வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, January 21, 2011

கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்...



நகைச்சுவை:-

அசின்:-பதிவை படிக்கிற பையன் பாரேன்டி..
சிம்ரன்:- சூப்பரா இருக்கான்டி..
சினேகா:-அவன் என்னை பார்க்கத்தான் வருகிறான்..
நமிதா:-முதல்ல அவன் என் ஆளு தெரிஞ்சுக்கோங்க..
பாவனா:-அவன் என் மாமா பையன் தெரியுமா?..
பறவை முனியம்மா:-அடி சிறுக்கிங்களா,,அவன் என் புருஷன்டீ..
(சும்மா தமாசு..)

**********************************************************************************

ராமு:-டேய்,நாளைக்கு நான் சினிமாவுக்கு போரேன்..வர்ரியா?
சோமு:-முடிஞ்சா வரேன்டா..
ராமு:-முடிஞ்ச பிறகு ஏன்டா வர்ர..படம் ஆரம்பிக்கும் போதே வந்துவிடு..

**********************************************************************************

ஆசிரியர்:-மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மாணவன்:-மணலுக்கு சொரிந்து விட்டு நைசில் பவுடர் போட வேண்டும்..

*********************************************************************************

ஆசிரியர்:-'சூரியன் மேற்கே மறையும்'இது நிகழ்காலமா,எதிர்காலமா,கடந்தகாலமா?
மாணவன்:-அது 'சாயங்காலம்'
ஆசிரியர்:-????

**********************************************************************************

காற்றில் அவள் துப்பட்டா பறந்து வந்து என் மீது விழுந்தது..
எனக்கு பயங்கர சந்தோசம்..
சைக்கிள் துடைக்க துணி கிடைத்து விட்டது என்று..

**********************************************************************************

பசங்க மனசு மொபைல் மாதிரி..
பொண்ணுங்க மனசு தண்ணீர் மாதிரி..
தண்ணீர்ல மொபைல் விழுந்தாலும் மொபைல்ல தண்ணீத் விழ்ந்தாலும் ஆபத்து மொபைலுக்குத்தான்..

**********************************************************************************

காதலன்:-அன்பே..நான் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவுதான்!..
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்.

**********************************************************************************

பிரிந்த காதல் சேரும் போது 'கண்ணீர் மட்டும் பேசும்..
பிரிந்த நட்பு சேரும் போது 'பீர்,சிக்கன் பிரியாணி,குவாட்டர்,கூட பேசும்..

**********************************************************************************

ராமு:-பஸ் ஸ்டாப்ல நின்னு மேலையே பார்த்து கிட்டு இருக்கீங்களே என்ன விஷயம்?
சோமு:-மதுரைக்கு போகின்ற பஸ் மூன்று மணிக்கு மேல வரும் என்று சொன்னார்கள் அதான்..

**********************************************************************************
கவிதை:-

வெளியே வந்த பிறகு உள்ளே செல்ல முடியாது.
''கருவறை''
உள்ளே சென்ற பிறகு வெளியே வர முடியாது.
''கல்லறை''

**********************************************************************************

சத்தம் போடாமல் சாகின்ற உயிர் எது தெரியுமா?
''இதயம்''
நேசித்துப் பாருங்கள் தெரியும்..

*********************************************************************************

நெருப்பு மட்டும் அல்ல;
சிரிப்பும் காயப்படுத்தும்
காதலித்துப்பாருங்கள்..
தெரியும்..

**********************************************************************************
தத்துவம்:-

பசங்களுக்கு பிடிச்சது பொண்ணுங்களை கொஞ்சுவது,
பொண்ணுங்களுக்கு பிடிச்சது பசங்க கெஞ்சுவது:,

*********************************************************************************

காதலும் நட்பும் சந்தித்த போது காதல் கேட்டது:
நான் வந்துவிட்டபின் நீ எதற்கு என்று?
நட்பு சொன்னது:-நீ விட்டு சென்ற கண்ணீரை துடைக்க..

பராக் ஒபாமா

[untitled1.bmp]

[untitled.bmp]

                   

கடவுள்:என்ன வரம் வேண்டும் கேள்.
பையன்:எனக்கு ஒன்றும் வேண்டாம்.என் அம்மாவிற்கு மட்டும் ஒரு நல்ல அழகான பொண்ணு மருமகளா வரவேண்டும்.
கடவுள்:!!!!

மனைவி:எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க.
கணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்!!!

ஒசாமா பின்லேடனுக்கு ''பயம்'' என்றால் என்னவென்று தெரியாது.
ஏன்???
ஏன்னா பின்லேடனுக்கு தமிழ் தெரியாது.

நடிகர் பார்த்திபன்:என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
நடிகர் வடிவேலு:ஹலோ இது குரங்கு இல்லை.நாய்
நடிகர் பார்த்திபன்:நான் நாய்கிட்ட கேட்டேன்.
நடிகர் வடிவேலு:அப்ப சரி!!!

