Wednesday, March 12, 2014

 
1.நடிகனுக்கு பூசை செய்வதையும், கொடி பிடிப்பதையும் நிறுத்த வேண்டும்.

2.யோசிக்காமல் அறியாமையால், இலவசத்திற்காக மட்டும் ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டும்.

3.எதற்காக இதை படிக்கிறோம் என்று தெரியாமலேயே உயர் கல்வி கற்பதை நிறுத்த வேண்டும்.

4.நம் வசதிகளுக்காக,நம் தேவைகள் சுலபமாக நிறைவேற அரசாங்க அலுவலங்களில் ஐந்து, பத்து கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

5.படிப்பறிவு இல்லாதவர்களிடமும், இயலாதவர்களிடமும் நம் புலமையையும், வீரத்தையும் காட்டுவதை நிறுத்த வேண்டும்.

6.கேள்வி கேட்க வேண்டிய இடங்களில் கேட்காமல் இருப்பதை நிறுத்த வேண்டும்.

7.தாய் மொழி பேசுவது வெட்கம் என்றும், அடிப்படைக் கல்வியை தாய்மொழியில் கற்பது பயனற்றது என்றும் நினைப்பதை நிறுத்த வேண்டும்.

8.டாஸ்மார்k-ன் வருமானத்தை கோடிக்கணக்கில் உயர்த்துவதை நிறுத்த வேண்டும்.

9.பெண்களை சோப்பு சீப்பு பவுடர் விளம்பரங்களுக்க ு பயன்படுத்துவதை, சிகப்பு தான் அழாகான நிறம் என்ற முட்டாள் தனமான விளம்பரங்களை மக்களிடம் திணிப்பதை நிறுத்த வேண்டும்.

10.காதலுக்கு முதலில் முக்கியம் தனிமனித ஒழுக்கம். காசை தண்ணீராய் செலவழித்து காதலிப்பதை நிறுத்த வேண்டும்.

11.ஆணாதிக்கம், பெண்ணடிமை, பெண்ணுரிமை போன்ற வார்த்தைகளின் புரிதல் இல்லாமல் தொட்ட தொண்ணூறுக்கும் அவைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

12.ஆன்மிகத்தின் அர்த்தம் அறியாமல் அதை ஆயுதம் ஆக்குவதை நிறுத்த வேண்டும்.

13.கலாச்சார காவலர்கள் என்று பேர் வைத்துக் கொண்டு கலாச்சாரத்தை பாதுகாப்பது போலவே சீரழிப்பதை நிறுத்த வேண்டும்.

14.சினிமாவால் வாழ்க்கை பாதிக்க படாமல் இருக்க , முகநூலால் சுய முன்னேற்றம் முடங்காமல் இருக்க, எதற்குமே அடிமை ஆவதை நிறுத்த வேண்டும்.


#அவனை நிறுத்த சொல்லு , நான் நிறுத்தறன்னு சொல்லாம , நாம மாறினா இங்கு நிறையவே மாறும்.


Posted on 8:48 PM by சட்னி

No comments

Monday, March 10, 2014

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தயாநிதி- ஆ.ராசா மீண்டும் போட்டி- 27 பேர் புதுமுகங்கள்

லோக்சபா தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். இதில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக 35 தொகுதிக்கான வேட்பாளர்களின் பெயர்கள் விபரம்.... 

1. தென் சென்னை- டி.கே.எஸ்.இளங்கோவன்
2. மத்திய சென்னை- தயாநிதிமாறன் 
3. வட சென்னை- கிரிராஜன் 
4. ஸ்ரீபெரும்புதூர்- ஜெகத்ரட்சகன் 
5. கள்ளக்குறி்ச்சி- மணிமாறன் 
6. சேலம்- உமாராணி 
7. நாமக்கல்- காந்தி செல்வன்
8. ஆரணி- ஆர்.சிவானந்தம்
9. தருமபுரி- தாமரைச் செல்வன்
10. திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை
11. விழுப்புரம்- முத்தையன்

