வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, December 29, 2010

இந்திய அணியின் ஓவ்வொரு ப்ளேயரும் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள்

ஷேவாக்:

எனக்குனு ஒரு நால் வரும் , அன்னிக்கி நா இந்தியாவ செயிக்க் வப்பேன் ,ஆனா என்ன.... அந்த நாளு வருசத்துக்கு மூனு இல்லைனா நாலு நா தான்ப வர்ருது...அதுக்குல்ல இருக்கிற கொஞ்சம் முடியும் கொட்டிரும் போல!!!.

சச்சின்:

எவன் ஜெயிக்கிறது பத்தி நென்கிறான்..நா எப்டியாவது 50 செஞ்சுரி அடிக்கிர வர டீமில இருக்னும் , ஆனா இந்த மெக்ராத் பையன் இருக்கானே..அவன் என்னை அடிக்க விடவே மாட்டிங்றான்..அவன் அங்கிட்டு இருந்து ஓடி வந்தாலே ..எனக்கு இங்கிட்டு ஒன்னுக்கு வந்துறுது.

டிராவிட்:

என் வேல அம்பது ..அதாங்க பிப்பிட்டி அடிக்கிரதோட முடிஞ்சது..அப்புறம் ரன் அவுட் ஆகிட வேண்டியது தான்..ஹி ஹி..!!

ரைனா:

என்னய டீமில இருந்து தூக்குற வரைக்கும் ஏதாவது அடிக்கனும்பா..கைக்கு நேரா பந்து வந்தா பொசுக்குனு விலுந்து பிடிக்கனும்..அப்புறம் கொஞ்சம் நேரம் அங்கேயே படுத்துறனும்..இவனுகளே ஸ்டெக்ச்சரு கொண்டுகினு வந்து தூக்கிட்டு போகிடுவானுகஅப்புறம் அங்கிட்டு போய் ஆப்பிள் ஜீஸ் குடிச்சிக்கினு நம்மாளுக தோக்குறது பாக்க வேண்டியது தான்..

தோனி:

நம்மலுக்கு இந்தியாவுக்காக ஆடனும் னு ஆசை..ஆனா பாருங்க எவ்வளவு நாலு தான் ஸ்டெம்ப் பின்னால இருந்து பந்தை கோட்டை விடுறது..சொல்லுங்க நீங்களே!!!

பதான்:

உங்ககிட்ட ஒரு ரகசியம் சொல்லுறேம்..உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..நானும் டீமுக்கு வந்த புதுசுல நல்லா தான் வொய்டு போட்டேன்..ஆனா இப்ப எப்படி பந்து போடுறதுன்னே மறந்து போச்சு..பத்து பதினஞ்சு விளம்பரத்தில நடிச்சுட்டு ..அப்புறம் ரிட்டயர்டு ஆகிட வேண்டிய தான்..உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

பட்டேல்:

ஆமாங்க நான் நல்லா பந்து போடுவேன்..ஆனா என்ன அந்த பேட்ஸ்மேனுக எல்லாம் செஞ்சுரி அடிக்க முடியாம இஞ்சுரி லா இருந்தா தான் நம்ம பப்பு வேகும்....இந்த கில்கிரிஸ்ட்டுக்கு எப்படி போட்டாலும் அடிக்கான்..அவன்லா ஒரு ப்ளேயரா..கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவன்...ச்ச்சி

ஹர்பஜன்:

நானு என் பத்து ஓவரா கரக்கிட்டா போடுறுவேன்..அதுல பாருங்கா இந்த பந்து சுத்தவே மாட்டிங்குது...அது சரி கும்ப்ளே போட்டப்ப மட்டும் என்ன சுத்திச்சாக்கும்!!!!

ஸ்ரீசாந்த்:

எப்போ பார்த்தாலும் பம்ப் அடிக்கிற மாரி ஆக்சன் பன்னிக்கினு ஓடி வந்து போட்டு கொஞ்ச நேரம் பேட்ஸ்மேன கெஞ்சினா(முறச்சா) போதும்..அவனே இரக்க பட்டு அவுட் ஆகிருவான்..அப்புறம் கு... ஆட்டிர வேண்டியதான்....


கங்குலி:

என் பேரு சவரவு ..நான் திரும்பி வருவேன்..அக்தரு பால்ல மண்டைல்ல அடி வாங்குவேன்...சட்டை பேண்ட்லாம் நடு கிரவுன்டுல கலட்டி போடுவேன்...கென்யா டீம ஜெயிப்பேன்..எனக்கு நம்பிக்கை இருக்கு..என் டீமு மண்ணை கவ்வும்..ஆஆஆ வூவூவூ இந்தியா..வூவூவூ ஆஆஆ இந்தியா..(பெப்புசி தான் காப்பாத்துது..ஹ்ம்ம்ம்)

Tuesday, December 28, 2010

Dr. Vijay சாப்ட்வேர் இஞ்சினியரானால்…

left

ண்ணா. நான் ஒரு தடவை கோட் பண்ணா, அதை நானே ரிவியூ பண்ண மாட்டேன்ணா.
நான் இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சி சாப்ட்வேர் இஞ்சினியரானவனில்லை,
 டுடேரியல் காலேஜ்ல படிச்சி ஆனவன்.

SW லைஃப் சைக்கிள் ஒரு வட்டம்டா. இன்னைக்கு நல்லா ஓடறது நாளைக்கு புட்டுக்கும்,
 இன்னைக்கு புட்டுக்கறது நாளைக்கு நட்டுக்கும்.

PM : என்ன விஜய் புது மாட்யூல்ல மாட்டிக்கிட்டியா?
வி : அந்த மாட்யூல், இந்த மாட்யூல், உங்க மாட்யூல், எங்க மாட்யூல் எல்லாத்துலயும் நான் கில்லிடா.

PM : பேசும் போது எல்லாம் கில்லியா பேசு, ஆனா கோடிங்ல மட்டும் ஜல்லியடி.

ஓட்டேரி நரி : விஜய், நம்ம பிராஜக்ட் UATல புட்டுக்கிச்சி

விஜய் : விடு. புரடக்‌ஷன்ல பாத்துக்கலாம்.

(இதை புரியாதவங்க கில்லி படம் இன்னொரு முறை பார்க்கவும் ;) )

நீ கோட் தேட மட்டும் தான் கூகுள் யூஸ் பண்ணுவ.
 நான் ஸ்பெல்லிங் செக் பண்ணவும், சினிமா விமர்சனம் தேடவும், 
ஹீரோயின் படம் தேடவும், வெப் சைட் தேடவும், நியூஸ் தேடவும், கேம்ஸ் தேடவும், 
சினிமா ரிலிஸ் தேடவும், கிரிக்கெட் இன்ஃபர்மேஷன் தேடவும், அரசியல் விஷயம் தேடவும்,
 சினிமா டவுன்லோட் லிங் தேடவும் கூகுள் யூஸ் பண்ணுவேன்டா.

நீ செக் பண்ணா மட்டும் தான் ப்ரோக்ராம் எர்ரர் கொடுக்குமா? ஏன், நாங்க எல்லாம் 
செக் பண்ணா எர்ரர் கொடுக்காதா? கொடுக்குமா கொடுக்காதா?
கொடுக்கும். நான் எழுதன ப்ரோக்ராம் யார் செக் பண்ணாலும் எர்ரர் கொடுக்கும்.

எவன் கோடிங் பண்ணா கம்ப்யூட்டர் வெடிச்சி பொறி கிளம்புறது 
கண்ணுக்கு தெரியுதோ அவன் தான் விஜய். நான் தான் விஜய்.

திமுகவில் சேர்ந்தால் தியேட்டர் கிடைக்குமா ? - என்ன கொடுமை சினேகா ?