ஆசிரியர்:நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.
மாணவன்:ஏன் டீச்சர் 'இந்தியா'என்கிற பேர் நல்லா இல்லையா...
ஆசிரியர்:???????//

ப்யூட்டி பார்லர் முன்பு எழுதியிருந்த வாசகம்:
இங்கிருந்து வெளியே செல்லும் பெண்களைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள்!!
அவள் ஒரு வேளை உன் பாட்டீயாக கூட இருக்கலாம்!!!

பையன்:டிரஸ் சூப்பர்!
லேடி:தேங்ஸ்
பையன்:லிப்ஸ்டிக் சூப்பர்!
லேடி:தேங்ஸ்
பையன்:மேக்கப் சூப்பர்! வெரி நைஸ்!
லேடி:தேங்ஸ் டா
பையன்:அப்புறம் ஏன்டீ அசிங்கமா இருக்க?!!!!

பிளாஷ் நியூஸ்:சென்னை மெரினா பீச்ல மீன் சாப்பிட்ட 3 பேர் மண்டைய போட்டுட்டாங்களாம்.
அய்யோ அப்புறம்?
அப்புறம் என்ன அந்த மீன் மண்டைய நாய் தூக்கிட்டு போயிடுச்சு.

ஆப்பிள் அழுது கொண்டு இருக்கிறது
வாழைப்பழம்:ஏன் அழுகிறாய்?
ஆப்பிள்:எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!
வாழைப்பழம்:நீ பரவாயில்லை.என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!

சர்தார் 1:நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்
சர்தார் 2:போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??
சர்தார் 1:கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!

உறக்கமில்லாமல் சுத்துகிறேன்
நீ நிம்மதியாக உறங்குவாய் என்று
இப்படிக்கு
உஷா பேன்

விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள்.

யோசனை1: திருச்சி பிரஸ்மீட்டிங்கில் நான் கலந்துகொள்ளவே இல்லை. என்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு நபரை வைத்து குறிப்பிட்ட சிலர் செய்த சதி இது.அதேபோல் வில்லு என்ற திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை,அதுவும் போலிதான் என அறிக்கை ஒன்றைவிட்டால் ரசிகர்கள் உங்களை நம்பி விடுவார்கள்.


யோசனை2: இனிமேல் ரிலீஸாகும் உங்கள் படங்களுக்கு கதை என்று ஒன்று இருந்தால் அதை ஒரு பிட் நோட்டீஸில் பிரிண்டு செய்து தியேட்டர் வாசலில் படம் பார்க்க வருபவர்களுக்கு விநியோகிக்கலாம்.

யோசனை3: இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைச் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசா கார்” பரிசு என போட்டி வைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது

யோசனை4: டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் போது கூடவே ஒரு சாரிடான் மாத்திரை,ஒரு பிரஸர் மாத்திரை மற்றும் ஒரு வாட்டர் பாக்கெட் சேர்த்து ஒரு பையில் போட்டு, 3டி படங்களுக்கு டிக்கெட்டுடன் கண்ணாடி கொடுப்பது போல கொடுக்கலாம்.

யோசனை5: திரையரங்கில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் தனித்தனியே கைடுகளை(Guide) நியமித்து ஒவ்வொரு சீன் முடிந்த பின்னும் அதில் என்ன வந்தது என்பதை படம் பார்ப்பவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம்.

யோசனை6: திரையரங்க வாயிலில் ஆம்புலன்சுடன் கூடிய மருத்துவக்குழுவை தயார் நிலையில் வைத்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும் முதியவர்கள்,இதயபலகீனமுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சையளிக்கலாம். இப்படி செய்தால் அவ்ர்கள் இனி உங்கள் படத்திற்கு நம்பி வருவார்கள்.

யோசனை7: உங்கள் படங்களில் தற்போது காமெடி மிகக்குறைந்து, நீங்கள் சீரியஸாக பேசும் வசனங்கள் மற்றும் பஞ்ச் டைலாக்குகளுக்கு மக்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.அதனால் நல்ல காமெடி சீன் வைப்பது சிறந்தது.

யோசனை8: குறிப்பாக‌ நீங்கள் டாக்டர் பட்டம் வாங்கியதை காமெடி சீனாக படத்திலே வைத்தால் அதைப் பார்ப்பவர்கள் விழுந்து,விழுந்து சிரிப்பார்கள். அதுமட்டுமின்றி சிறந்த காமெடிக்கான பிலிம்பேர் அவார்ட்டையும் அந்த சீனுக்கு வாங்கிவிடலாம்

யோசனை9: டைட்டில் போடும் போது அதில் வரும் இளைய தளபதியை சிலர் தவறாக "இளைய தலைவலி" என படித்துவிடுகிறார்கள்.எனவே வேறு பட்டத்திற்கு முயற்சி செய்யலாம்.மசாலா புயல் பேரரசுவிடம் கன்ச‌ல்ட்செய்தால் அவர் நிச்சயம் ஐடியா கொடுப்பார்.