12. திருப்பூர்- செந்தில்நாதன்
13. நீலகிரி- ஆ.ராசா
14. கோவை- கணேஷ் குமார்
15. பொள்ளாச்சி- பொங்கலூர் பழனிச்சாமி
16. திருச்சி- அன்பழகன்
17. கரூர்- சின்னச்சாமி
18. கடலூர்- நந்தகோபால்
19. தஞ்சாவூர்- டி.ஆர்.பாலு
20. மதுரை- வேலுச்சாமி
21. தேனி- பொன்.முத்துராமலிங்கம்
22. விருதுநகர்- ரத்தினவேல்
23. ராமநாதபுரம்- முகமது ஜலீல்
24. ஈரோடு- பவித்திர வள்ளி
25. கன்னியாகுமரி- ராஜரத்னம்
26. காஞ்சிபுரம்- செல்வம்
27. பெரம்பலூர்- பிரபு
28. நாகப்பட்டினம்- ஏ.கே.விஜயன்
29. தூத்துக்குடி- ஜெகன்
30. அரக்கோணம்- என்.ஆர்.இளங்கோ
31. நெல்லை- தேவதாஸ்
32. திண்டுக்கல்- காந்திராஜன்
33. கிருஷ்ணகிரி- பில்லப்பா
34. சிவகங்கை- துரைராஜ்
35. புதுச்சேரி- நஜீம்

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தயாநிதி- ஆ.ராசா மீண்டும் போட்டி- 27 பேர் புதுமுகங்கள்

இவர்களில் 27 பேர் புதுமுகங்கள் ஆவர். இந்த வேட்பாளர்களில் 13 பேர் வழக்கறிஞர்கள், 3 பேர் டாக்டர்கள், ஒருவர் பொறியாளர், மற்றவர்கள் பட்டதாரிகள். ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர். எஸ். பாரதி அறிவிக்கப்பட்டுள்ளார்.


Posted on 9:20 PM by சட்னி

No comments

Tuesday, August 27, 2013

1) முதன்முதலில் உருவாக்கப்பட்ட கேமிராவில் போட்டோ எடுக்க எட்டுமணிநேரம் உட்கார்ந்தே இருக்கணுமாம்!!


2) வெங்காயம் நறுக்கும் போது சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.


3) மூளையிலிருந்து மற்ற இடங்களுக்கும் மற்ற இடங்களிலிருந்துமூளைக்கும் செல்லும் கட்டளைகள் சுமார் 274கி.மீ வேகத்தில் அனுப்படுகின்றன!.

4) ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவையின் பெயர் லேரி!!
டிவிட்டரின் டிபால்ட் புரொபைல் பிக்ச்சராக முட்டை இருக்கக் காரணம் நாமெல்லாம் ட்விட்டர் பறவையின் குஞ்சுகளாம்! நம்ம ஹோம் பேஜ் ஒரு குருவிக்கூடு!
5) உங்களுடைய உதட்டின் நீளமும் ஆள்காட்டி விரலின் நீளமும் கிட்டத்தட்ட ஒரே அளவுதான்! அளந்து பாருங்க சரியா இருந்தா லைக் பண்ணுங்க.

* சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன.

* மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள்உள்ளன.

* மண்புழு தோல்மூலம் சுவாசிக்கும்.

* தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களை பிரித்தறிய முடியும்.

* பூச்சி இனங்களில் தும்பியின் கண்கள் கூர்மையானவை.

* பட்டாம் பூச்சிக்கு நூரையீரல் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில்உள்ள `ஸ்பிராக்கிள்' என்னும் துளைகள் வழியாக சுவாசிக்கின்றன.

* ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் நத்தையில்காணப் படுகிறது. இதனால் அவை ஹெர்மப்ரோடைட்ஸ் என்று அழைக்கப்படுகிறத ு.

* யானையின்துதிக்க ை ஒரு லட்சம் தசைகளால் ஆனது. அதன் இதயம் நிமிடத்திற்கு 28 தடவை மட்டுமே துடிக்கின்றன.
* பூசணிக்கொடியின் வேர்கள் 2.4 கி.மீ. நீளம் வரை வளரும்.