திமுகவில் சேர்ந்தால் தியேட்டர் கிடைக்குமா? இப்படியோரு கேள்வியை தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் கேட்டு
வருகிறாராம் சினேகா. முதலில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் தனக்கென்று ஒரு நாற்காலியை உருவாக்கிக்கொள்ள நினைத்திருந்தார் சினேகா. ஆனால் அடுத்த முறையும் திமுகதான் ஆட்சிக்குக்கு வரும், திமுகவுக்கு வந்தீட்டிங்கன்னா, நீங்க தனி ஆவர்த்தனம் பண்ணப் போற படங்களுக்கு தியேட்டர் கிடைக்கும் என்று எக்குத்தப்பாக யாரோ அவருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள். இதைக் கேட்டு திமுகவில் சேர்ந்தால் என்னென்ன நண்மை தீமைகள் என்று சினேகா ஆய்வு பண்ணாத குறையாக கேட்டு வருகிறார் என்கிறார்கள்.
சினேகாவை இப்படி புலம்ப வைத்ததற்குக் காரணம், அவர் ஆக்‌ஷன் நாயகியாக அவதாரம் எடுத்திருக்கும், பாவாணி ஐ.பி.எஸ் படத்துக்கு இன்னும் சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் கைப்பிசைந்து கொண்டிருக்கிறார் இவரை ஆக்‌ஷன் நாயகியாக்கிய இயக்குனர் தயாரிப்பாளர் கிச்சா!. இதுவரை இப்படத்திற்காக ஏகப்பட்ட ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார். ஆனால் ஒரு முறை கூட சொன்ன தேதியில் படத்தை கொண்டு வர முடியவில்லை கிச்சாவால்.
இந்தப்படம் வெளிவந்தால் அடுத்து அர்ஜுனை வைத்து இயக்கி முடித்த மாசி படத்தை வெளியிடலாம் என்றால் அர்ஜுன் மார்கெட்டும் அவுட்! இந்ததுயரம் போதாதென்று கிச்சாவே நாயகனாக நடித்து ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம். அது இந்த இரண்டு படங்களும் வெளியாகி கலெக்‌ஷன் வந்தால்தான் இவரது கதாநாயகன் கனவு நிரைவேறும்! தேர்தலுக்கு முன்னாடி பவானி படத்துக்கு தியேட்டர் கொடுங்கப்பா. இல்லேன்னா சினேகா அரசியல்ல குதிக்கிறத யாராலயும் தடுக்க முடியாது.

யப்பா! இன்னொரு தங்கத் தலைவியா?.. தமிழ் நாடு தாங்காது சாமியோவ்..!

Sunday, December 26, 2010

எதிர்காலம் என்ன சொல்கிறது? இந்திய- சீன உறவு


இந்தியா, சீனாவுக்கு இடை யேயான இரண்டாயிரம் ஆண்டுக் கால உறவு தற்போது புதிய கோணத்தில் பரிணாமம் அடைந்து வருகிறது. அதை விளக்குவது தான் இக் கட்டுரை. இந்தியாவின் மென்பொருளையும், சீனாவின் வன்பொருளையும் (ஹார்ட்வேர்) இணைத்து நாம் உலக அரங்கில் செயல்பட்டால், நம்மை வேறு யாராலும் வெல்ல முடியாது'கடந்த 2005ல், இந்தியாவுக்கு வந்த சீனப் பிரதமர் ஷாவோ ஜியாங் சொன்ன வார்த்தைகள் இவை. பெங்களூருவில் உள்ள இன்போசிஸ் தலைமையகத்தில் அவர் உரை நிகழ்த்தினார் என்றாலும், இந்திய மென்பொருள், சீன வன்பொருள் என்றெல்லாம் அவர் குறிப்பிட்டது தகவல் தொழில்நுட்பத்திற்கு மட்டுமல்ல, இரு நாடுகள் சார்ந்த உலக அரசியலுக்கும் பொருந்தும்.ஐந்தாண்டுகள் கழிந்த பின், இந்த மாதம் இந்தியாவுக்கு வந்த சீனப் பிரதமர் வென் ஜியாபோ இதையே வேறுவிதமாக கூறியிருக்கிறார். இரு பிரதமர்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையாகட்டும், நமது வெளியுறவு செயலர் நிருபமா ராவின் பத்திரிகையாளர் சந்திப்பாகட்டும், இருநாட்டு உறவுகளை பிரச்னை அடிப்படையில் பார்க்காமல், புரிந்துணர்தல் மூலம் பார்க்க வேண்டும் என்பதை தான் தெளிவுபடுத்தியது.


மாறி வரும் மனநிலை : "ஊடகங்களின் நிலைப்பாட்டில் இருந்து இருநாட்டு உறவு குறித்து கொள்கைகளை வகுக்கும் எங்களது எண்ணவோட்டம் மாறி இருக்கிறது' என்று நிருபமா ராவ் குறிப்பிட்டார்.அதாவது, அரசின் மாறி வரும் மனப் போக்கை அறியாமலே, ஊடகங்கள் ஏனோ தானோ என்று இந்திய - சீன உறவு குறித்து, பழைய பல்லவியையே பாடி வருகிறது என்று அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.


காரணம் என்ன? நமது அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், ஏன் இலங்கை ஆகிய நாடுகளுடனான, கடந்த கால கசப்பான அனுபவங்கள் இன்னும் நமது நாட்டின் பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. அந்த நிகழ்வுகள் நடந்த காலத்தில் மத்திய அரசில் உயர் பதவிகளில் இருந்து கொள்கை வகுத்த பலரும் இன்று ஊடகங்களுக்கு "விஷய தானம்' செய்து வருகின்றனர்.அவர்களால் தங்கள் கால அனுபவங்களையும், நிகழ்வுகளையும் மறக்க முடிவதில்லை. அதில் இருந்து மாறுபட்டு சிந்திக்கவும் முடியவில்லை.இந்திய - சீன உறவின் தற்கால, தாற்காலிமான முட்டுக்கட்டை என்பது, 1962ல் நடந்த "சீன ஆக்கிரமிப்பு' காலகட்டத்தில் துவங்கியது.ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில் "இந்தி - சீனி பாய் பாய்' என்று சகோதர உறவு கொண்டாடப்பட்டது. அன்று சீனப் பிரதமராக இருந்த சூ என் லாய் உடன் அவர் கையெழுத்திட்ட 'பஞ்சசீலப் பிரகடனம்' 1950ல் நமது நாட்டு ஆரம்பப் பள்ளிகளிலும் பாடமாகவே இருந்தது.ஆனால், 1962ல் நடந்த "சீன ஆக்கிரமிப்பு' நமது நாட்டின் முதுகில் குத்திய செயலாகவே அமைந்தது. இப்போதும் அதுபோன்ற ஒரு சூழ்நிலைக்குள் சீனா, இந்தியாவை தள்ளுகிறதோ என்ற அறிவுஜீவிகள் சிலர் கருத்தையும், நாம் மறுக்க முடியாது.அதாவது, இந்திய - சீன உறவுகள் இன்னும் பல ஆண்டுகள் கவனத்துடன் கூடிய நல்லெண்ணம் என்ற பாதையிலேயே பயணித்து கொண்டிருக்கும். அதற்கு வேறு காரணங்களும் உள்ளன.எப்படி, இந்தியா சீனாவை தொடர்ந்து சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறதோ, அப்படியே சீனாவும் இந்திய - அமெரிக்க உறவுகளை காண்கிறது. இந்திய - அமெரிக்க உறவு வலுப்பெறுவதற்கு, தனது கடந்த கால செயல்பாடுகளே காரணிகள் என்பதையும் சீனா உணர்ந்துள்ளதாக எண்ண தோன்றுகிறது.அந்தக் காரணிகளை சீனா புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே, இருதரப்பு உறவுகள் உண்மையிலேயே மேம்படும்.