யோசனை10: குருவி,வில்லு போன்ற பேரடிகளை மறக்க கொஞ்ச நாளைக்குவடிவேலு குரூப்பில் சேர்ந்து சிங்கமுத்து,முத்துக்காளை ஆகியோரைப் போலகாமெடி வேடங்களில் நடிக்கலாம்.காமெடிக்காக நீங்கள் முயற்சி பண்ணவேண்டாம்நீங்கள் சாதாரணமாக நடித்தாலே மக்கள் சிரிப்பார்கள்.

யோசனை 11: உங்களைக் காமெடி செய்து வீடியோ வெளியிடும் அஜீத்ரசிகர்களுக்கு பதிலடியாக நீங்கள் உடனே ஒரு சாஃப்ட்வேர் குழுவைஅமைத்து பதிலுக்கு பதில் வீடியோ விடலாம்கவனமாக இருக்கவும் அந்தக்குழுவில் அஜீத் ரசிகர்கள் இருந்தால் உங்களைத் தாளித்துவிடுவார்கள்

பின்குறிப்புஇனிமேல் எந்த மாதிரி படங்களை ரீமேக் செய்யலாம்:
மகேஷ்பாபு போன்றவர்களின் தெலுங்கு படங்களை ரீமேக் செய்தால் இனிபோனியாகாது.



மலையாளத்தில் வெற்றி கண்ட ஷகிலா படங்களை ரீமேக் செய்துநடிக்கலாம்



எம்ஜியார் நடித்த “ரிக் ஷாக்காரன் படத்தை "திரிஷாக்காரன்" என்றபெயரில் ரீமேக் செய்யலாம்மெரினா பீச்சில் திரிஷாவோடு "கடலோரம் வாங்குனேன் காப்பு,வில்லுக்கு வச்சிட்டாய்ங்கே ஆப்புஎன அருமையான டூயட் போட்டு அசத்திவிடலாம்.



பழைய ராமராஜன் படங்களை ரீமேக் செய்து "எங்க ஊரு எருமக்காரன்"என்ற பெயரில்
நடிக்கலாம்.


அறிவிப்புஅன்பு நெஞ்சங்களேஇது வெறும் காமெடிக்கான பதிவுதானன்றி யார் மீதும் காண்டு காட்டும் பதிவு அல்ல.தயவு செய்து இதை வெறும் காமெடியாக மட்டுமே எடுத்துக்கொண்டு சிரித்துவிட்டு விட்டுவிடவும்..

இவை அனைத்தும் என்னுடைய இ-மெயிலில் வந்தவையே..

கலாட்டா



[image008.gif]

[image007.gif]

[image005.gif]


[image006.gif]

[image001.gif]










Monday, January 17, 2011

சிக்ஸ்பேக் முயற்சியில் விவேக்

பிரபுதேவா இயக்கும் படத்துக்காக, சிக்ஸ்பேக் முயற்சியில் இறங்கியிருக்கிறார் விவேக். இந்தி நடிகர்கள் எப்போது உடற்கட்டில் கவனம் செலுத்தி வருபவர்கள். சல்மான் கான், ஆமீர்கான் உட்பட பெரும்பாலான இந்தி நடிகர்கள் சிக்ஸ்பேக் உடற்கட்டில் இருக்கிறார்கள். தமிழில், ‘வாரணம் ஆயிரம்’ படத்துக்காக சூர்யா, ‘சத்யம்’ படத்துக்காக விஷால் சிக்ஸ்பேக் உடற்கட்டில் வந்தனர். ஹீரோக்களின் வழியில் காமெடி நடிகரான விவேக்கும் இப்போது ‘சிக்ஸ்பேக்’கில் இறங்கியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் ஜிம் மாஸ்டர் வேடம். இதனால், சிக்ஸ்பேக் உடற்கட்டில் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார் பிரபுதேவா. இதையடுத்து உடல் எடையை ஏற்றி, சிக்ஸ்பேக்குக்கு பயிற்சி செய்து வருகிறேன். கஷ்டமானதாகவே இருக்கிறது’ என்றார்

Sunday, January 16, 2011

சினேகாவுடன் போட்டோ எடுக்க ரூ.5 ஆயிரம்

ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தவர்கள் நடிகை சினேகாவுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அரங்கேறியது வேறு எங்குமல்ல…‌ போலியோ ஒழிப்புக்காக நிதி திரட்டும் ரோட்டரி கிளப் கருத்தரங்கம் ஒன்றில்தான்!
ரோட்டரி சங்கத்தின் பாண்டிச்சேரி மாவட்ட கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. இதில் போலியோ ஒழிப்புக்காக நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்த கருத்தரங்கில் நடிகை சினேகா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ‌போலியோவை ஒழிக்க என்னால் ஆன உதவியை செய்வேன் என்று கூறிய சினேகா, தன் பங்குக்கு ரூ. 15 ஆயிரத்தை ‌கொடுத்தார்.
அதன் பிறகு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலரும் போலியோ ஒழிப்பு நிதியில் தங்கள் பங்குக்கு ஐநூறு ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் வழங்கினார்கள்.
பின்னர் ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமான நன்கொடை வழங்கியவர்கள் மட்டும் மேடைக்கு அழைக்கப்பட்டு, சி‌னேகாவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
5 ஆயிரத்திற்கு குறைவாக நன்கொடை வழங்கியவர்களுக்கு சினேகாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது

Saturday, January 15, 2011

பெண் பாவம் பொல்லாதது: சபிக்கிறார் ரஞ்சிதா

சாமியார் நித்யானந்தாவுடன், நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த சம்பவத்திற்கு பிறகு தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வந்த நடிகை ரஞ்சிதா, இப்போது தலை காட்டத் துவங்கியுள்ளார். சமீபத்தில் சாமியார் நித்யானந்தாவின் பிறந்தநாள் விழாவில் குடும்பத்தோடு கலந்து கொண்டு அவரிடம் ஆசி பெற்றார். மேலும் சிடியில் இருப்பது தான் இல்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் ரஞ்சிதா அளித்துள்ள ‌பேட்டி ஒன்றில், தனக்கு எதிராக ஒரு பெரும் சதி நடைபெற்று வருவதாகவும், சிடியை வெளியிட்ட லெனின் தனி ஆள் இல்லை என்றும், அவருக்கு பின்னால் ஒரு பெரிய கூட்டமே இருப்பதாகவும் கூறியுள்ளார். அது யார் என்று கேட்டதற்கு, அவர்கள் பெயரை சொல்லலாம், ஆனால் கொஞ்ச காலம் நான் உயிரோடு இருக்க வேண்டும், என்னு‌டைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனக்கு முழுபாதுகாப்பு தருவதாக இருந்தால் அவர்கள் பெயரை நான் சொல்லுகிறேன். சும்மா இரண்டு, மூனு நாளைக்கு நாலு, போலீசை பாதுகாப்பு நிப்பாட்டி பின்னர் அவர்கள் சென்றுவிட்டால், அப்புறம் நான் நடுரோட்டில் தான் நிக்கனும்.
ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். சிலப்பதிகாரம், மகாபாரதம் என இரண்டு காவியங்களிலும், கெட்டவர்கள் அழிந்தது பெண்ணாலே. கண்ணகி, திரெளபதி ஆகியோர்களின் சாபத்தால் கெட்டவர்கள் அழிந்துபோனார்கள். அதுபோல என்னுடைய வயிற்றெரிச்சல் சும்மா விடாது. நான் வயிர் எரிஞ்சு சொல்றேன், என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அனைவரும் சீக்கிரத்தில் அழித்து போய்விடுவார்கள். அவரவர் பண்ண பாவம் அவர்களை நிச்சயம் அழிக்கும்.

கார்த்தியின் 'காதலிகள்'... இப்படியும் ஒரு பப்ளிசிட்டி



கொஞ்ச காலம் தமன்னாவும் கார்த்தியும் காதலிப்பதாக ஒரே பேச்சாக இருந்தது. மீடியாவும் மல்லுக்கட்டிக் கொண்டு அது தொடர்பான செய்திகளை வெளியிட்டு வந்தனர். 

பையா படம் வெளியான சமயம் என்பதாலும் அதன் பப்ளிசிட்டிக்கு இந்த கிசு கிசு 'ரொம்ப்ப்ப' உபயோகமாக இருந்ததாலும் சம்பந்தப்பட்ட எல்லோருமே மகிழ்ச்சியுடன் அந்த கிசுகிசுவை அனுமதித்தனர்.

இப்போது தமன்னாவுக்கு இந்த கிசுகிசுக்களிலிருந்து கட்டாய ஓய்வு கொடுத்துவிட்டனர். 'நான் மகான் அல்ல' என்ற படம் வெளியாகியுள்ளதல்லவா... இந்தப் படத்தில் நடித்த கார்த்தியும் காஜல்அகர்வாலும் காதலிப்பதாகசெய்திகள் பரப்பப்படுகின்றன.

நான் மகான் அல்ல படத்தில் நடிக்கும் போதே இருவருக்கும் காதல்  பத்திக்கிச்சு' என படக்குழுவைச் சேர்ந்தவர்களே திட்டமிட்டு கிசுகிசு பரப்புகிறார்களாம்.



இந்த ரெடிமேட் கிசுகிசுவுக்கு காஜல் அகர்வாலை விட்டு விளக்கம் வேறு கூற வைத்திருப்பதுதான் வேடிக்கை (அதிலும் புதிதாக ஒன்றுமில்லை.. வழக்கம்போல நாங்கள் நண்பர்கள் என்ற ரீதியில்தான்...):

"கார்த்தி நட்பாக பழகக் கூடியவர். படப்பிடிப்பில் நாங்கள் ஜாலியாக பேசிக்கொள்வோம். சீன்களில் எப்படி நடிக்க வேண்டும் என்றும் கருத்து பரிமாறிக்கொள்வோம்.