* நத்தைக்கு 25 ஆயிரம் பற்கள் உண்டு.

* சாம்பிராணி ஒரு மரத்தின் பிசின் ஆகும்.

* அன்னாசிப் பழத்திற்கு விதைகள் கிடையாது.

* கரப்பான் பூச்சியின் இதயம் 13 அறைகளைக் கொண்டது.

* தேனீ நம்மைக் கொட்டியதுமே வலி ஏற்படக் காரணம் அது பார்மிக் என்னும் அமிலத்தை நம் உடம்பில் செலுத்துவதாகும் .

* தவளையின் இதயத்தில் மூன்று அறைகள் உள்ளன.

* ஈசலுக்கு ஜீரண உறுப்பு கிடையாது. அதனுடைய ஆயுட்காலம் ஒரே ஒரு நாள் மட்டுமே. 24 மணி நேரத்திற்கு மேல் அதனால் வாழ முடியாது.

* கறையான் வெப்பம் மிகுந்தநாடுகளில ் இருக்கும். ஆண்,பெண் கறையான், ஆணும் பெண்ணும்அல்லாத கறையான் என அவற்றில் மூன்று வகை உண்டு.
* வியர்வையை வெளியேற்றவே நாய்கள் நாக்கை தொங்க விடுகின்றன. ஏனெனில் நாய்களுக்கு மற்ற இடங்களில் வியர்வைச் சுரப்பிகள் இல்லை

* பச்சோந்தி அடிக்கடி தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் காற்றை நிறைய உள்ளிழுத்து சுய உருவை விட பல மடங்கு பருத்துக் காணப்படும். இதனுடைய நாக்கு மிகவும் நீளமானது. 10 அங்குலத்திற்கு அப்பால் உள்ள பூச்சியை ஒரேயொரு நொடியில் கவரக்கூடிய சக்தி படைத்தது. இவையெல்லாவற்றைய ும் விட மிகவும்வியப்பை ஏற்படுத்துவது பச்சோந்தியின் கண்கள்தான். ஒரு கண் நேரில் இருப்பதை உற்று நோக்க, மற்றொரு கண் பின்னால் இருப்பதை பார்க்கும். அற்புதமான அமைப்பை உடையது. உலகில் வேறு எந்த உயிரினத்திற்கும ் இந்த அமைப்பு கிடையாது.

* ஆஸ்திரேலியாவிற் கு அருகில் நவ்ரு என்னும் மிகச் சிறிய தீவு இருக்கிறது. இந்நாட்டின் மக்கள் எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை. வசிப்பதற்கு வீடு, உண்ண உணவு, உடுக்க உடை போன்ற அத்தியாவசியத் தேவை அனைத்தையும்அரசா ங்கமே கவனித்துக் கொள்கிறது. பாஸ்பேட் உரம் இயற்கையாகவே நவ்ரு நாட்டில் கிடைப்பதால் அதை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருமானத்தை ஈட்டுகிறது. வெளிநாட்டுக்குச ் செல்லவேண்டும் என்றால் கூட அரசாங்கமே எல்லாச் செலவுகளையும்ஏற் று குடிமக்களை அனுப்பி வைக்கிறது
.
* மத்திய தரைக் கடல் பகுதியில் தென் கிழக்கு பிரான்ஸ் எல்லையோரம் அமைந்துள்ள மிகச் சிறிய தீவு மோனாகோ. இது மொத்தமே அரை மைல் சதுர பரப்பளவு கொண்டதாகும். ஆனால் அளவை வைத்து இந்த தீவின் பொருளாதாரத்தை எடை போட்டு விட வேண்டாம். ஏனெனில் உலக கோடீஸ்வரர்களின் சொர்க்க புரியாக இந்த தீவு திகழ்கிறது. இங்கே ஒவ்வொரு கோடீஸ்வரரும் அவரவருக்குச் சொந்தமான ஆடம்பர, அலங்காரப் படகுகள் மூலம்தான் மதிக்கப்படுகிறா ர்கள். சுற்றுலாப் பயணிகளின் வரு மானத்தைக் கொண்டே இந்தத் தீவில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.