ஆறு காரணங்கள்: கடந்த பல ஆண்டுகளாக சீனாவுடனான உறவை வைத்து நோக்கும் போது, மேலும் ஒரு போருக்கான சாத்தியங்கள் இல்லை என்றே சொல்லலாம். முன்பு, 1962ல் நிகழ்ந்த போருக்கு எல்லைப் பிரச்னை காரணமாக இருந்தது. அப்போது, சீனாவிற்கு அந்நாளைய சோவியத் யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் எல்லைப் பிரச்னைகள் இருந்தன.அவற்றில் பலவற்றையும் சீனா, பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்தியாவுடனான எல்லைப் பேச்சுவார்த்தைகளை சீனா பின்னுக்கு தள்ளி வந்துள்ளது. பல ஆண்டுகளாக துவங்கப்படாமலே இருந்த பேச்சுவார்த்தைகளை, சீனா தற்போது ஆமை வேகத்தில் தான் நகர்த்தி வருகிறது.தற்போதைய சூழலில் இந்திய - சீன உறவுகள் மேம்பட்டு சீரடைய சில காரணங்கள் தடையாக உள்ளன. அவை சரியாக கையாளப்படவில்லை என்றால், அவையே எதிர்காலத்தில் இருநாடுகளுக்கிடையில் மீண்டும் ஒரு போர் துவங்குவதற்கான கட்டாயத்தை அல்லது வாய்ப்பை உருவாக்கிவிடக் கூடும்.


அந்த காரணங்களை, ஆறு விதமாக பிரிக்கலாம். அவை:
1. மாறி வரும் சர்வதேச சூழலில், சீனா தனது ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
2. சீனா - பாகிஸ்தான் இடையேயான உறவுகள்.
3. உலகளவில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையேயான "பனிப் போரின்' முடிவும், அதனால் மேம்பட்டு வரும் இந்திய - அமெரிக்க உறவு முறையும்.
4. இந்திய - சீன எல்லைப் பிரச்னை மற்றும் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பிரச்னை.
5. பவுத்த தலைவர் தலாய்லாமா காலத்திற்கு பின்னால், திபெத்தில் ஏற்பட கூடிய பிரச்னைகளும், அவற்றில் இந்தியாவின் பங்களிப்பும்.
6. இந்தியாவை சுற்றி சீனா ஏற்படுத்தி வருவதாக, மேல்நாட்டு பாதுகாப்பு அறிஞர்கள் கூறி வரும் "முத்துமாலை' வியூகம்.


என்றாலும், சீன மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பிரச்னைகளை மையமாக வைத்தே இருநாடுகளிடையேயான உறவுகள் முறிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.அந்த சமயத்தில், சீனா, எல்லைப் பிரச்னையை காரணம் காட்டி, இந்தியாவுடன் ஒரு "குறுகிய கால' போரை அரங்கேற்ற நினைக்கலாம். அப்போது, பாகிஸ்தான், இலங்கையில் அம்பந்தோட்டை மற்றும் கிழக்குப் பிராந்தியத்தில் மியான்மர் எனப்படும் பர்மா ஆகிய நாடுகளில் தனக்குள்ள தற்போதைய உரிமையைப் பயன்படுத்தி, இந்திய ராணுவத்தை ஆங்காங்கே முடக்க முயலலாம். இதுவே, சீனாவில் 'முத்துமாலை' வியூகத்தின் சாராம்சம்.இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, நமது மத்திய அரசு இலங்கை, நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை சீரமைத்து வருகிறது.என்றாலும், சீனா அளவுக்கு நம்மால், நமது அண்டை நாடுகளுக்கு பொருளாதார உதவிகளை வாரி வழங்கி விட முடியவில்லை.ஜனநாயக நாடான இந்தியாவில் சாலை இல்லாத ஊர்கள், மின்வசதி இல்லாத கிராமங்கள், கல்வி மற்றும் மருத்துவ வசதி கிடைக்காத மக்கள் இருக்கும் வரையிலும் இது சாத்தியமில்லை தான்.ஆனால் "கம்யூனிஸ்ட்' சீனா, தனது உள்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளைப் புறக்கணித்து விட்டு அந்நாட்டு அரசு, பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளின் வளர்ச்சி பணிகளுக்காக வாரி இறைக்கலாம், கேட்பாரில்லை.எனவே தான், இந்திய அரசு, பொருளாதார உதவிகளுக்கும் அப்பாற்பட்டு அரசியல் ரீதியான உறவுகளை மேம்படுத்தி வருகிறது.


எல்லை பிரச்னை:இந்திய - சீன உறவில் முக்கியப் பிரச்னை எல்லை தொடர்பானது தான். இதில் "மக்மோகன் எல்லைக் கோடு' எனப்படும் பகுதி குறித்து, 1800ம் காலகட்டத்திலேயே ஒரு முடிவு எட்டப்பட்டு விட்டது. அது அன்று, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், தங்களை மிரட்டி ஒப்புக் கொள்ள வைத்ததாக சீனா இன்றளவும் கூறி வருகிறது.
எது எப்படியோ, சீனா அந்த வரைவு ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்து இடவில்லை என்பதே உண்மை.இப்பிரச்னை, இந்தியா, சீனா மற்றும் திபெத் சம்பந்தப்பட்டது. ஆனால், மொத்தம் இரு நாடுகள் இடையேயான 3,800 கி.மீ., நீளமுள்ள எல்லைப் பகுதிகளில், 1,800 கி.மீ., பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியோடு சம்பந்தப்பட்டது.கடந்த 1971ல் நடந்த வங்கதேசப் போர் மற்றும் 1999ல் நடந்த கார்கில் போர் ஆகியவற்றில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடுநிலை வகித்த சீனா, தற்போது காஷ்மீர் பிரச்னைக்கு புதியதொரு கோணத்தை கொடுத்துள்ளது.கார்கில் போர் உச்சத்தில் அன்றைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பின் முஸ்தீபுகளுக்கும், முகஸ்துதிகளுக்கும் முகம் கொடுக்காத சீனாவின் தற்போதைய இந்த நிலைப்பாடு கவலை அளிக்கக் கூடிய ஒரு விஷயம் தான்.


காஷ்மீரில் சீனா : வாஜ்பாய் ஆட்சிக் காலம் துவங்கி, பரஸ்பர உறவுகளை சீர்படுத்தும் விதமாக, உயர் மட்ட அளவில் எல்லைப் பிரச்னை குறித்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளைத் துவக்கின.இருநாட்டுத் தலைமையில் மாற்றங்கள் ஏற்பட்ட போதும், சரியான பாதையிலேயே இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. இதில் இந்தியாவின் மேற்குப் பகுதியான லடாக் மற்றும் கிழக்கே அருணாச்சலப் பிரதேசம் ஆகியவை குறித்த சர்ச்சைகள் பற்றியே பேச்சுவார்த்தைகள் அமைந்தன.அதிலும், குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தின் மொத்தப் பரப்பளவான, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ச.கி.மீ.,பகுதியுமே, திபெத்தின் தென் பகுதி என்று சீனா கூறி வந்துள்ளது.என்றாலும், இக்காலகட்டத்தில் தான், 1975ல் இந்தியாவுடன் இணைந்த சிக்கிம் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை சீனா ஏற்றுக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக, சீன அரசு வெளியிடும் இந்தியாவின் வரைபடங்களில், சிக்கிம் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதியாகவும் காட்டப்பட்டது.எல்லைப் பிரச்னைகளுக்கு அப்பால், எல்லையை ஒட்டிய இருதரப்பு வர்த்தகமும், பல பத்தாண்டுகளுக்குப் பின் தான் துவங்கப்பட்டது. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 1950களில் துவங்கிய "திபெத், சீனாவின் ஒரு பகுதி' என்ற மந்திரத்தை இந்தியாவும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சொல்லி வந்திருக்கிறது.