இதை வைத்து எங்களுக்குள் காதல் என்று கதை கட்டியுள்ளனர். நாங்கள் நல்ல நெருக்கமான நண்பர்கள்.

தெலுங்கு, தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்த வருகிறேன். இந்திப் படங்களில் நடிக்க அவசரம் காட்டமாட்டேன். கதைகளில் ரொம்ப கவனம் செலுத்துகிறேன். என் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கவே ஒப்புக்கொள்கிறேன்.

தமிழில் மூன்று படங்களில் நடித்துள்ளேன். தற்போது தமிழ் கற்று வருகிறேன். தெலுங்கில் 4 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்..."

விளம்பரத்துக்கு விளம்பரமுமாச்சு... பரபரப்பாக இருப்பதாகக் காட்டி வாய்ப்பு தேடிக் கொண்டதுமாச்சு!

இன்னும் யார் மீதும் காதல் வரவில்லை!-ப்ரியாமணி



நடிகைகள் காதல் பற்றி செய்தி வருவதும், அதை சம்பந்தப்பட்ட நடிகைகள் மறுப்பதும், பின்னர் ஒரு நாள் மாலையும் கழுத்துமாக நிற்பதும், அடுத்த சில மாதங்களில் அல்லது வருடங்களில் நீதிமன்றப் படி ஏறுவதும் தொன்று தொட்டு நடக்கிறது.

ப்ரியாமணி இப்போது இரண்டாம் கட்டத்தில் இருக்கிறார். அவரை ப்ருத்விராஜா, ஜெகபதிபாபு என நான்கைந்து ஹீரோக்களுடன் இணைத்து செய்திகள் வந்துவிட்டன. அவற்றில், ஜெகபதி பாபுவுடனான காதலை மட்டும் மறுத்து விளக்கம் அளித்து வருகிறார் ப்ரியாமணி.

தொடர்ந்து இருவரும் நான்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். விரைவில் இருவருக்கும் திருமணம் [^]என்றும் கூறப்படுவது பற்றி ப்ரியாமணி கூறுகையில், "எனக்கு திருமணம் என்றால் அதை பகிரங்கமாக சொல்வேன். நான் எதற்காக பயப்பட வேண்டும். ஆனால் உண்மையில் எனக்கு யார்மீதும் இன்னும் காதல் வரவில்லை. நெருங்கிய நட்பையெல்லாம் காதல் என்று எழுதுவதற்கு நானா பொறுப்பு. காதல் வந்தாலும் அது கல்யாணத்தில் முடிந்தாலும், நிச்சயம் அனைவருக்கும் சொல்வேன்!" என்றார்.

Friday, January 14, 2011

பொங்கல் படங்கள்… முன்பதிவு ஆரம்பம்!

பொங்கலுக்கு எத்தனை படங்கள் வருகின்றன என்பதில் இப்போதும் கூட குழப்ப நிலைதான் நீடிக்கிறது.

ஆனால் விஜய்யின் காவலன், தனுஷ் நடித்த ஆடுகளம், கலைஞரின் இளைஞன், சிறுத்தை போன்ற படங்கள் ரிலீஸ் உறுதி என்பதால் இப்போதே முன்பதிவு தொடங்கிவிட்டது.

இந்த படங்களில் விஜய்யின் காவலனுக்கு எதிராக பலமாக லாபி செய்யப்படுகிறது மீடியாவில். இந்தப் படத்துக்கு தியேட்டரே இல்லை என்று ஒரு பக்கம் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் சென்னை நகரில் முன்னணி காம்ப்ளக்ஸ்கள், ஒற்றைத் திரை அரங்குகள் அனைத்திலும் காவலன் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி 15 திரையரங்குகளில் காவலன் வெளியாகிறது. இன்று சென்னையில் காவலனுக்கு முன்பதிவு தொடங்கும் எனத் தெரிகிறது. பொங்கல் ரிலீஸிலேயே திரையரங்குகளில் முன்பதிவுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் விசாரிப்பது காவலனைத்தான் என்கிறார்கள் அபிராமி திரையரங்க நிர்வாகிகள்.

பொங்கலுக்கு வரும் இன்னொரு முக்கிய படம் ஆடுகளம். முடிந்த வரை நல்ல திரையரங்குகளைப் பிடித்துள்ளது படத்தை வெளியிடும் சன் பிக்ஸர்ஸ். நேற்றே புக்கிங் துவங்கிவிட்டது. ஆனால் பெரியாக ரசிகர்களிடம் வரவேற்பில்லை என்பதுதான் கவலை அளிப்பதாக உள்ளது சன்னுக்கு.

இளைஞன் படம் கிட்டத்தட்ட 400 திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் மிக நல்ல திரையரங்குகள் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் மூலம் ஓரளவு எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இப்போதைக்கு புக்கிங் பெரிதாக இல்லை. ஆனால் நம்பிக்கையுடன் உள்ளனர் தியேட்டர்காரர்கள்.