* சுவீடன் நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் அந்நாட்டு அரசாங்கம் தனித்தனி எண்களைக் கொடுத்துள்ளது. அரசு நிறுவனங்கள் அவர்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள எண்களைக் கொண்டுதான் குறிப்பிட்டு வருகிறது. ஆண்களுக்கு இரட்டைப் படை எண்களும், பெண் களுக்கு ஒற்றைப்படை எண்களையும் கொடுத்துவருகின் றனர். வெளிநாடுகளில் இருந்து வந்து சில காலம் தங்குவோருக்கும் கூட இது போன்ற எண்கள் கொண்ட அடையாள அட்டையை தருகிறார்கள். இதன் மூலம் ஒவ்வொருவரது தேவையும் நடவடிக்கையும் கவனிக்கப்படுகிற து.

* 60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர் அணிந்திருக்கும் (tie) டையின் நிறத்தை வைத்தே அவர் எந்த ஊர்க்காரர் என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடியும். பச்சைநிற டை கட்டியிருந்தால் அவர் பாஸ்டனைச் சேர்ந்தவர். சிவப்பு நிறம் என்றால் அவர் சிகாகோகாரர். இப்படி ஒவ்வொரு பெரிய நகரத்துவாசிகளும ் தங்க ளுக்கென்று விசேஷமாக டை தயாரித்துக் கொண்டார்கள். அதில் குறிப்பிட்ட கோடு நம்பர் களையும் குறிப்பிட்டு வைத்தார்கள். அப்போதுதான் நவீன டை அறிமுகமாகியிருந ்ததால் அதை இரவில் கூட பலர் கழற்றாமல் அணிந்து கொண்டே தூங்கினார்கள்.. ..

Posted on 11:19 PM by சட்னி

No comments


விஜய்யின் தலைவா படத்திற்கு கடைசி நேரத்தில் வரிவிலக்கு தரமுடியாது என்று கைவிரித்தது போன்று விஜய்யின் ஜில்லா படத்துக்கும் அதே நிலமை ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் தலைவா படத்தில் நிறைய ஆங்கிலச் சொற்கள் படத்தின் வசனத்தில் வருகின்றன என்று காரணம் காட்டித்தான் படத்திற்கு வரி விலக்கு தர முடியாது என்று சொல்லப்பட்டது. இதனால் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதிலும் பிரச்சினை ஏற்பட்டது. வரிவிலக்கு இல்லாவிட்டால் படத்தை மினிமம் கியாரன்டியில் படத்தை வாங்க முடியாது என்று கையை விரித்துவிட்டனர் திரையரங்கு உரிமையாளர்கள். அதைத் தொடர்ந்து ஒரு வழியாக தலைவா ரிலீஸ் ஆனது.

விஜய் இப்போது பிஸியாக ஜில்லா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சவுத்ரி தயாரிக்கும் ஜில்லா படத்தை நேசன் என்பவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். ஜில்லா படம் பொங்கல் அன்று ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்துக்கும் வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல் கிளம்பியுள்ளது. அரசு வரிச்சலுகைக்கு விண்ணப்பிக்கும் படங்களிளுக்கு தலைப்பு தமிழில் இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் ஜில்லா படத்தின் டைட்டில் வடமொழியில் உள்ளது. எனவே வரிச்சலுகை கிடைப்பது சந்தேகம் என்கிறார்கள் சிலர்.

தலைவாவுக்காக கடைசி நேரத்தில் என்னென்ன மாற்றம் எல்லாமோ செஞ்சாங்க, ஜில்லாவுக்கு வரிசலுகை இல்லைன்னா கடைசி நேரத்தில தலைப்பையும் மாற்றத் தயங்க மாட்டாங்க, அதுக்கு பேசாம இப்பவே மாத்திடுறது நல்லது…!