அதுபோன்றே, தைவானையும் தன்னுடன் இணைக்க விரும்பும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் "ஒரே சீனா' என்ற நிலைப்பாட்டையும், இந்தியா தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளது.என்றாலும், தற்போது காஷ்மீர் பிரச்னையில் சீனா சுற்றி வளைத்து மூக்கை நுழைத்துள்ளது. இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையில், ஆயிரத்து 800 கி.மீ., பகுதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒட்டியிருக்கிறது.இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னையை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொண்ட பின், சீனா அந்தப் பகுதி குறித்த எல்லைப் பேச்சுவார்த்தையைத் துவக்கும்.அதாவது, பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்னையில் இந்தியா ஒரு சுமுகமான முடிவை எட்டினால் மட்டுமே, சீனாவுடனான எல்லைப் பிரச்னையைத் தீர்த்துக் கொண்டு, சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.ஏற்கனவே, தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான், சீனாவுக்குத் தாரைவார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.


அப்பகுதியில் தான் சீனா "காரகோரம்' நெடுஞ்சாலையை அமைத்து இந்தியாவிற்கு எதிரான தனது ராணுவ முஸ்தீபுகளுக்கு ஒரு புதுவழியும் ஏற்படுத்திக் கொண்டது.பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தை சீரமைப்பதற்கு தனது படைகளை சீனா இந்த வழித்தடம் மூலம் தான் அனுப்பி வைத்தது.ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்கப் படைகள், மறுபுறத்தில் சீனப் படைகள் என்ற அசாதாரண நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டாலும், அது இந்தியாவைப் பாதிக்கவில்லை என்பதே உண்மை.இதே காலகட்டத்தில், சீனாவிற்குச் செல்லும், காஷ்மீர் மக்களை இந்தியக் குடிமக்களாகக் கருதாமல் அவர்களது இந்திய பாஸ்போர்ட்டுகளில் தனியாக ஒரு பேப்பர் விசாவை சீனா வழங்கத் துவங்கியது.கடந்த காலங்களில் எப்போதும் இருந்திராத சீனாவின் இந்த நடவடிக்கை, இருநாட்டு உறவுகளிலும் ஒரு தெளிவின்மையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கும் ஒருபடி மேற்சென்று, காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை சீனா எடுத்துள்ளது.


இந்தியாவின் பதிலடி : இருதரப்புப் பிரச்னைகளில், பாகிஸ்தானை விட சீனாவிற்கு நாம் அதிக இடம் கொடுத்து விட்டோம் என்ற எண்ணம், நமது நாட்டிலேயே பாதுகாப்புத் துறை நோக்கர்களிடையே பரவலாக உள்ளது இதில் உண்மை இல்லாமல் இல்லை.கடந்த 1962ல் சீனாவின் ஆக்கிரமிப்பு என்பது மட்டுமல்ல, அதற்கும் அப்பாற்பட்டுள்ள சீனாவின் ராணுவ வலிமையை, நாம் குறைத்து மதிப்பிட முடியாது.அதுபோன்றே, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனா அடைந்துள்ள பொருளாதார வலிமையையும், அதனால் உலகரங்கில் அந்த நாடு பெற்றுள்ள அதிகப்படியான அரசியல் ஆளுமையையும் கூட, நமது அரசு உணர்ந்துள்ளது.அடுத்த நாடுகளுக்காக வாரி இறைக்கும் சீனப் பொருளாதார வலிமை மற்றும் ஐ.நா., சார்ந்த, சாராத அரசியல் ஆளுமை ஆகியவற்றின் காரணமாகவே, இந்தியாவின் அண்டை நாடுகள் பலவும், சீனாவுக்கு ஆதரவு அளிப்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.இதை கண்டு இந்தியாவும் சும்மா இருந்துவிடவில்லை.


பொருளாதார ரீதியாக நாமும், கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். இந்த வலிமையாலும் நாம் தற்போது ஏற்றுக் கொள்ளும் அரசியல் காரணங்களுக்காகவும், நமது அண்டை நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.தமிழர் பிரச்னைக்கு அப்பாற்பட்ட இந்திய - இலங்கை உறவுகளை இந்த விதத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல. சீனாவுக்கு காஷ்மீர் பிரச்னையும், பேப்பர் விசா பிரச்னையும் கை கொடுக்கிறது என்றால், நமது நாடு தைவான் பிரச்னையை தன் கையில் வைத்துள்ளது.சமீபத்தில், சீனப் பிரதமர் வென்ஜியாபோவும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "ஒரே சீனா' என்ற மந்திரத்தை உச்சரிக்க இந்தியா மறுத்து விட்டது.அதுபோன்றே திபெத் தலைவர் தலாய்லாமா, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் என்ற இடத்தில் உள்ள பவுத்த மத விகாரைக்கு சென்ற போது, சீனாவின் எதிர்ப்பை இந்தியா கண்டு கொள்ளவில்லை. பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் போது, டில்லியில் திபெத்தியர்கள் அதை எதிர்த்து நடத்திய போராட்டங்களுக்கும் இந்தியா அனுமதி அளித்தது. அதேவழியில், தற்போது ஜியாபோ வருகையின் போதும் திபெத்தியர்கள், நமது அரசின் அனுமதி பெற்று சீனாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டங்கள் வன்முறையாக மாறிவிடக் கூடாது என்பதில் தான் நமது அரசு கவனமாக இருந்தது.இந்தாண்டின் நோபல் சமாதான விருது, சீனாவில் சிறையில் வாடும் லியு ஷியாபோவுக்கு வழங்கப்பட்டது. அந்த விருது நிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. அதற்கு சீனாவின் காஷ்மீர் நிலைப்பாடும் ஒரு காரணம்.உலகம், தன்னை வல்லரசாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பும் சீனா, தனது விருப்பங்களுக்கு வலிமைமிக்க நாடாக மாறிவரும் இந்தியாவின் எதிர்ப்பை, உலகரங்கில் எதிர்நோக்க வேண்டியுள்ளது.


அடுத்து என்ன?அண்மை காலத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா, பொருளாதாரம், அரசியல், ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைகள் தொடர்பாக பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின் போது, இந்திய ஊடகங்கள் அளித்த வரவேற்பு அதிகளவில் இருந்தது. அதேநேரம், பின்னர் நடந்த சீனப் பிரதமர் ஜியாபோவின் வருகையின் போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளிலும், அலுவகங்களிலும் சி.பி.ஐ., நடத்திய அதிரடி சோதனை தான் ஊடகங்களில் அதிகமாக இடம் பெற்றது. இது துரதிர்ஷ்டமே.என்றாலும், இந்தியா, சீனாவுக்கிடையே பிரச்னை என்று வந்து விட்டால், அதை அரசியல் மற்றும் ராஜரீக வழிகள் மூலம் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க வல்லரசு நிச்சயமாக முயலும். இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் பாகிஸ்தான் கைகோர்த்து தன்னுடனான உறவை குறைத்து கொள்ளுமோ என்ற அமெரிக்காவின் பீதி, இதற்கு ஒரு காரணமாக அமையும்.தங்களுக்குள் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்த மூன்று நாடுகளுமே அணு ஆயுத நாடுகள். எனவே, எல்லைப் போர் அணு ஆயுதப் போராக மாறிவிடுமோ என்ற கவலை அமெரிக்கா உட்பட உலக நாடுகளுக்கு இல்லாமல் இல்லை.கொள்கை ரீதியாக இந்தியாவை அமெரிக்கா ஆதரிக்கும் என்று நாம் எதிர்பார்த்தாலும், சீனாவுடன் போர் என்று வந்துவிட்டால், அமெரிக்கா நடுநிலைமையே வகிக்கும்.


