிந்துகொண்டிருந்தான்.. அவ்வாறு வீசிக்கொண்டிருக்கையில் பொழுது புலப்படவே, அந்தப்பைக்குள் கடைசியாக ஒரு கல் மீதமிருந்தது அதையும் வீசிவிட வெளியே எடுக்கும் போது சூரிய ஒளியின் உதவியுடன் அது வெறும் கல்லல்ல மானிக்ககல்லாக அவன் கண்ணில்பட்டது... அடடா இவ்வளவு நேரமும் நான் கடலுக்குள் வீசி எறிந்த கல் எல்லாம் மானிக்க கல்லாக இருந்திருக்குமோ என்ற கவலை அவன் மனதை குடைந்தது..


இதன் மூலம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம்... 


யாரும் அதிகாலையிலேயே எழுந்திருக்ககூடாது.