தெலுங்கு ரீமேக்கான சிறுத்தை படமும் முன்பே ரேஸில் குதித்துவிட்டது. இந்தப் படத்துக்கு இன்று முதல் புக்கிங் துவங்குகிறது. ஆனால் க்யூவில் காத்திருந்து வாங்கும் அளவுக்கு ரசிகர்களுக்கு ஆர்வம் இல்லை. காலை 10 மணிக்கு துவங்கிய புக்கிங்கில் சில டிக்கெட்டுகள்தான் விற்றன. ஒருவேளை இனி வரும் நாட்களில் நிலை மாறலாம் என்கிறார்கள்.

இந்தப் படங்களைத் தவிர சொல்லித் தரவா மற்றும் கருத்தகண்ணன் ரேக்ளா ரேஸ் என்ற டப்பிங் படமும் பொங்கலுக்கு வெளியாகிறது.


களத்தில் இறங்கிய விஜய் கைமாறிய காவலன்!

உஸ்... அப்பாடா என்று விஜய் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். நேற்று மாலை Kavalanசுமார் ஏழு மணியளவில் கூடிய முக்கியஸ்தர்களின் பேச்சு வார்த்தையை அடுத்து காவலன் பிரச்சனையில் பெருமளவு முன்னேற்றமாம்! "இது வெறும் படமல்ல. என் பிரஸ்டீஜ்" என்று கூறிவிட்டாராம் விஜய். "எப்பாடு பட்டாவது பொங்கலுக்கு வெளியிட்டு விட வேண்டும்" என்று பிடிவாதம் பிடித்தாரராம் அவர். விளைவு? அவரது சொந்தப்பணத்திலிருந்து சில 'சி' க்கள் காலி!

ஷக்தி சிதம்பரம் வாங்கி வெளியிட இருந்த இந்தப்படம் இப்போது முக்கியமான பைனான்சியர் ஒருவரின் கைகளிலும் மற்றும் விஜய்யின் கைகளுக்கும் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஷக்தி சிதம்பரம் கொடுத்திருந்த முன் பணத்தை திரும்ப கொடுத்துவிடலாம் என்றெல்லாம் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாம். பெருக்கல், கூட்டல், மைனஸ், பர்சன்டேஜ், என்று பெரும் கூச்சலோடு நடந்து முடிந்தது கூட்டம். ஆனால் விடை என்னவோ சுபம்!

இதற்கிடையில் எல்லா தியேட்டர்களுக்கும், தியேட்டர் அதிபர்கள் சங்கத்திலிருந்து ஒரு கடிதம் போயிருக்கிறது. விஜய் படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்று அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல... இதுதான் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் எச்சரிக்கை!

கூந்தலில் பூ வைக்கலேன்னாலும் பரவாயில்லை, பிளேடு வைக்காம இருந்தா போதும்!

அஜித் – விஜய்யின் அரசியல் டிஸ்கஷன்

சமீபத்தில் அஜித்தும் விஜய்யும் பின்னி மில் செட்டில் சந்தித்துக் கொண்டதாக செய்தி வெளியானதல்லவா… இந்த சந்திப்பு முன் கூட்டியே திட்டமிடப்பட்ட சந்திப்பு என்பதுதான் இதில் ஹைலைட்.

இந்த சந்திப்பின்போது தங்களின் அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் திட்டங்கள் குறித்துப் பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவாக இதுபோன்ற சந்திப்புகளின்போது நடந்ததை ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால் இந்த முறை இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்தும் கசிய விட்டுள்ளனர்.

விஜய்யின் காவலன் படத்துக்கு எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.

இந்த சந்திப்பின்போது, விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் அஜீத் பிரியாணி விருந்து அளித்துள்ளார். அவர்களுடன் படப்பிடிப்புக் குழுவினரும் விருந்தில் பங்கேற்றனர்


Monday, January 3, 2011

ஜார்ஜ் புஷ் - மன்மோகன் சிங்

ஜார்ஜ் புஷ்சை சந்திக்க அமெரிக்கா போறாரு மன்மோகன் சிங்...

புஷ்....... சிங்க கூப்ட்டு..என்கூட வா..எங்க நாட்டுல டெக்னாலஜி எவ்ளோ முன்னேறி இருக்குன்னு காண்பிக்கிறேன்னு, ஒரு காட்டுக்குள்ளே கூட்டிக்கிட்டு போறாரு..உள்ள போனப்புறம் சிங் கையில ஒரு மண்வெட்டியக் குடுத்து தோண்டுங்குறாரு புஷ்.

இன்னைக்கு நாந்தான் மாட்டுனேனா?...அப்டின்னு நெனச்சுட்டு

தோண்ட ஆரம்பிக்கிறாரு சிங்.ஒரு 50 அடி தோண்டுன ஒடனே கொஞ்சம் Wire, Antenna எல்லம் கெடக்குது..

உடனே புஷ் சொன்னாரு பார்த்தியா..எங்க நாட்டுல 200 வருசத்துக்கு முன்னாடியே டெக்னாலஜி இவ்வளவு டெவெலப் ஆயிருச்சு அப்டின்னாராம்..சிங்குக்கு அப்பவே கண்ண கெட்ட ஆரம்பிச்சுருச்சு..