இதையும் நமது அரசு உணர்ந்தே உள்ளது.இந்தப் பின்னணியில் தான் முந்தைய சோவியத் யூனியன் போன்ற நட்பு நாடு நமக்கு தற்போது இல்லையே என்ற ஆதங்கம் நம்மிடையே தோன்றும்."வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்' என்று ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு. நமது நாட்டின் சீனா சார்ந்த அணுகுமுறையும், இந்தப் பழமொழியையொட்டியே அமைந்துள்ளது.அரசியல் - ராஜரீக வழியில் சீனாவை எதிர்கொண்டாலும், வல்லரசு நாடான அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வந்தாலும், சீனாவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டியே வந்திருக்கிறோம். சீனாவும் "எந்த அளவிற்கு இந்தியா இறங்கி வருகிறது' என்று கணிப்பதோடு நிறுத்தி கொண்டுள்ளது.அந்த விதத்தில் மேம்பட்டு வரும் இந்திய - சீன வர்த்தக உறவுகள், புதிய நூற்றாண்டில், இரு நாடுகளிடையேயான அரசியல் மற்றும் ராஜரீக உறவை மேம்படுத்த உதவும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.


கடந்த 1999ல் 16 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்த இருநாட்டு வர்த்தகம், தற்போது 60 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இந்தியாவின் பிற நாடுகளுடனான வர்த்தகத்தில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இருதரப்பு வர்த்தகமும் எதிர்வரும் 2015ல் 100 பில்லியன் டாலர் அளவை எட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், வென் ஜியாபோவும் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.இந்த வர்த்தக உறவு தற்போது சீனாவுக்கு சாதகமாக இருக்கிறது என்பதே உண்மை. இது தவிர இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகள், விவசாய விளைபொருட்கள் விஷயத்தில் சீனா பாரபட்சமாகவே நடக்கிறது.


என்றாலும், மாறி வரும் உலகப் பொருளாதார சூழலில் அமெரிக்கா உட்பட்ட மேற்கத்திய நாடுகளை விட, இந்தியாவே தனது சிறந்த வர்த்தக கூட்டாளியாகவும் தனது பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான முக்கிய தளமாகவும் அமையும் என்பதையும் சீனா உணர்ந்துள்ளது. அதற்கு இந்தியாவுடனான வர்த்தக உறவை பரஸ்பரம் நன்மை பயக்கும் விதத்தில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் அந்த நாடு மேலும் விரும்புகிறது."வரப்புயர நீர் உயரும்' என்பது போல, இருதரப்பு வர்த்தக பொருளாதார உறவுகள் மேம்படும் போது, இந்திய- சீன அரசியல் உறவுகளும் சீரடையும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அப்போது, பாகிஸ்தானைப் பிடித்துள்ள பயங்கரவாதம் என்ற நோய் தன்னையும் பாதிக்கிறது என்று சீனா ஏற்றுக் கொள்ளும்.அவ்வாறு நிகழுமானால் அதுவே இந்திய - சீன உறவுகளில் நமக்குக் கிடைக்கும் முதல் வெற்றியாக இருக்கும்.


(கட்டுரையாளர், டில்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் "அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன்' அமைப்பின் சென்னைப் பிரிவு இயக்குனர். இவர் பத்திரிகையாளர் மற்றும் அரசியல் நோக்கர் ஆவார். விமர்சனங்களை sathiyam54@hotmail.co என்ற முகவரிக்கு அனுப்பலாம்.)

ஓட்டுக்கு யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள்: ராமதாஸ்


ஓட்டுக்கு யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வன்னியர்கள் பா.ம.க.,விற்கு ஓட்டு போடுங்கள் என டாக்டர் ராமதாஸ் பேசினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் பா.ம.க., சார்பில் நடந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி கூட்டத்தில் அவர் பேசியதாவது:தீபாவளி, பொங்கல் வந்தால் டாஸ்மாக் கடையில் போன வருஷம் 100 கோடி விற்றது, இந்த ஆண்டு 150 கோடி விற்றது என்ற செய்தி வருகிறது. எந்த பண்டிகையாக இருந்தாலும் பண்டிகைக்கு மூன்று நாள் எல்லா மது கடைகளையும் மூட வேண்டும்.டாஸ்மாக் கடையை பார்க்கும் போது மதுகுடிப்பவன் சீக்கிரமாக இறந்து விடுவானே என வருந்துகிறேன். சிகரெட் பிடிப்பதையும், புகையிலை போடுவதையும் பார்க்கும்போது புற்று நோயால் இறந்து விடுவானே என வேதனைப்படுகிறேன்.அன்புமணி ராமதாஸ் 2008ம் ஆண்டு அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஒரு சட்டம் கொண்டு வந்தார். பொது இடத்தில் யாரும் புகை பிடிக்க கூடாது என்பது அந்த சட்டம். யாரும் நினைக்காததை ஒரே ஒரு ஜீவன், ஒரே ஒரு ஆத்மா அன்புமணி ராமதாஸ் தான் இதை நினைத்தார்.


இங்கே பள்ளி, கல்லூரியில் படிப்பவர்கள் அதிகம் வந்துள்ளீர்கள். நீங்கள் டாக்டர், கலெக்டர், இன்ஜினியர், எஸ்.பி., நீதிபதியாக வர வேண்டும். குறிப்பாக பெண்கள் வர வேண்டும் என நான் கனவு காண்கிறேன்.இதற்கு பா.ம.க., ஆட்சிக்கு வர வேண்டும். பா.ம.க., ஆட்சிக்கு வருவதற்கு வன்னியர்கள் ஒட்டு மொத்தமாக ஓட்டு போட வேண்டும். அப்படி போட்டால் 100 எம்.எல்.ஏ.,க்கள் ஜெயித்து விடலாம். இதன் பிறகு 17 எம்.எல்.ஏ., தேவை, அவர்கள் தானாக வருவார்கள்.இன்றைக்கு யார் கட்சி ஆரம்பித்தாலும் வன்னியரை கொடி பிடிக்க கூப்பிடுகின்றனர். இவர்கள் தான் இளிச்சவாயர்கள். இதை மாற்ற பாடுபட்டு வருகின்றேன். பா.ம.க., ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் இளைஞர்கள், இளம்பெண்கள் எப்போது மாம்பழத்திற்கு ஓட்டு போடுகின்றீர்களோ அப்போது பா.ம.க., ஆட்சிக்கு வரும்.


63 வருட சுதந்திர நாட்டில் வறுமை ஒழிந்திருக்க வேண்டும். ஆனால் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆனான், ஏழை மேலும் ஏழையானான்.முன்னேறிய மேல்தட்டு மக்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றனர். சுதந்திரம் பெற்றதும் இலவச கல்வி கொடுத்திருந்தால் எல்லோரும் படித்திருப்பார்கள். வன்னியர்களில் பஸ் ஓனர், நகைக்கடை, ஜவுளிக்கடை, சினிமா கொட்டகை, பெரிய லாட்ஜ், கல்லூரி உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள் யாரும் இல்லை.முட்டி கால் சேற்றில் மண்ணை கிளறி நாள் முழுவதும் நடவு நட்டு, களை எடுத்து, விளைந்ததும் அறுவடை செய்யும் மண்ணை கிளறுபவர்கள். நாம் மண்ணில் கை வைக்க வில்லை என்றால் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியாது. நாம் முன்னேற வில்லை. யார், யாரோ முன்னேறுகின்றார்கள்.