Posted on 10:51 PM by சட்னி

No comments

மூடிய அறைக்குள் 3 நாட்களாக ஒரு ஹீரோவையும், ஹீரோயினையும் அடைத்து வைத்து அவர்களுக்குள் கெமிஸ்ட்ரியை டெவலப் பண்ண டைம் கொடுத்து அப்புறம் ஷூட்டிங்கை வைத்துள்ளனர் பாலிவுட்டில். இந்த வித்தியாசமான டீலிங் நன்றாகவே கை கொடுத்ததாம்.. காரணம் படப்பிடிப்பின்போது ஹீரோவும், ஹீரோயினும் செம அன்னியோன்மாக நடித்துக் கொடுத்து அசத்தி விட்டனராம். சுத் தேசி ரொமான்ஸ் என்ற படத்திற்காகத்தான் இந்த ‘அலேக் போர்’….! பரினீதி சோப்ராதான் அந்த அழகான ஹீரோயின். அவர்தான் சுத் தேசி ரொமான்ஸ் படத்தில் காதல் காட்சிகளில் கலக்கியவர். அவருக்கு ஜோடியாக வருபவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். ஹேன்ட்சம் ஹீரோக்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள சுஷாந்த் காதல் காட்சிகளில் பரினீதியுடன் நன்கு இழைந்து இழைந்து நடித்துக் கொடுத்தாராம். தேரே மேரே பீச் மெய்ன் கியா ஹை என்ற பாடலுக்காகத்தான் இந்த 3 நாள் உள் வைப்பு அணுகுமுறையாம். இந்தப் பாட்டில் காதலும், கவர்ச்சியும், காமமும் நன்றாக வெளிப்பட வேண்டும் என்று விரும்பிய இயக்குநர் மனீஷ் சர்மா, ஹீரோவும், ஹீரோயினும் நன்கு அன்னியோன்யமாக பழக வேண்டு்ம் என்று நினைத்து 3 நாள் உள்ளேயே இருங்க என்று கூறினாராம். இதைக் கேட்ட பரீனிதியும், சுஷாந்த்தும் உடனே ஓ.கே. என்று சொல்லி விட்டார்களாம்.. பிறகென்ன ரெண்டு பேரையும் உள்ளே தள்ளி பூட்டி விட்டனர். 3 நாள் கழித்து வெளியே அழைத்து வரப்பட்ட இருவரையும் வைத்து அந்தப் பாட்டை படமாக்கினார்களாம். சும்மா சொல்லக் கூடாது.. பாட்டு படு சூப்பராக வந்திருக்காம்.. காரணம், இருவரின் நடிப்பும் அப்படி… ஆஹா..கெமிஸ்ட்ரிக்காகத்தானே அனுப்பினார்கள்.. கெமிஸ்ட்ரி மட்டும் தான் ஒர்கவுட் ஆனதா….. இல்லை…… 
 முடிவு 10 மாதத்தில் தெரியவரும் தானே..! 

Posted on 10:24 PM by சட்னி

No comments

Saturday, August 24, 2013

நம்ம எம்.பி.க்கள் சாப்பிடும் நாடாளுமன்ற கேண்டீன் விலை விபரம்!
***********************************************************டீயின் விலை ரூ1.00

சூப் விலை ரூ5.50

சப்பாத்தி ரூ.1.00

சாதம் ரூ.2.00

தோசை ரூ.4.00

பிரியாணி ரூ.8.00

சிக்கன் பிரியாணி ரூ.34.00

வெஜ் தாளி ரூ.12.50

நான்வெஜ் தாளி ரூ.22.00

தயிர் சாதம் ரூ.11.00

மீன் சாப்பாடு ரூ.13.00

மீன் வறுவல் ரூ. 17.00

சிக்கன் கறி ரூ.20.50

சிக்கன் மசாலா ரூ.24.50

பட்டர் சிக்கன் ரூ.37.00

Posted on 2:47 PM by சட்னி

No commentsலட்சம் கதை சொல்லும் ஒரு படம்..

Posted on 2:08 PM by சட்னி

No comments

1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.

3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.

4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.


5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.

6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.

7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.

8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.

9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.

10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.

# சுயநலமில்லாத,செயற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களுமே அழகு தான்.

Posted on 2:06 PM by சட்னி

No comments

asa

There was an error in this gadget