ஒடனே வாய்யா எங்க நாட்டுக்குன்னு கையோட இழுத்துட்டு வந்து புஷ் கையில மண்வெட்டியக் குடுத்து தோண்டுங்குறாரு...

அவரும் தோண்டு தோண்டுன்னு....தோண்டுறாராம் தோண்டுறாராம் ஒண்ணுமே......சிக்கலியாம்...

கடுப்பாய்ட்டாரு புஷ்..என்னையா ஒண்ணுத்தையும் காணோம் அப்படின்னார்...

உடனே சிங் சொன்னாராம்............ ...நாங்கல்லாம் அப்பவே Wireless யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டோம்ல அப்படின்னு... .

தமிழ்த் திரையுலகம்

தமிழ்த் திரையுலகில் கோலாகலங்களுக்கு இணையாக கலாட்டாக்களுக்கும் பஞ்சமிருக்காது.

2010ல் பல முக்கியத் திருமண வைபவங்களை தமிழ்த் திரையுலகம் சந்தித்தது. அதேபோல சில கலாட்டாக் கல்யாணங்களையும் கண்டது.

2010ல் நடந்த திரையுலக திருமணத்திலேயே அதிகம் பேசப்பட்டது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யாவின் திருமணம்தான். அஸ்வினுக்கும், செளந்தர்யாவுக்கும் சென்னையில் படு கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் திரையுலகமே திரண்டு வந்து பங்கேற்றது. முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்.

அதேபோல திரையுலக கனவு தேவதை ரம்பாவின் திருமணமும் வெகுவாக பேசப்பட்டது. கனடாவைச் சேர்ந்த ஈழத் தமிழரான இந்திரனை மணந்தார் ரம்பா.

இதேபோல நடிகை நவ்யா நாயருக்கும், தொழிலதிபர் சந்தோஷ் மேனனுக்கும் திருமணம் நடந்தது. சிந்து மேனன், பிரபுவை மணந்தார். வெண்ணிலா கபடிக் குழு ஹீரோ விஷ்ணு, நடிகர்-இயக்குநர் நடராஜின் மகள் ரஜினியை மணந்தார்.

நடிகர் பாலா, கேரளத்து அமிர்தாவை மணந்தார். ஸ்ரீதேவிகாவுக்கும், ரோஹித் ராமச்சந்திரனுக்கும் திருமணம் நடந்தது.

இதுபோக சில கலாட்டா கல்யாணங்களையும் கண்டது திரையுலகம்.

தனது காதல் மனைவி லலிதா குமாரியை விவாகரத்து செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், அதே சூட்டோடு தான் காதலித்து வந்த போனி வர்மாவை இந்த ஆண்டு மணந்து கொண்டு புதுக் குடித்தனத்தை ஆரம்பித்தார்.

நீண்ட காலம் காதலித்து மணந்து கொண்ட நடிகை சோனியா அகர்வாலும், இயக்குநர் செல்வராகவனும் பிரிந்தனர். இதற்குப் பின்னர் புதிய காதலில் விழுந்தார் செல்வராகவன். அவர் சினிமாத் துறையைச் சாராதவர் என்று சமீபத்தில்தான் அவர் அறிவித்தார்.

தனது முதல் மனைவி பிரச்சினை செய்து வருவதாகவும், பெயரைக் கெடுக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினார் நடிகர் ராஜ்கிரண்.

நடிகை மீரா வாசுதேவனுக்கும், அவரது கணவர் விஷாலுக்கும் விவாகரத்து கிடைத்தது. இது கிடைத்த சூட்டோடு, மலையாள வில்லன் நடிகர் ஒருவருடன் காதலில் மூழ்கி விட்டார் மீரா.

முதல் மனைவிக்கு மாதாமாதம் ரூ. 15,000 ஜீவனாம்சம் தர வேண்டும் என்று இயக்குநர் பேரரசுவுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

ஒரு காலத்தில் காதல் இளவரசனாக இளம் பெண்களால் பார்க்கப்பட்டு, ரசிக்கப்பட்ட அரவிந்தசாமி தனது மனைவி காயத்ரியைப் பிரிந்தார்.

இந்த ஆண்டின் உச்சகட்ட பரபரப்பு பிரபுதேவா, நயனதாரா காதல்தான். இந்தக் காதலில் சிக்கித் தவித்தவர் மனைவி ரமலத். ஆனால் பிரபுதேவாவின் தொடர் நெருக்குதலை சமாளிக்க முடியாமல் அவரும் விவகாரத்துக்கு உடன்பட்டு விட்டார்.

2010ல் தமிழ் சினிமா பல நல்ல விஷயங்ளையும், அதே அளவிலான சோகங்கள், நெருக்கடிகள், குழப்பங்களையும் சந்தித்தது என்றால் மிகையில்லை

Saturday, January 1, 2011

மொபைல் ஜோக்ஸ்



1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....