பொருளாதார ரீதியாகவும், சமூக நீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாம் முன்னேற வில்லை. அரசியல் ரீதியாக நாம் முன்னேற தமிழகத்தை ஆண்டால் தான் முடியயும். ஒட்டு மொத்த வன்னியர்களும் பா.ம.க.,விற்கு வர வேண்டும். வன்னியர்கள் ஓட்டு போட்டால் 100 பேர் ஜெயிக்கலாம். யார் பணம் கொடுத்தாலும் உனக்கு தான் ஓட்டு என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் ஓட்டை பா.ம.க.,விற்கு போட வேண்டும். அப்போது தான் அடுத்த தேர்தலில் வன்னியர்களை நம்ப கூடாது என அவர்கள் ராமதாஸ் பின்னால் தான் இருக்கின்றனர் என இருப்பார்கள். ஒரு லட்சம் ஓட்டு வாங்கி மயிலம் தொகுதியில் ஜெயிக்க வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்

Saturday, December 25, 2010

செவ்வடையான மசால்வடையே! - எல்லே ராம்


செவ்வடையான மசால் வடையே!’ என்று இப்போது நாம் ஆர்க்கெஸ்ட்ராவோடு பாட்டுப் பாடலாம், ஆர்ப்பரிக்கலாம், கோடிகளைச் செலவழித்துக் குனியமுத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடலாம். ஜனாதிபதி முதல் ஜால்ரா கவிஞர்கள் வரை நேரே வரச்சொல்லி ஆர்டர் போட்டு, மசால் வடை புகழ் பாடச் சொல்லி ஆனந்த ஏப்பம் விடலாம்.ஆனால் மசால் வடையின் செவ்வடை ஸ்டேட்டஸ் அவ்வளவு சுலபமாகப் பெறப்பட்டதல்ல!


ஆதிகாலத்திலிருந்தே பலப்பல தினுசு வடைகள் உலகெங்கும் மெயின் டிஷ்ஷாகவும், சைட் டிஷ்ஷாகவும் அசை போடப்பட்டு வந்தாலும், ’செவ்வடை அந்தஸ்து எந்த வடைக்கு?’ என்கிற கேள்வி மட்டும் பல டீக்கடைகளிலும், ‘பார்’களிலும் கேட்கப்பட்டுவந்த கேள்விதான்.

‘என்று தணியும் இந்த தயிர்வடை தாகம்? என்று மடியும் எங்கள் கீரைவடை மோகம்?’ என்று புரட்சி மகாகவி பாரதியாரையே புலம்பவைத்த மேட்டர் அல்லவா!

’செவ்வடையான மசால் வடை’க்குத்தான் எவ்வளவு எதிரிகள், எவ்வளவு அரசியல் உள்குத்துகள்?

இது பற்றிய நமது நிருபரின் கைப்பக்குவக் கிளறல்!

பாரெங்கும் ஆயிரக் கணக்கான வடைகள் இருந்தாலும், ஏன் இந்தியாவிலேயே பலாப்பழ வடையிலிருந்து, பம்பளிமாஸ் வடை வரை இருந்தாலும், தென்னகத்தில் புழங்கும், குறிப்பாகச் சென்னையில் மணக்கும் மசால் வடையே செவ்வடை அந்தஸ்துக்கு உரியது என்று இந்திய அரசும் அறிவித்திருக்கிறது. இதன் பின்னணி அரசியல் என்ன? ஆலூ வடை, தயிர் வடை, கீரை வடை, காலிஃப்ளவர் வடை, வெங்காய வடை போன்ற இந்திய வடைகளுக்குள்ளும் இந்த செவ்வடை ஸ்டேடசுக்குக் கடும் போட்டி. மற்ற எல்லா வடைகளையும் ஊசிப்போனவை, உப்பு போதவில்லை, ‘கப்’படிக்கிறது, காரம் போதவில்லை என்றெல்லாம் சொல்லித் துப்பி மசால் வடை மட்டுமே செவ்வடை ஏன்று வாய் கொள்ளாமல் எல்லோரையும் சொல்லவைத்தது எப்படி?

ஐக்கிய நாடுகள் சபை இது குறித்து வெளிபிட்ட குறிப்பொன்றில், ‘எவ்வடை செவ்வடை?’ என்பதையெல்லாம் இனிமேல் தீர்மானிக்க ஊசவடோ என்கிற ஜப்பானியர் ஒருவடை -மன்னிக்கவும், ஒருவரை- நியமித்திருக்கிறது என்பது தெரியவந்தது.

என்னடா இது மசால்வடைக்கு வந்த சோதனை, ஜப்பானுக்கும் மசால் வடைக்கும் என்னய்யா சம்பந்தம் என்றெல்லாம் கேட்டால் நாம் வடைத்துரோகி ஆகி விடுவோம் என்று பயமாகவும் இருக்கிறது. இருந்தாலும் அவரையே ஒரு முறை துணிந்து இதுபற்றிக் கேட்டுவிடுவோம் என்று அவரைத் தொலைபேசினேன்.

சம்பிரதாயமாக முதலில் ஏழெட்டு தடவை குனிந்து நிமிர்ந்து ’யூகோசோ இரஷாய் மாஷிடா’ என்று நாங்கள் வணக்கங்கள் சொல்லிக்கொண்ட பிறகு நான் முதுகுவலியுடன் என் சந்தேகத்தைக் கேட்டேன்:

”அறுவடைவீடுகொண்ட திருமுருகா’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு முருகன் ஆறு வடைகளை ஒரே நேரத்தில் எப்படி அபேஸ் செய்தார் என்கிற பிரமிப்பு வரும். நக்கீரரும் ஆறு வடைகளைப் பற்றித்தானே பொதுவில் புகழ்ந்திருக்கிறார், இதிலே மசால் வடைக்கு மட்டும் அப்படி என்ன தனி மகிமையை நீங்கள் கண்டீர்கள்? செவ்வடையாக மசால்வடையை மட்டும் எப்படி அங்கீகரித்தீர்கள்?”

ஊசவடோ ஒரு முறை ஜப்பானிய மொழியில் கனைத்துக் கொண்டார்.

”திருமுருகாற்றுவடையில் ஆறுவடைகளைப் பற்றிச் சொல்லி இருப்பதாகச் சொல்வதே முதலில் தவறு. 'ஆறு' என்றால் வழி; 'ஆற்றுப்படுத்துதல்' என்றால் 'வழிகாட்டுதல்'. 'ஆற்றுவடை' என்பது தமிழ்க் கவிதை வகைகளில் ஒன்று. ஒரு வள்ளலிடம் பரிசுகள் பல பெற்றுத் தன் வறுமை அழிந்த ஒருவன், வறுமையில் வாடும் இன்னொருவனை அந்த வள்ளல் இருக்கும் இடம், போகும் வழி, வள்ளலின் ஊர், பெயர், அவன் குணங்கள் யாவற்றையும் சொல்லி, "அங்கே போய் உன் வறுமையை நீக்கிக்கொள், பெரிய விருந்து இல்லாவிட்டாலும், வடையாவது கிடைக்கும்" என்று ஆற்றுப்படுத்துவது இப்பாடல் வகையின் இலக்கணம். திருமுருகாற்றுவடை என்ற நூலில் முருகன் இருக்கும் ஆறு தலங்களின் பெருமைகளைக் கூறி ஆத்மவடைக்கும் வழிகாட்டுகிறார் நூலாசிரியர் நக்கீரர்.

