பிரபுதேவா இயக்கும் படத்துக்காக, சிக்ஸ்பேக் முயற்சியில் இறங்கியிருக்கிறார் விவேக். இந்தி நடிகர்கள் எப்போது உடற்கட்டில் கவனம் செலுத்தி வருபவர்கள். சல்மான் கான், ஆமீர்கான் உட்பட பெரும்பாலான இந்தி நடிகர்கள் சிக்ஸ்பேக் உடற்கட்டில் இருக்கிறார்கள். தமிழில், ‘வாரணம் ஆயிரம்’ படத்துக்காக சூர்யா, ‘சத்யம்’ படத்துக்காக விஷால் சிக்ஸ்பேக் உடற்கட்டில் வந்தனர். ஹீரோக்களின் வழியில் காமெடி நடிகரான விவேக்கும் இப்போது ‘சிக்ஸ்பேக்’கில் இறங்கியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் ஜிம் மாஸ்டர் வேடம். இதனால், சிக்ஸ்பேக் உடற்கட்டில் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார் பிரபுதேவா. இதையடுத்து உடல் எடையை ஏற்றி, சிக்ஸ்பேக்குக்கு பயிற்சி செய்து வருகிறேன். கஷ்டமானதாகவே இருக்கிறது’ என்றார்