2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...


3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.


4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா


5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....


11) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)


12) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..


13) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?


14) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?




16) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...


17) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?


18) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”


19) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?


* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++


20) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப்


போயிருமே...!

தமிழ் கடி தத்துவம்


1.கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்.... காவேரிஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா
ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா


2.திருவள்ளுவர் 1330 குரல் எழிதிருந்தாலும் , அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்



3."என்ன தான் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா ?"
மீன் பிடிகிரவண மீனவன்-ன்னு சொல்லலாம்.நாய் பிடிகிரவண நாயாவன்- ன்னு சொல்ல முடியுமா



4.தேள் கொட்டின வலிக்கும் .. பாம்பு கொட்டின வலிக்கும் . முடி கொட்டின வலிக்குமா



5.ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... Blood டெஸ்ட்ல
Bit அட்டிக முடியுமா



6.பொங்கலுக்கு Governmentla லீவு குடுபங்க ... அனா இட்லி தோசைக்கு குடுபன்களா ?



7.கோலம்மாவில் கோலம் போடலாம். கடலை மாவில் கடலை போடா முடிமா?

விஜய் காமெடி கலாட்டா

விஜய் காமெடி கலாட்டா





உயர்நடுத்தர வர்க்கத்து இந்தியர்களைப் பொறுத்தவரை சொர்க்கத்துக்கான டிக்கெட் எதுவென்று கேட்டால், அமெரிக்க 'H 1 B விசா' என்பார்கள் தயங்காமல். இந்திய எல்லைக்குள் அத்தனை கட்டுப்பெட்டித்தனங்களையும் பத்திரமாகக் காப்பாற்றி, அதை கீழிருப்பவன் தலையில் சுமத்திவிட்டு, அமெரிக்க முதலாளியிடம் சாசனத்தில் கையெழுத்திட்ட கையோடு, மெக்டொனால்ட், கெண்டுகி, கோக், டின் பீர், வார இறுதிகளில் குஜால் பார்ட்டி, வெக்கேஷனில் இந்தியப் பெண்ணோடு திருமணம், அமெரிக்காவில் டிவோர்ஸ் என 'சுதந்திர' லைப்ஸ்டைலுக்குத் தாவ (இவையெல்லாம் இந்தியாவி்லேயே கிடைப்பது வேறு விஷயம்... ஆனால் இங்கே 'பார்த்துவிடுவார்களே'!), கட்டாயத் தேவை இந்த H1B.

ஆனால் ஆச்சர்யம் பாருங்கள் பல இந்தியர்களின் கனவான இந்த H1B-ஐ இன்று வாங்க ஆளில்லாத நிலை! கிட்டத்தட்ட 11000 H1B விசாக்கள், வருடம் முடியும் இந்தத் தருவாயிலும் தேங்கி நிற்பது, அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பெரும் வியப்பைத் தந்துள்ளது. அவர்கள் அனுபவத்தில் இப்படி ஒரு தேக்கம் இதுவே முதல்முறை.

இதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஆண்டுக்கான H1B விசாவுக்கான கோட்டா 65000. கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது. 2009-ல் கூட டிசம்பர் 21-ம் தேதியே இந்த அளவை எட்டிவிட்டோம். ஆனால் இந்த ஆண்டு இன்னும் 11000 விசாக்கள் வாங்கப்படாமலேயே உள்ளது", எனத் தெரிவித்துள்ளது (இந்த விசாவுக்கான கட்டணம் எக்கச்சக்கம்...வருமானம் போய்விட்ட கவலை அவர்களுக்கு!).

உடனே, தாயகத்தின் மீது அத்தனைப் பாசமா நம்மவர்களுக்கு என யாரும் சிலாகித்துவிட வேண்டாம். இந்த விசாக்கள் தேங்கிக் கிடக்கக் காரணம், அமெரிக்கப் பொருளாதாரத்தின் பரிதாப நி்லைதான். இன்னும் அங்கே வேலை இழப்புகள் நின்றபாடில்லை. பொருளாதார வளர்ச்சி இப்போதும் 3 சதவீதத்தைத் தாண்டவில்லை. இதுவரை உலக போலீஸ்காரனாகத் திகழ்ந்த அமெரிக்கா, விக்கிலீக்ஸ் விவகாரத்தில் உலகின் வில்லனாகப் பார்க்கப்படுகிறது. வெளியில் சொல்லாவிட்டாலும், பல நாடுகள் அமெரிக்க உறவை அளவோடு பேண முயலும் நிலை... முக்கியமாக அமெரிக்காவில் சம்பளம் மிகவும் குறைந்துவிட்டதாம்! இத்தனையும் சேர்த்து, H1B விசாக்களைத் தேங்க வைத்திருக்கிறது. இன்றைய தேதிக்கு, அமெரிக்காவுக்கு ஒரு 'ஆல்டர்நேட்' இருக்குமா என தீவிரமாகத் தேடுகிறார்கள்