’ஆற்றுவடையில் சொல்லப்பட்ட ஆறு வீடுகள்’ என்ற வழக்கு மாறி, பின்பு படைவீடு, ஆறுபடை வீடு , ஆறு வடை வீடு என்று பேச்சு வழக்கிலும், நூல்களிலும் வரத் தொடங்கின என்பது தணிகைமணி செங்கல்வராய பிள்ளை போன்ற அறிஞர்களின் கருத்து. அருணகிரிநாதர் கூட 'ஆறுபடை வீடு' அல்லது ‘ஆறுவடை வீடு’ என்கிற சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல், 'ஆறு திருப்பதி' 'அறுபத நிலை' 'ஆறு நிலை' போன்ற சொற்றொடர்களையே பயன்படுத்தினார். குமரகுருபரர் கூட ஆறு வடை வீடு என்று சொல்லவில்லை. 'ஆறு திருப்பதி கண்டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே' என்கிறது கந்தர் கலிவெண்பா. குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். அதனால்... ஆறு படை வீடுகள் என்ற தொடர் கடந்த 400-ஆண்டுகளில் வந்த ஒரு சொற்றொடர் என்பது தெளிவாகிறது. ஆறுவடை என்கிற பதமே தற்காலப் புழக்கத்தில் இருக்கிறது”

இப்படிப் போட்டு சாத்து சாத்தென்று சுத்தத் தமிழில் சாத்தினால் நான் என்ன செய்வேன்? ’சயோனாரா’ கூடச் சொல்லாமல் லைனை உடனே கட் செய்துவிட்டேன்.

இந்த ஓட்டை வடை மேட்டர் இவ்வளவு சீரியஸான மேட்டர் என்பது தெரியாததால், வேறு யாரைக் கேட்டுத் தெளியலாம் என்று நான் யோசித்தேன்.

சுள்ளிக்காட்டுப் புலவர் ஒருவரை செல்போனில் பிடித்தேன்.

’எனக்கு டை பிடிக்கும், அடை பிடிக்கும், சொல்லடை பிடிக்கும், துடியிடை பிடிக்கும், நன்னடை பிடிக்கும், ஏன் எனக்கு செவ்வடையான மசால்வடையும் மிகப் பிடிக்கும்’

ஆஹா, யாப்பு, காப்பு, ஆப்பு என்று செமத்தியாக ஏதோ மாட்டிக்கொண்டேன் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

’என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக மசால்வடை செய்யுமாறே’ என்று திருமூலரே திருமந்திரத்தில் என் புகழைப் பற்றிச் சொல்லி விட்டார்’ என்று சொந்த சரக்கைப் பற்றி ஆரம்பித்தார் சுள்ளிக்காட்டார்.

திருமந்திரத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், அவர் அப்படியா சொன்னார் என்று நான் திரு திருவென்று விழிக்கையில் அவர் தொடர்ந்தார்:

”மசால்வடையை மட்டம் தட்டிப்பேசுவது ஆரிய, பார்ப்பன சூழ்ச்சி. அது பலிக்காமல் போனதால் இப்போது மசால்வடையும் கைபர் கணவாய் வழியாக இங்கே வந்ததுதான் என்று ‘சோ’ போன்றவர்கள் சொல்லி வருவது கண்டனத்திற்குரியது. மாஷாபூபம் என்கிற மொத்தை வடையைத்தான் சவுண்டி பிராமணர்கள் காலம் காலமாகச் சாப்பிட்டு ஊரையே நாறடித்து வந்தார்கள் என்பதற்கு சிலப்பதிகாரத்திலேயே குறிப்பு இருக்கிறது.

’நீலவிதானத்து நித்திலப் பூப்பந்தர்க்கீழ்
வான் ஊர் மதியம் சகடனைய வானத்துச்
சாலியொரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மசால்வடை காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பென்னை’
என்று சிலப்பதிகார நூல் கண்ணகி_கோவலன் திருமணச் சடங்கைக் கூறுகிறது. அங்கே நெருப்பிலே இடப்பட்டது மசால்வடையே அன்றித் தயிர் வடையல்ல, சாம்பார் வடையுமல்ல. சாம்பாரையோ, தயிரையோ நெருப்பிலே போட்டால் அது அணைந்து போய் துர்சகுனமாகும் என்பது பகுத்தறிவுத் தமிழருக்குத் தெரியாததல்ல. மசால்வடை நின்று திகுதிகுவென்று எரியும், கமகமவென்று மணக்கும். எலிப்பொறியில் மசால்வடை மணத்துக்காக எலி சிக்குவது போல் என் அன்பினால், காதலினால் உன்னைக் காலம் காலமாகச் சிறை வைக்கப் போகிறேன் என்று மணமகன் சொல்வதாக இங்கே அது குறிப்பினால் உணர்த்தப்படுகிறது.

இங்கே இன்னொரு கருத்தையும் நான் சொல்லிவிடக் கடமைப்பட்டிருப்பதை நினைவு கூர்கிறேன். ‘மாமுது பார்ப்பான்’ என்பது மகா கெழபோல்ட்டான அய்யரைக் குறிக்கும். ஏன் அழகான பிராமண இளைஞனை அங்கே சடங்கு செய்யச் சொல்லாமல் வயதான முதியவரைக் கூப்பிட்டிருக்கிறார்கள், அவன் மேல் ஏன் பெண் வீட்டாருக்கு நம்பிக்கை வரவில்லை என்கிற முக்கியமான விஷயத்தை நான் உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். இதற்கும் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா?’வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

‘மசால்வடை காட்டிட’ என்கிற வரிகளை உற்றுக் கவனியுங்கள். தீப ஆராதனை கூட அந்தக் காலத்தில் இருந்தது கிடையாது. கையில் மசால்வடையை வைத்துக்கொண்டு தீப ஆராதனை போல் மேலும் கீழும் ஆட்டி ஆட்டி, நெருப்பையும் சுற்றிச் சுற்றி வருவதே பழந்தமிழர் வழக்கம். பிறகு தான் அது தாலியாகப் பெண்ணின் கழுத்தில் ஏறும். இதை வடைத்தாலி என்றும் கூறுவர். சமீபத்திய பெரும் இதிகாசப் படமொன்றில் நான் இந்த ஐடியாவைச் சொல்லி, பெரிய இயக்குனர் ஒருவரும் இதை ஒரு பாடல் காட்சியில் சேர்த்திருக்கிறார். உசிரே போனாலும் இந்த மாதிரி உதிரிக் காட்சிகளின் உள்குத்தை நீங்கள் ரசிக்காமல் இருக்கக்கூடாதென்பதை இங்கே சொல்லிக் கொல்வதும் என் கடமை. எடிட்டிங்கில் இது கட் பண்ணியிருக்கப்படலாம்., அமிதாபுக்கெல்லாம் இது புரியாது.

சொல்லப்போனால் தங்கத்தில் தாலி கட்டுகின்ற சடங்கு கூட சிலப்பதிகாரத் தமிழரிடையே இருந்தது கிடையாது. தங்கத்தின் விலை கன்னாபின்னாவென்று பிற்காலத்தில் எகிறப்போகிறது, ஒரு கிராம் தங்கம் வாங்கக்கூடக் காசில்லாமல் தமிழன் சிங்கி அடிக்கப் போகிறான் என்பது சிலப்பதிகாரத்திலேயே உட்கருத்தாய்ப் பொதிந்திருக்கிறது. பிற்காலத் தமிழருக்கும் பொருந்தும் வகையில் மஞ்சள் மசால்வடையில் மஞ்சள் நூலைக்கட்டி அதை மணாளன் மங்கையின் கழுத்தில் கட்டி, மங்கையும் அதையே மணாளனும் முதல் மசால் வடையுமே தன் பாக்கியம் என்றெடுத்துக் கண்ணில் ஒத்திக்கொள்கிற வழக்கம், ஒரு கடி கடிக்கிற வழக்கம்தான் (மணாளனை அல்ல, மசால் வடையை) தமிழ்ப் பெண்களின் வழக்கம். அதை விடுத்துத் தமிழ்ப் பெண்களின் கற்புக்கே மாசு கற்பிக்கும் வழியில் வடநாட்டுப் பெண்கள் இங்கே வந்து மசால் வடையாவது மண்ணாங்கட்டியாவது, கல்யாணத்திற்கு முன்பே மசால்வடையை ஒரு வெட்டு வெட்டுவதில் தப்பில்லை என்று சொல்வது விந்தையிலும் விந்தை.”

சார், சார்! போதும், போதும். நீங்க எங்கேயோ கோவில் கட்டற ரேஞ்சுக்குப் போயிட்டீங்க. அப்படியே நிப்பாட்டிக்கறது தான் உங்களுக்கும் எனக்கும் நல்லது”

வெளிநாட்டுக் கிழாரும் சொல்லிவிட்டார், உள்நாட்டுத் தமிழ்ப் புலவரும் சொல்லிவிட்டார், இன்னும் ஒரே ஒரு அரசியல்வியாதியைவாவது கேட்டு விடலாம் என்று தெருமாவைப் பிடித்தேன் போனில்.


”நாம் அன்றாடம் கலந்தடிக்கும் சாம்பார் வடைக்கும் தயிர் வடைக்கும் கூட செவ்வடை அந்தஸ்து கிடையாதா, தெருமா? இது அடுக்குமா?”

”கிடையவே கிடையாது. சிங்களவனின் சதியால் மல்லுங், சம்போல், சொதி போன்ற சிங்கள ஐட்டங்களுக்கும் செவ்வடை அந்தஸ்து கொடுக்கவேண்டுமென்று அலைகிறது ஒரு ராஜபக்‌ஷய பட்டாளம். இந்த சதிக்கு ’ரா’ போன்ற நம் உளவு நிறுவனங்களும் துணை போவதே நம் கேவலத்தை, அவலத்தை, வெட்கக்கேட்டை சுட்டிக் காட்டுகிறது. நீண்ட தூர இந்திய ரயில் பயணங்களில் இந்த ஐட்டங்களை செவ்வடை என்று பொய் சொல்லி விற்பதற்கான ஒரு ஒப்பந்தம் இலங்கையுடன் போடப்பட்டிருக்கிறதென்பது எனக்கும் தெரியும். இரயில்களில் செவ்வடை தவிர வேறு எதையாவது யாராவது விற்க முனைந்தால் சும்மா இருக்காது எங்கள் ’செவ்வடை காப்புப் படை’. தண்டவாளத்தைப் பெயர்த்தெடுத்தாவது நாங்கள் இந்த சதியை முறியடிப்போம். ஆனால் அதற்கு முன்னாலேயே எங்கேயாவது துருப்பிடித்த தண்டவாளங்கள் உடைந்து நொறுங்கி விழுந்தால் அதற்கும் எங்கள் செவ்வடை காப்புப் படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நான் இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். என் தம்பி கோமானின் கருத்தும் இதேதான் என்று போட்டுக் கொள்ளுங்கள்”

இவ்வளவு பேரைக்கேட்டுவிட்டு சினிமாக்காரர்கள் யாரையும் கருத்து கேட்காமல் விட்டால் எப்படி?

”வெளிநாட்டுப் படப்பிடிப்பிலே நான் இருந்தாலும் உள்நாட்டு செவ்வடை விடயங்கள் எனக்குத் தெரியாமல் போகலாமென்று மனப்பால் குடித்தவர்கள் சற்றே மனங்குமுறிக் கமற நேரிடலாம். ஏனென்றால் கருப்புச் சட்டை போட்டாலும் நானும் செவ்வடைக்காரனே என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த லாபமும் இல்லையென்றாலும் அதைச் சொல்லாமல் விட்டுவிட்டால் பொருட்குற்றம் வந்துவிடுமோ என்று நான் பயப்படுவதாக யார் வேண்டுமானாலும் ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொள்ளட்டும். பரமக்குடி தமிழ்ப் பாட்டி சுட்ட வடையும் மசால்வடையேயன்றி மற்றேதுமில்லை. இது பற்றித் தென்னாப்பிரிக்காவிலே படமெடுக்க நான் ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்துக்கொண்டு கிரேக்க நாட்டு ஃபைனான்சுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதிலே நான் செவ்வடை மசால்வடையாகவே நடிப்பதாக வரும் செய்திகளின் உண்மைத்தொனியை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் ஊகத்திற்கே விடலாமா என்று நான் யோசிக்கிறேன்”

இத்தனை பிரபலங்களைப் பேட்டி கண்டபின், சு. சுவாமியைப் பேட்டி காணாவிட்டால் எப்படி இதெல்லாம் பூரணமாகும் என்று நான் யோசித்துக்கொண்டே இருக்கும்போது என் செல்பேசி ஒலித்தது.

“இந்த மசால் வடை - செவ்வடை மேட்டர்ல நீங்க யார் யாரைப் பேட்டி கண்டேள், அவா என்னென்ன சொன்னாள்ங்கறதெல்லாம் நேக்கு எஃப்பிஐ ரிப்போர்ட்ஸ் கொடுத்துட்டா. இன் ஃபேக்ட் நான் இப்ப சான் ஃப்ரான்சிஸ்கோவில தான் இருக்கேன். நீங்க என்னைக் கேட்கலைன்னாலும் நான் சொல்றேன் எழுதிக்குங்கோ. ஜூனியர் கக்கன்ஜி தெரியுமில்லியா, அவரும் இப்ப என் கூடத்தான் வந்திருக்கார். அவர் தான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர். அம்மாவும் ஓகேன்னு கொடநாட்லேர்ந்து சொல்லிட்டா.

இந்த செவ்வடை மேட்டர்லாம் சுத்த ஹம்பக். சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து பண்ற அட்டகாசம். ஒபாமாவே என்னை போன்ல கூப்பிட்டுச் சொல்லிட்டார். நான் வோர்ல்ட் கோர்ட்ல இது பத்திக் கம்ப்ளெய்ன் பண்ணி இருக்கேன். ‘தி ஹேக்’ல ஆர்க்யூ பண்ண டேட்ஸ் கொடுத்துட்டா. முப்பது பில்லியன் நஷ்ட ஈடு கேட்டு போபால் விக்டிம்சுக்குத் தந்துடுவேன்.

செவ்வடையாவது, வெங்காய அடையாவது? எல்லாமே சுத்தப் பேத்தல். ஓட்டையே இல்லாத மசால் வடையிலே எப்படிப்பா தாலியை கோர்ப்பாளாம்?

இன் ஃபேக்ட் இந்த வடைக்கெல்லாம் ஆதிமூலமே அமெரிக்காள் சாப்டற பேகிள் (Bagel) தான். மாவுல ஓட்டை இல்லாட்டா பேகிள். ஓட்டை போட்டுட்டா அது டோநட் (doughnut). எங்க டோநட்டையும் சேப்பு டோநட்டுன்னு சொல்லுங்கோன்னு அமெரிக்காள் பிடிவாதம் புடிக்றாளா, என்ன? நம்மளோட இட்லி, தோசை, வடை எல்லாமே ரொம்ப ஹெவி வாயுப் பண்டம். இதையெல்லாம் ரெகுலரா சாப்டா, ராக்கெட் இல்லாமலேயே நாம் சந்திரனுக்குப் போய்டலாம்னு யாரோ தமிழ்நாட்ல தப்புத்தப்பா சொல்லிக் கொடுத்திருக்கா.

ஒரு ரகஸ்யம் சொல்றேன். சசிகலா கிட்டே மட்டும் சொல்லிடாதீங்கோ. டோநட்லேருந்து தான் வடையே வந்துது.

நான் திரும்ப வந்து ‘முருகன் டோநட் கடை’ன்னு ஆரம்பிக்கப் போறேன். அவஸ்யம் திறப்பு விழாவுக்கு வந்துடுங்கோ!”

எனக்கு வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது. நானே லைனை கட் பண்ணி விட்டேன்.

இவ்வடை தோற்கின் எவ்வடை ஜெயிக்கும்?!


( நன்றி: இந்த வார கல்கி )


இதோ வடை என்று வந்திருக்கே என்று இந்த பதிவு :-)